Doctor Verified

IVF சிகிச்சை தோல்வியடைந்த தம்பதியர்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லையா? - மருத்துவர் ரம்யா ராமலிங்கம் ஆலோசனை

IVF தொடர்பாக தம்பதிகளுக்கிடையே எழக்கூடிய பல்வேறு கேள்விகளுக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஜீவன் மித்ரா கருத்தரித்தல் மற்றும் பெண்கள் நல மையத்தின் தலைமை மருத்துவரான டாக்டர் ரம்யா ராமலிங்கத்தை தொடர்பு கொண்டோம். அவருடனான உரையாடல் இதோ...
  • SHARE
  • FOLLOW
IVF சிகிச்சை தோல்வியடைந்த தம்பதியர்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லையா? - மருத்துவர் ரம்யா ராமலிங்கம் ஆலோசனை


நவீன மருத்துவ உலகில் குழந்தையின்மைக்கு என ஏராளமான சிகிச்சைகள் வந்துவிட்டன. இருப்பினும், குழந்தையில்லாத தம்பதிகளுக்கு அதிக அளவில் வெற்றி விகிதத்தை வழங்கி வரும் நம்பகமான சிகிச்சையாக IVF உள்ளது.IVF தொடர்பாக தம்பதிகளுக்கிடையே எழக்கூடிய பல்வேறு கேள்விகளுக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஜீவன் மித்ரா கருத்தரித்தல் மற்றும் பெண்கள் நல மையத்தின் தலைமை மருத்துவரான டாக்டர் ரம்யா ராமலிங்கத்தை தொடர்பு கொண்டோம். அவருடனான உரையாடல் இதோ...

IVF சிகிச்சை என்றால் என்ன? இதற்கான முழு விளக்கம் கூறுங்கள் டாக்டர்,

IVF என்பது இன்-விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (In Vitro Fertilization). இயற்கையான முறையில் கருத்தரிப்பதில் சிரமம் உள்ள தம்பதியர்களுக்கு, பெண்ணின் கருமுட்டையையும், ஆணின் விந்தணுவையும் செயற்கையாக ஒரு ஆய்வகத்தில் Test Tube / dish-ல் இணைத்து மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை வளர வைத்து, நன்றாக வளரும் கருவை பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி, குழந்தையை பிரசவிக்க வைப்போம்.


குழந்தை இல்லாத நிறைய தம்பதிகளுக்கு இது வரப்பிரசாதம். குறிப்பாக இயற்கையான முறையில் கருத்தரிக்கவே முடியாது என்ற சிக்கலில் உள்ள நிறைய தம்பதிகளுக்கு IVF சிகிச்சை மூலமாக குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம். கருக்குழாய் அடைப்பு (Tubal Block), எண்டோமெட்ரியாசிஸ் (Endometriosis), விந்தணு குறைபாடு உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு IVF சிகிச்சை மூலமாக குழந்தைப்பேறு அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குறிப்பாக விந்தணு குறைபாடு அதிகம் உள்ள ஆண்களுக்கு, எவ்வளவோ சிகிச்சைகளை முயற்சித்தும் பலனில்லை என்றால், IVFல் உள்ள அட்வான்ஸ் சிகிச்சையான ICSI மூலமாக அவர்களுடைய சொந்த குழந்தையை உருவாக்க முடியும். இதேபோல் பல ஆண்டுகளாக குழந்தை இல்லை, ஆனால் அனைத்துவிதமான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகளையும் முயன்று பல தோல்விகளைச் சந்தித்த தம்பதிகளுக்கும்(Un explained Infertility)IVF சிகிச்சை குழந்தைப்பேறுக்கான அதிக வாய்ப்பை வழங்குகிறது.

 

 

 

IVF சிகிச்சை மூலமாக பெறப்படும் குழந்தை இயற்கையான முறையில் பிறந்தது தானா?

டெஸ்ட் டியூப் பேபி என்பதாலேயே, IVF சிகிச்சை செயற்கையானது என்கிற எண்ணம் முற்றிலும் தவறானது. IVF என்பது கருத்தரிக்க முடியாத தம்பதிகள், இயற்கையான முறையில் கருத்தரிக்க உதவக்கூடிய ஒரு சிகிச்சை. சம்பந்தப்பட்ட ஆணின் விந்தணுவையும், பெண்ணின் கருமுட்டையையும் ஆய்வகத்தில் வைத்து கருவை உருவாக்கினால் கூட, அது கருப்பையில் இணைந்து வளர வேண்டும்.

அந்த கருவை கர்ப்பப்பை ஏற்றுக் கொள்வதற்காகவும், அடுத்தடுத்து வளர்வதற்காகவும் மருத்துவர்கள் சில ஹார்மோன் ஊசிகள் மற்றும் மாத்திரைகளை பயன்படுத்தினாலும், அந்த கருவானது கர்ப்பப்பையில் பொருந்தி வளருவது என்பது முழுக்க, முழுக்க இயற்கையின் கையில் தான் உள்ளது. இந்த விஷயத்தில் இயற்கையை மீறி நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது.

 IVF சிகிச்சைக்கு தயாராகும் தம்பதி என்னென்ன மாதிரியான பரிசோதனைகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டும்?

IVF சிகிச்சையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக பெண்ணின் உடல் கருத்தரித்தலுக்கு தயாராக இருக்கிறதா என்பதை பரிசோதிப்போம். அதாவது சினைக்கருவை ஏற்றுக்கொள்ளும் தன்மையும், வளர்க்கும் தகுதியும் கருப்பைக்கு உள்ளதா என பரிசோதிப்போம். அதன்பின்னர் உடல் எடை, நீரிழிவு நோய், தைராய்டு, உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்படும். ஒருவேளை நீரிழிவு நோய் அல்லது தைராய்டு இருப்பது கண்டறியப்பட்டால், அதனை கட்டுப்படுத்தும் செயல்பாடுகள் தொடங்கப்பட்ட பின்னரே, ஐ.வி.எஃப். செய்யப்படும். ஆணிடம் விந்தணுவின் தரம், இயக்கம், அளவு சரியாக உள்ளதா? என பரிசோதிப்போம்.

girl-artificial-fertilization-eg

கருப்பையின் உள்பகுதி ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய ஹிஸ்ட்ரோஸ்கோபி பரிசோதனை செய்யப்படும். ஒருவேளை கருப்பையில் ஏதாவது சிறிய அளவிலான பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக அப்போதே சரி செய்யப்படும். அதேபோல் வாழ்க்கை முறை மாற்றம், ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம், மன அழுத்தமின்மை போன்றவற்றையும் ஐ.வி.எஃப் சிகிச்சைக்கு முன்னதாக கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

 

 

IVF சிகிச்சையின் வெற்றியளவு என்ன? அதனைத் தீர்மானிக்கும் காரணிகள் எவை?

IVF வெற்றி விகிதம் என்பது தம்பதிகளின் வயதைப் பொறுத்தது. 35 வயதைக் கடந்த பெண்களுக்கு IVF மூலம் கருத்தரித்தலுக்கான விகிதம் சற்று குறைய தொடங்குகிறது. அதுவே 35 வயதிற்கு முன்னதாகவே IVF சிகிச்சைக்கு முயலும் பெண்ணிடம் தரமான கருமுட்டைகள் உற்பத்தியாகும். இதனால் இவர்களுக்கான வெற்றி விகிதமும் அதிகரிக்கிறது. அதேபோல் ஆணின் விந்தணுவும் தரமானதாக இருந்தால் வெற்றி வாய்ப்பு மேலும் அதிகரிக்கும்.

maxresdefault (1)

IVF சிகிச்சையைப் பொறுத்தவரை நீங்கள் எந்த மாதிரியான IVF Centre அல்லது மருத்துவமனையைத் தேர்வு செய்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் பெண்ணிற்கு சரியான ஊசிகள் மூலம் தரமான சிகிச்சைகள் செய்து கருமுட்டையை வளர வைத்து எடுக்க வேண்டும். அதனுடன் தரமான விந்தணுவை சேர்த்து ஆய்வகத்தில் சினைக்கருவை உருவாக்க வேண்டும். இதற்கு தேவையான அத்தனை அதிநவீன வசதிகளும் நீங்கள் தேர்வு செய்யும் மருத்துவமனையில் இருக்க வேண்டும். அப்போதுதான் சினைக் கருக்கள் நல்ல தரத்துடன் உருவாகும். சரியான கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை மேற்கொண்டால் முதல் முறையிலேயே மகப்பேறு அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு: https://jeevanmithrafertilitycentre.com/

 

Image Source: Freepik 

Read Next

கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானதா.?

Disclaimer

குறிச்சொற்கள்