
இரவில் உறங்கும் போது சிலர் பற்களைக் கடிப்பார்கள், பலர் கோவம் வரும்போதும், பதற்றமாகும் போதும் சிலர் பற்களை கடிப்பதை பார்த்திருப்போம். ஆனால் இப்படி பற்களைக் கடிப்பது ஒரு கொடுமையான நோய் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பற்களை தொடர்ந்து கடிப்பதால் என்னென்ன பிரச்சனைகள் உருவாகும்?
தொடர்ந்து ரொம்ப காலத்திற்கு பற்களை கடித்துக் கொண்டே இருந்தால், பற்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று உரசி, அதனுடைய மேல் லேயர் தேய ஆரம்பிக்கும். இதனால் பற்கள் தட்டையாக மாறிடும், இது வெறுமன உங்களோட தோற்றத்தை மட்டும் அல்ல சாப்பிடுவதையும் பாதிக்கும். அதாவது பற்கள் தேயத் தேய சாப்பாட்டை நன்றாக கடித்தோ, மென்றோ சாப்பிட முடியாது. இது செரிமானம் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை உருவாக்கும்.
தினந்தோறும் பற்களை கடித்துக் கொண்டே இருந்தால், பற்களைச் சுற்றியுள்ள சாப்ட் லேயர் திசுக்கள் பாதிக்கப்படும். ஒருவேளை நீங்க இரவு முழுக்க தூக்கத்தில் பற்களைக் கடித்துக்கொண்டே இருந்தால், காலையில் தூங்கி எழுந்ததும் நாக்கு வீங்கி, சிவந்து, மிகுந்த வலியுடன் இருக்கும். முகம், கன்னம், தாடை, தலை பகுதிகளும் வீக்கம் மற்றும் வலி ஏற்படக்கூடும். அதுமட்டுமின்றி மிகுந்த சோர்வு ஏற்படக்கூடும்.
இப்படி தொடர்ந்து பற்களை கடித்துக்கொண்டே இருக்கிறவர்களுக்கு பற்கள் உடைந்து நொறுங்கவும் வாய்ப்பிருக்கு. பற்கள் தேயத்தேய, உள்ளே நரம்புகள் உள்ள திசுக்கள் வெளியே எக்ஸ்போஸ் ஆவதால் பற்களில் வலியும் கூச்சமும் வரலாம்.
தாடையைச் சுற்றியுள்ள டிஎம்ஜேங்கிற ஒரு இணைப்பு இருக்கு, பல்ல கடிக்கிற வழக்கத்தால இந்தப் பகுதி பாதிக்கப்பட்டு, வாயைத் திறக்குறதுல, மூடுறதுல சிரமம் ஏற்படும். தாடைக்கு பக்கவாட்டிலும், நெத்திக்கு மேலேயும் இருக்குற தசைகள் வீங்க ஆரம்பிக்கும். எச்சில் சுரப்பி வேலை செய்யுறதுலையும் பிரச்னை வரலாம். அதனால் வாய்ப்பகுதி வறண்டு, பல் சொத்தை வரவும் வாய்ப்பிருக்கு.
தூக்கத்தில் பற்களைக் கடிப்பதற்கான காரணங்கள் என்ன?
தூக்கத்தில் பற்களக் கடிக்கிறதுக்கு பல காரணங்கள் இருக்கு. ஸட்ரெஸ், பதற்றம், மன அழுத்தம் என மனரீதியான காரணங்களால் பாதிக்கப்படுறவங்களுக்கு இந்த பழக்கம் இருக்கும். தூக்கமின்மையால் பாதிக்கப்படுறவங்களும் இதைச் செய்வாங்க. ஓவரா காபி , டீ குடிக்கிறவங்க, மது மற்றும் புகைபிடித்தல் பழக்கம் உள்ளவங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கு. மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் மற்றும் ஆன்டிசைகோடிக்குகள் போன்ற மருந்துகள எடுத்துக்குறவங்களுக்கு இந்த அறிகுறிகள் "ஸ்லீப் ப்ரூக்ஸிசம்"அப்படின்னு அழைக்கப்படுது. மேலும், பார்கின்சன் மற்றும் ஹண்டிங்டன் போன்ற நரம்பு மண்டல நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் தூக்கத்தில் பற்களைக் கடிப்பார்கள்.
சிலருக்கு மூக்கின் உள்ளே உள்ள எலும்பு வளைந்திருப்பதால் மூச்சுக்குழாயின் அளவு சின்னதாக இருக்கலாம். அப்படி இருப்பவர்களுக்கு தூக்கத்தில் தொந்தரவுகள் ஏற்படும். `அப்ஸ்ட்ரக்ட்டிவ் ஸ்லீப் ஆப்னியா' (Obstructive sleep apnea) எனப்படும் இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு பற்களைக் கடிக்கும் பிரச்னையும் இருக்கும்.
பற்களை நறநறவென்று கடித்துக்கொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
மன அழுத்தத்தைக் குறைத்தல்:
மன அழுத்தம் பற்களை கடித்துக்கொள்ளும் பழக்கத்தை தூண்டலாம், எனவே யோகா, தியானம், மசாஜ் போன்ற மன அழுத்தத்தை போக்க உதவும் முறைகளை கடைபிடிக்கலாம்.
தூக்க முறையை மேம்படுத்துதல்:
தூங்கும் முன் மொபைல், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்துவதைத் தவிர்த்து, நல்ல தூக்கத்திற்குத் தேவையான சூழலை உருவாக்கவும்.
பல் மருத்துவரை அணுகுதல்:
பற்களை கடித்துக்கொள்ளும் பழக்கம் இருந்தால், பல் மருத்துவரை அணுகி, இதற்கான தீர்வுகளைப் பெறலாம்.
பல் துலக்கும் முறையை மாற்றுதல்:
அதிகப்படியான பல் துலக்குதல் பற்களின் உணர்திறனை அதிகமாக்கி, பற்களை கடித்துக்கொள்ளும் பழக்கத்தை தூண்டும், எனவே பல் துலக்கும் முறையை மாற்றி, மெதுவாக துலக்க பழக்கிக்கொள்ளவும்.
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்த்தல்:
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவது பற்களை கடித்துக்கொள்ளும் பழக்கத்தை தூண்டலாம், எனவே இவற்றைத் தவிர்க்கவும்.
தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்:
உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
அமிலத்தன்மையுள்ள உணவுகள், பானங்களைத் தவிர்த்தல்:
அமிலத்தன்மையுள்ள உணவுகள், பானங்கள் பற்களை கடித்துக்கொள்ளும் பழக்கத்தை தூண்டலாம், எனவே இவற்றைத் தவிர்க்கவும்.
Read Next
Sweating While Eating: உங்களுக்கு சாப்பிடும்போது வியர்க்கிறதா? இதற்கு என்ன காரணம் தெரியுமா?
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version