
பருக்கள் என்பது இளைஞர்களுக்கே சொந்தமான பிரச்சனை என்ற தவறான நம்பிக்கை இன்னும் பலரிடம் உள்ளது. ஆனால் 20, 30, 40 வயதிலும் பெரியவர்கள் பருக்கள் காரணமாக அவதிப்படுவது சாதாரணமே. மனஅழுத்தம், ஹார்மோன் மாற்றம், தவறான ஸ்கின்கேர், மாசு, சரியான தூக்கம் இல்லாமை உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கின்றன.
முக்கியமான குறிப்புகள்:-
இதிலே மிக அதிகம் கேட்கப்படும் கேள்வி - “பால் பொருட்கள் பெரியவர்களின் பருக்களை அதிகப்படுத்துமா?” இந்த கேள்விக்கு தெளிவான பதிலை பெற நிபுணர் டாக்டர் ரஷ்மி ஸ்ரீராம் (Dermatologist, Fortis Hospital, Bengaluru) வழங்கிய தகவல்கள் இங்கே.
பால் பொருட்கள் உடலை எப்படி பாதிக்கிறது?
பால், சீஸ், பட்டர், தயிர் போன்ற பால் பொருட்களில் androgens மற்றும் IGF-1 போன்ற ஹார்மோன்கள் உள்ளன. டாக்டர் ரஷ்மி கூறுவதாவது, “IGF-1 அளவு அதிகமானால், sebum (தோல் எண்ணெய்) உற்பத்தி கூடும். இதனால் ரோமவாளிகள் அடைந்து பருக்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.”
குறிப்பாக skim milk (பழுப்பு நீக்கப்பட்ட பால்) பருக்களுக்கு அதிக தொடர்புடையது. இது ஹார்மோன் அளவையும் இன்சுலின் அளவையும் உயர்த்தும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. தயிர், சீஸ் போன்றவற்றின் தாக்கம் குறைவாக இருந்தாலும், மிக சென்ஸிட்டிவ் உடலமைப்புடையவர்களுக்கு பிரச்சனை ஏற்படலாம்.
ஒவ்வொருவரின் உடல் எதிர்வினை வேறுபடுவதால் சிலருக்கு பால் எடுத்த உடனே பருக்கள் வரலாம்; சிலருக்கு எந்த மாற்றமும் தெரியாமல் போகலாம்.
பால் நிறுத்தினால் பருக்கள் குணமாகுமா?
அனைவருக்கும் இது வேலை செய்யாது. ஆனால் பலருக்கு 2 வாரங்களுக்குள் தான் சருமத்தில் மாற்றம் தெரியும். டாக்டர் ரஷ்மி கூறுயதாவது, “தாடை (jawline), கன்னம், தாடையின் கீழ் பகுதிகளில் பருக்கள் அதிகமா வருறவர்களே முதலில் உணவுப் பழக்கத்தை கவனிக்கணும்.”
பால் ஹார்மோன்களை மறைமுகமாக பாதிப்பதால், sebum உற்பத்தி குறைய வாய்ப்பு உள்ளது. சாதாரண பாலை விட்டுவிட்டு plant-based milk (almond milk, oat milk) எடுத்தால் கூட பலருக்கு breakouts குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், பால் முழுமையாக நிறுத்திவிடுவது சத்துக்குறைபாடு (கால்சியம், vitamin D) ஏற்படுத்தும் என்பதால் கவனமாக செய்ய வேண்டும்.
ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன?
“பால் பருக்கள் உருவாக்கும்” என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல. ஆனாலும் skim milk-க்குப் பருக்களுடன் அதிக தொடர்பு உள்ளது. இனிப்பான பால் பானங்கள், ice creams போன்றவை இன்சுலின் உயர்த்தி கடுமையான breakouts ஏற்படுத்தும்.
ஆனால் நிபுணர்கள் கூறியதாவாது, “Acne என்பது multifactorial. Genetics, PCOS, stress, gut health, தூக்கம், skincare - இவை அனைத்துமே முக்கிய பங்கு வகிக்கின்றன.” பால் என்பது அதில் ஒரு காரணம் மட்டுமே.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
பால் தவிர்த்தும் பருக்கள் குறையாவிட்டால் தினசரி skincare பின்பற்றியும் நன்மை தெரியாவிட்டால், Dermatologist சிகிச்சை அவசியம். Retinoids, oral medication, chemical peels, hormonal therapy ஆகியவை தேவையாகலாம்.
இறுதியாக..
பால் பொருட்களைத் தவிர்ப்பதால் சிலருக்கு பருக்கள் குறைதலும் செரிமானம் மேம்படத்தலும் நடக்கும். ஆனால் இது அனைவருக்கும் ஒரே மாதிரி வேலை செய்யாது. Acne என்பது ஒரு தனிப்பட்ட, பலவகை காரணங்களால் ஏற்படும் பிரச்சனை. உணவில் மாற்றம் செய்வதற்கு முன் நிபுணர் ஆலோசனை கட்டாயம்.
Disclaimer: இந்த கட்டுரை கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. உணவில் அல்லது சிகிச்சையில் மாற்றம் செய்ய முன்பாக மருத்துவரை அணுகவும்.
Read Next
அதிக சர்க்கரையால் சருமத்திற்கு இவ்வளவு பாதிப்பா? உடனே நிறுத்துங்க.. தோல் மருத்துவர் அறிவுரை
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Nov 20, 2025 20:28 IST
Published By : Ishvarya Gurumurthy