Spadigam Malai: பலர் வீடுகளில் உள்ள நபர்களுக்கு ஸ்படிக மாலையை வாங்கிக் கொடுக்கிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஸ்படிக மாலை அணிகிறார்கள். பொதுவாக ஸ்படிக மாலை என்பது உடல் சூட்டை குறைக்கவே பயன்படுத்தப்படுகிறது என கூறப்படுவது உண்டு. ஆனால் ஸ்படிக மாலை உடலில் பல நன்மைகளை வழங்க உதவியாக இருக்கிறது.
ஸ்படிக மாலையை வெறும் நூலிலோ அல்லது நரம்பு நூலிலோ இணைத்து அணிவதற்கு பதிலாக வெள்ளி அல்லது தங்கத்தில் கோர்த்தும் அணியலாம். ஸ்படிக மாலை உடல் சூட்டை குறைக்க உதவியாக இருக்கும் என்பதும் உண்மைதான்.
ஸ்படிகம் மாலை அணிவது நல்லதா? கெட்டதா?
ஸ்படிக மாலை அணிவது உடல் உஷ்ணம் கொண்ட நபர்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். அதேபோல் அதிக கோபப்படும் நபர்களும் நிச்சயமாக ஸ்படிக மாலை அணியலாம். அதுமட்டுமல்ல ஸ்படிக மாலை இரத்த கொதிப்பு இருப்பவர்களுக்கும் பெரிதும் பயன் உள்ளதாக இருக்கும். உடல் உஷ்ணத்தை குறைக்க ஸ்படிகம் பெருமளவு பயன்தரும்.
முக்கிய கட்டுரைகள்
ஸ்படிக மாலை நன்மைகள்
ஆனால் ஸ்படிக மாலையை குறிப்பிட்ட நபர்கள் அணிவதும் பெரும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஸ்படிக மாலையை குளிர்ப்பிரதேசங்களில் வாழ்பவர்கள் அணியக் கூடாது, குறிப்பாக உங்கள் உடல் குளிர்ச்சியான தன்மை கொண்டதாக இருந்தால் ஸ்படிகம் அணிவதை தவிர்ப்பது நல்லது. இது உடல் குளிர்ச்சியை அதிகரித்து பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வைக்கக் கூடும் என்பதால் இவர்கள் அணிய வேண்டாம் என கூறப்படுவது உண்டு.
ஒரிஜினல் ஸ்படிக மாலை கண்டறிவது எப்படி?
- சந்தையில் பல தரம் அற்ற ஸ்படிக மாலை விற்கப்படுகிறது, சாதாரண பாசியே ஸ்படிக மாலை என விற்கப்படுகிறது.
- எனவே இப்படி ஏமாறாமல் இருப்பது நல்லது.
- ஸ்படிக மாலை தொடும் போதே குளிர்ச்சியாக இருக்கும்.
- அதேபோல் இந்த மாலையை தண்ணீரில் போட்டால் நீர் உடன் சேர்ந்து வெளியே தெரியாமல் இருக்கும்.
- அதேபோல் ஸ்படிக மாலையை வேகமாக சுற்றினால் குளிர்ச்சி அதிகமாகும் என்பதை வைத்தும் நீங்கள் கண்டுபிடிக்கலாம்.
ஸ்படிக மாலை யார் பயன்படுத்தக் கூடாது?
மேலும் ஸ்படிக மாலை அணிந்தால் பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும் என கூறப்படுவது உண்டு. மனதில் குழப்பம் இருந்தால் ஸ்படிக மாலையை அணியலாம், இதன்மூலம் மனம் தெளிவடையும் என கூறப்படுவது உண்டும். ஒருவர் அணிந்த மாலையை அப்படி மற்றொருவர் அணியக் கூடாது என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். ஸ்படிக மாலை அணிவதால் இதுபோன்ற பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் இதை பயன்படுத்துவது உங்கள் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
image source: freepik