Benefits Of Dried Ginger: சுக்கு நோய்களை குணப்படுத்துமா?

  • SHARE
  • FOLLOW
Benefits Of Dried Ginger: சுக்கு நோய்களை குணப்படுத்துமா?


ஆற்றல்மிக்க உயிரியக்க சேர்மங்களால் நிரம்பிய சுக்கு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுக்குவை உட்கொள்வதன் மூலம் பல நோய்களில் இருந்து விடுபட முடியும். இதனால் குணமடையும் நோய்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

இதையும் படிங்க: குளிர்காலத்தில் செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா.? உங்களுக்கான குறிப்புகள் இங்கே

கொழுப்பைக் குறைக்கிறது

இரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருந்தால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும்.  ஆனால் சுக்கு, கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு மூன்று கிராம் சுக்கு பொடியை எடுத்து வர கொலஸ்ட்ரால் குறையும். 

செரிமானத்தை ஊக்குவிக்கும்

சுக்கு நாள்பட்ட அஜீரணத்தால் வயிற்றில் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தையும் நீக்குகிறது. மோசமான உணவு பழக்கமும் இன்றைய வாழ்க்கை முறையும் அஜீரணத்திற்கு காரணமாகிறது. ஆனால், உணவுக்கு முன் ஒன்று முதல் இரண்டு கிராம் சுக்கு பொடியை உட்கொள்வது செரிமானத்தை ஊக்குவிக்கும் என கூறப்படுகிறது. 

மாதவிடாய் வலியை குறைக்கிறது

சுக்கு வலி நிவாரணி ஆக செயல்படுகிறது. இது மாதவிடாயின் போது ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தில் இருந்து மீள உதவுகிறது. மாதவிடாய் வலியைப் போக்க மாதவிடாய் சுழற்சியின் முதல் மூன்று நாட்களுக்கு தினமும் ஒரு கிராம் சுக்கு பொடியை எடுத்துக்கொள்ள வேண்டும். 

நீரிழிவு நோயை நிர்வகிக்கிறது

சுக்கில் உள்ள  சக்தி வாய்ந்த உயிரியக்க கலவைகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். துத்தநாகம் நிறைந்த இந்த மருத்துவ பொருள் இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது. சுமார் 2 கிராம் சுக்கு பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.

இதையும் படிங்க: Ayurveda Diet For Monsoon: மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

குமட்டலை குறைக்கும்

கர்ப்பிணிப் பெண்களுக்கு காலையில் ஏற்படும் குமட்டலை குறைக்க சுக்கு உதவுகிறது. அரை டீஸ்பூன் சுக்கு பொடியை  தேன்  மற்றும் வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர காலையில் ஏற்படும் குமட்டலில் இருந்து விடுபடலாம். 

வீக்கத்தைக் குறைக்கிறது

அலெற்சி எதிர்ப்பு பண்புகளுடன் உள்ள சுக்கு பொடி வீக்கத்தைக் குறைக்கவும் நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் நன்கு அறியப்பட்டதாகும். சிறிதளவு உப்புடன் சுக்கு பொடியை உட்கொள்வது வீக்கத்தை குறைக்க உதவுகிறது. 

Image Source: Freepik

Read Next

Natural Remedies for Stress Pimples: மன அழுத்தத்தால் ஏற்படும் பருவை போக்க சிறந்த வழிகள்!

Disclaimer

குறிச்சொற்கள்