பார்ட்டிகளுக்கும், வெளியில் சாப்பிடுவதற்கும் பேப்பர் கப் மற்றும் தட்டுகளை அடிக்கடி பயன்படுத்துகிறோம். குறிப்பாக சூடான தேநீர் மற்றும் காபியைப் பருக இதனை அடிக்கடி பயன்படுத்துகிறோம். இதனால் தீவிரமான பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
நாம் அடிக்கடி பேப்பர் கப் மற்றும் தட்டுகளில் சாப்பிடுவோம். பல இடங்களில் சூடான தேநீர் மற்றும் காபி பேப்பர் கப்பில் பரிமாறப்படுகிறது. இது தவிர, பல விருந்துகளுக்கு ஸ்டூவை பரிமாற காகித கோப்பைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் அவை அப்புறப்படுத்த எளிதானது மற்றும் கழுவ வேண்டிய அவசியமில்லை என்ற காரணத்தால் கோவில் முதல் கல்யாண வீடுகள் வரை பிரபலமாக உள்ளன.
முக்கிய கட்டுரைகள்
ஒப்பீட்டளவில், விலையும் குறைவாக உள்ளது. மேலும் பயன்படுத்த எளிதானது என்பதால் மட்டுமின்றி, பிளாஸ்டிக்கை தவிர்க்கும் நோக்கத்திலும் பயன்படுத்துகிறோம்.

ஆனால் காகிதத்தால் செய்யப்பட்டாலும், ஈரமானால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கோப்பை மற்றும் தட்டுகளில் ஹைட்ரோஃபோபிக் பிளாஸ்டிக் பூசப்படுகிறஹ்டு. இது பாலிமர் அல்லது பாலிஎதிலின்களால் ஆனது. அதில் சூடான நீரையோ அல்லது தேநீரையோ ஊற்றினால், இந்த மைக்கோபிளாஸ்டிக்ஸ் உணவுடன் கலந்து உடலுக்குள் சென்றடையும்.
இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸை நம் கண்களால் பார்க்க முடியாது. இவை நமது உடலுக்குள் நுழைந்து, தோல், மூளை, நாளமில்லா அமைப்பு மற்றும் பல உறுப்புகளை சேதப்படுத்துகின்றன.
பாதுகாப்பானது என நினைத்து பேப்பர் கப் மற்றும் தட்டுகளுக்கு பழகிவிட்டோம், ஆனால் உண்மையில் அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதால் என்னென்ன மாதிரியான உடல் நலக்கோளாறுகள் ஏற்படும் என பார்க்கலாம்…
வயிறு:
பேப்பர் கப் மற்றும் தட்டுக்களை தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு, வயிற்று வலி, வாயு, செரிமான பிரச்சனை ஆகியவை ஏற்படக்கூடும். இது நுரையீரலில் ஒவ்வாமை போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. வயிறு தொடர்பான பல பிரச்சனைகள் உள்ளன. இவை அனைத்தும் வயிற்று வலி, வயிற்றில் வாயு மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது நுரையீரலில் ஒவ்வாமை போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இதனால் மூக்கு ஒழுகுதல், தும்மல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படலாம். இவை உடலின் ஹார்மோன் சமநிலையில் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இத்தகைய பேப்பர் கப் மற்றும் தட்டுகளின் பயன்பாடு நம் உடலைப் பல வழிகளில் பாதிக்கிறது. பல உள் உறுப்புகளை பாதிக்கிறது. இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும்.
ஹார்மோன் பிரச்சனைகள்:
கணைய ஹார்மோன்களுக்கு ஏற்படும் வித்தியாசம் காரணமாக இது நீரிழிவு மற்றும் தைராய்டு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது குழந்தையின்மை பிரச்சனைகளை கூட ஏற்படுத்துகிறது.
பேப்பர் கப்களில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக், ஆண் மற்றும் பெண் ஹார்மோன்களை பாதிக்கிறது. இரத்த நாளங்களில் அடைப்பை உருவாக்கி ஆண்குறியில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இது கண்களுக்கும் பார்வை குறைபாடு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மைக்ரோபிளாஸ்டிக், சிறுநீரகத்தில் ஏற்படுத்தும், அடைப்பு காரணமாக சிறுநீரக நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம்.
தீர்வு என்ன?
பேப்பர் கப் மற்றும் தட்டுகளின் பயன்பாட்டை முடிந்தவரை குறைப்பதே சரியான தீர்வாகும். இல்லையெல் குறைந்தபட்சம், அவற்றை சூடான பொருட்களை பரிமாற பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அப்போதுதான் உள்ளே இருக்கும் பூச்சு உருகி பிளாஸ்டிக் நம் உடலை வந்தடைகிறது.
சூடான பொருட்களை பயன்படுத்தாத வரை பேப்பர் கப்களால் ஆபத்து குறைவு என்றே கூறலாம். இருப்பினும், நாம் முற்றிலும் பாதுகாப்பானவை என்று நினைக்கும் இந்த விஷயங்கள் அவ்வளவு பாதுகாப்பானவை அல்ல. தற்போது, அதிகளவில் இவற்றை பயன்படுத்துவதால், நம் குழந்தைகள் உட்பட, உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகிறது.
எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளுக்கு பானங்கள் மற்றும் உணவைக் கொடுப்பதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக கண்ணாடி மற்றும் பீங்கான், சில்வர் போன்ற குறைவான தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.
Image Source: Freepik