Sat Sep 12, 2026 | 01:56 AM IST

Women's Day Special: பேட் வைத்த ப்ரா அணிந்தால் மார்பக புற்றுநோய் வருமா?

Do bras cause breast problems: பெண்கள் பிரா அணிவது குறித்து இன்றும் பல விவாதங்கள் உள்ளது. ப்ரா அணிந்து தூங்குவது புற்றுநோய் ஏற்படும், இறுக்கமான ப்ரா அணிவது மார்பகத்தின் வடிவத்தை கெடுக்கும், கர்ப்ப காலத்தில் ப்ரா அணிந்தால், அது தாய்ப்பால் சுரப்பை பாதிக்கும் என்ற பல விஷயங்களை பெண்ணாகவும், தாயாகவும் இருப்பவர்கள் அடிக்கடி கேட்டிருப்போம்.

குறிப்பாக நாகரீகமான பேடட் ப்ராக்களை அணியும் பெண்கள், இதுபோன்ற பிராக்களை அணிவதால் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் என்று மற்றவர்கள் கூறி கேட்டிருப்போம். என்னடா இது… ஒரு பிரா கூட நிம்மதியா போட முடியவில்லை என்ற சங்கடம் நமக்கு மட்டும் அல்ல ஒவ்வொரு பெண்களும் அனுபவிக்கும் விஷயம். இதற்கு காரணம் இணையத்தில் உலாவும் பொய்யான தகவல்கள் தான். ப்ரா தொடர்பான இந்த கட்டுக்கதைகள் உண்மையை அறிய நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.

இந்த பதிவும் உதவலாம் : Breast Cancer Symptoms: இந்த 5 அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம், அது மார்பக புற்றுநோயாக இருக்கலாம்!

பேடட் ப்ரா அணிவதால் புற்றுநோய் வருமா?

குருகிராமில் உள்ள சி.கே.பிர்லா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் ஆஸ்தா தயாள் கூறுகையில், இந்திய சமூகத்தில் இன்றும் கூட ப்ரா பற்றிய பல தவறான கருத்துகள் பரவி வருகின்றன. கப் வைத்த அல்லது பேடட் ப்ரா அணிவது அல்லது பேட் வைத்த ப்ரா அணிந்து தூங்குவது பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அல்லது வேறு எந்த வகை புற்றுநோயையும் ஏற்படுத்துகிறது என்பதற்கு எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை. ப்ராவின் நிறம் அல்லது வகைக்கும் மார்பக புற்றுநோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

எளிமையாக கூறினால், பெண்களுக்கு மார்பகங்களில் அரிப்பு, எரியும் உணர்வு மற்றும் மார்பகங்களில் தடிப்புகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால், அதற்கும் மார்பக புற்றுநோய்க்கும் எந்த தொடர்பும் இல்லை. அதிக எடை அதிகரிப்பு, அதிக மது அருந்துதல், மோசமான வாழ்க்கை முறை, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது, வயதான காலத்தில் கர்ப்பத்திற்குப் பிறகு தாய்ப்பால் கொடுக்காதது போன்ற காரணங்களால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம் : பெண்கள் பிறப்புறுப்பு மீது இருக்கும் முடிகளை அகற்றலாமா..? அதன் விளைவுகள் என்ன?

மார்பகப் புற்றுநோய்க்கும் உடல் பருமனுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் அதிக எடை கொண்ட பெண்களில் ஆரம்பத்திலேயே தோன்றும். வாழ்க்கை முறை மற்றும் அன்றாடப் பழக்க வழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் மார்பகப் புற்றுநோயைத் தடுக்கலாம் என்கிறார் டாக்டர் ஆஸ்தா தயாள்.

மார்பக புற்றுநோயின் 5 அறிகுறிகள்

மார்பக புற்றுநோயின் சில அறிகுறிகளை பெண்கள் தாங்களாகவே உணர முடியும். இதன் மூலம் சரியான நேரத்தில் மருத்துவரை அணுகலாம்.

  • மார்பக புற்றுநோயின் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மார்பகத்தில் வலியற்ற கட்டிகள் காணப்படும். இந்த கட்டியை தொடும்போது கடினமாக உணரலாம்.
  • மார்பகம் அதன் வடிவத்தையும் அளவையும் மேலே இருந்து மாற்றுகிறது. மார்பக நிறத்தில் மாற்றம் ஏற்படும்.
  • சில சமயங்களில் மார்பகங்களில் சிவப்பு புள்ளிகள் தோன்றும்.
  • முலைக்காம்புகள் மற்றும் முலைக்காம்புகளைச் சுற்றியுள்ள தோலில் மாற்றங்களை காணிப்பீர்கள்.
  • முலைக்காம்பிலிருந்து சில வகையான திரவம் வெளியேறும்.

இந்த பதிவும் உதவலாம் : மார்பக புற்றுநோய் பற்றிய கட்டுக் கதைகளை இனி நம்ப வேண்டாம் - உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்

மார்பக புற்றுநோயைத் தடுக்க 5 வழிகள்

  • சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, மார்பக புற்றுநோயைத் தடுப்பதற்கு உடல் பருமன் மிகவும் பொறுப்பாகும். பெண்கள் அதிக எடை மற்றும் உடல் பருமனை கட்டுப்படுத்தினால், மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைக்கலாம்.
  • யோகா, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் உடற்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைக்கலாம்.
  • ஆல்கஹால் மற்றும் சிகரெட் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஏற்படுத்துகிறது. எனவே பெண்கள் அதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த பதிவும் உதவலாம் : Breast Cancer Symptoms: கட்டியைத் தவிர மார்பக புற்றுநோயின் மற்ற அறிகுறிகள்

  • பல நேரங்களில் பெண்கள் தங்கள் சருமத்தை அழகுபடுத்த மருந்துகளை பயன்படுத்துகின்றனர். மருத்துவ ஆலோசனையின்றி சப்ளிமெண்ட்ஸ் மற்றும் மருந்துகளை உட்கொள்வது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, அவற்றை உட்கொள்ள வேண்டாம்.
  • சில பெண்கள் ஆய்வகங்களில் வேலை செய்ய வேண்டும், ஆனால் அதிக கதிர்வீச்சு வெளிப்படும் இடங்களில் வேலை செய்வதில்லை. அதிகப்படியான கதிர்வீச்சுக்கு வெளிப்பாடு மார்பக புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

Pic Courtesy: Freepik

Read Next

Women's Day 2024: பெண்களே உஷார்… உடல் கொடுக்கும் இந்த சிக்னலை அலட்சியப்படுத்தினால் ஆபத்து!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content