சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு என்ன ஆச்சு… திடீரென மருத்துவமனையில் அனுமதி!

  • SHARE
  • FOLLOW
சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு என்ன ஆச்சு… திடீரென மருத்துவமனையில் அனுமதி!

தனது கம்பீர குரலாலும், சிறப்பான நடிப்பாலும் பாலிவுட்டையும் கடந்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முக தன்மையாளராக வலம் வரும் அமிதாப் பச்சன், தற்போது தனது 81வது வயதிலும் விளம்பரங்கள், சினிமா படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

உலக நாயகன் கமல் ஹாசன், திபீகா படுகோனே, பிரபாஸ் உள்ளிட்டோர் நடித்து வரும் "கல்கி 2898 AD" படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதனைத்தொடர்ந்து, டி.ஜே.ஞானவேல் இயக்கவுள்ள “வேட்டையன்” படம் மூலமாக தமிழிலும் அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில் அமிதாப் பச்சன் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமிதாப் பச்சனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை இதயத்தில் செய்யப்படவில்லை என்றும் அவரின் கால்களில் சில இடங்களில் ரத்தக்கட்டுக்கள் இருக்கும் இடத்தில் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் எவ்வித அதிகாரப்புர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அவரது ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர்.

Read Next

Heart Health: இதய நோயாளிகள் இந்த யோகாசனங்களைச் செய்யவேக் கூடாது - ஏன் தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்