Actor Vishal Health Update: ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்ட நடித்த படம் மதகஜராஜா. இந்த படமானது கடந்த 2012ல் உருவானது, 2013ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட இந்த படம் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் சுமார் 12 வருடங்களுக்கு பிறகு மதகஜராஜா படம் வெளியாக உள்ளது. 2013 பொங்கலுக்கு வெளியாக வேண்டிய இந்த படமானது 2025 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதையடுத்து இந்த படத்தின் ப்ரொமோஷன் பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதிகம் படித்தவை: Best Diet Plan: 1 மாதத்தில் 10 கிலோ எடை குறைக்க உதவும் பெஸ்ட் டயட் பிளான்!
நடிகர் விஷால் உடல்நிலை
அதன் ஒரு பகுதியாக மதகஜராஜா படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஷால், சுந்தர்.சி, குஷ்பு, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற விஷால், வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமாக காணப்பட்டார். விஷால் மெலிந்த தோற்றத்துடன், நடுக்கத்துடன் தாங்கி தாங்கி நடக்கும்படியாக காட்சியளித்தார்.
மேலும் மேடையில் மைக் பிடித்து பேசும்போது கை பெரிதளவு நடுங்கியது. இதை பார்த்த ரசிகர்கள் விஷாலுக்கு என்னாச்சு என அதிர்ச்சியடைந்து தொடர்ந்து கேள்வி எழுப்பினர். நடிகர் விஷாலுக்கு தீவிர காய்ச்சல் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து சென்னை அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
விஷால் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
நடிகர் விஷால் உடல்நிலை குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் உரிய சிகிச்சை மற்றும் ஓய்வு எடுக்க அவரை அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
image source: social media