இந்திய மசாலாக்களின் ராணி என அழைக்கப்படும் ஏலக்காய், வாசனை மற்றும் சுவைக்காக மட்டுமின்றி அதன் மருத்துவ குணத்திற்கும் பெயர் பெற்றது. அதனால் தான் இந்திய உணவுகளில் ஏலக்காய் டீ முதல் பிரியாணி வரை பெரும்பாலான உணவுகளில் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.
ஏலக்காய் சுவை மற்றும் ஊட்டச்சத்து இரண்டிலும் சிறப்பானது என நிபுணர்கள் கூறுகின்றனர். இது பல்வேறு ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஏலக்காயில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன என்று அறிந்துகொள்ளலாம்.
முக்கிய கட்டுரைகள்
இரத்த அழுத்தம்:

ஏலக்காயில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்த உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் கொண்ட 20 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 12 வாரங்களுக்கு தினசரி 3 ஏலக்காயை சாப்பிட்டு வந்தவர்களுக்கு ரத்த அழுத்தம் முன்பிருந்ததை விட கணிசமான அளவு குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
புற்றுநோய் எதிர்ப்பு:
ஏலக்காய் தூள் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் சில நொதிகளின் செயல்பாட்டை அதிகரிப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆராய்ச்சியின் படி.. எலிகளின் இரண்டு குழுக்கள் தோல் புற்றுநோய் சேர்மங்களுக்கு வெளிப்பட்டன. ஒரு குழுவிற்கு மட்டும் 500 மி.கி ஏலக்காய் பொடி வழங்கப்பட்டது.
12 வாரங்களுக்குப் பிறகு, ஏலக்காயை சாப்பிட்ட குழுவில் 29% பேருக்கு மட்டுமே புற்றுநோய் ஏற்பட்டது. மனிதர்கள் மீதான ஆய்வுகளும் இதே போன்ற முடிவுகளைக் காட்டியுள்ளன.
வீக்கத்தை குறைக்கும்:
ஏலக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், இது வீக்கத்தைத் குறைக்க உதவுகிறது. எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வின்படி, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவை உட்கொண்ட பிறகு ஏலக்காய் எடுத்துக்கொள்வது கல்லீரல் வீக்கத்தை குறைக்க உதவும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
செரிமான பிரச்சனை:

இன்று, நேற்றல்ல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு ஆய்வு முடிவுகளின் படி, ஏலக்காய் வயிற்றுப்புண்களை ஆற்றவும் பயன்படும் என்பது தெரியவந்துள்ளது.
வாய் துர்நாற்றம்:
ஏலக்காய் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாய் துர்நாற்றம் மற்றும் பிற பல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் பல நாடுகளில் மக்கள் ஒவ்வொரு உணவிற்கும் பிறகு தங்கள் சுவாசத்தை புத்துணர்ச்சியடையச் செய்ய ஏலக்காய் துண்டைப் பருகுவார்கள்.
ஏலக்காய் வாய்வழி பாக்டீரியாக்களால் ஏற்படக்கூடிய ஐந்து வகையான தாக்குதல்களை தடுக்க உதவுகிறது. இது உமிழ்நீரில் உள்ள பாக்டீரியாக்களை 54% குறைப்பது ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தினமும் ஏலக்காயை பயன்படுத்த எளிய வழிகள்:
- வெந்நீரில் சிறிதளவு ஏலக்காயை பவுடரைக் கலந்து குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கூடும் எனக்கூறப்படுகிறது.
- உணவுக்குப் பிறகு வாய் புத்துணர்ச்சி பெற இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று தின்னலாம்.
- நிம்மதியான தூக்கத்திற்கு, உறங்கும் முன்பு பாலில் ஒரு சிட்டிகை ஏலக்காய், மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு சேர்த்து பருகலாம்.
- ஹல்வா, கீர் போன்ற இனிப்பு வகைகளில் ஏலக்காய் அல்லது ஏலக்காய் பவுடரை சேர்க்கலாம். இது சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிப்பதால் இந்திய இனிப்பு வகைகளில் ஏலக்காய் முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது.
Image source: Freepik