How to strengthen body with exercises: மனித மெட்டாப்நியூமோவைரஸைக் குறிக்கும் HMPV என்பது சுவாச நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் ஆகும். இந்த வைரஸ் சீனாவில் பரவிய நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த வைரஸ் ஆனது காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனைகள் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. தொடக்கத்தில் இந்த அறிகுறிகள் காய்ச்சல் அல்லது ஜலதோஷத்தைப் போலவே இருக்கும். இந்த சுவாச வைரஸ் பரவுவதைத் தடுக்க சில நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தப்படுகிறது.
முதலாக, வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராட நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அவ்வாறே, உடலைக் கட்டுக்கோப்பாகவும், வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடவும், உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகக் கருதப்படுகிறது. சில உடல் செயல்பாடுகளை மேற்கொள்வது உடலை மிகுந்த ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதில் HMPV வைரஸை எதிர்த்துப் போராட செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: நீங்கள் நடக்கும் போது மூச்சுத் திணறுகிறதா? - இதைப் பாலோப் பண்ணுங்க!
HMPV வைரஸ் பரவும் நிலையில் உடலை வலுப்படுத்த உதவும் சிறந்த உடற்பயிற்சிகள்
உலகளாவிய HMPV பயத்தின் மத்தியில், உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதன் மூலம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இதற்கான சில வழிமுறைகளைக் காணலாம்.
யோகாசனங்கள்
யோகாசனங்கள் உடலில் என்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பயிற்சியைக் குறிக்கிறது. ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்கள் யோகாசனங்கள் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வது நம் உடலை முன்மை விட வலுவாக வைக்க உதவுகிறது. யோகாசனங்கள் வீக்கத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்க வழிவகுக்கிறது. மேலும், இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகிறது.
ஓடுவது
தினந்தோறும் ஓடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் ஓட்டப்பயிற்சி மேற்கொள்வது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. அதாவது ஓடும் போது இரத்த ஓட்டம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹார்மோன்களை மேம்படுத்துகிறது. இது இதய ஆரோக்கிய்ம், நுரையீரல் ஆரோக்கியம் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
நீச்சல் பயிற்சி
நீச்சல் பயிற்சி ஒரு சிறந்த பயிற்சியாகும். இது ஒரு சிறந்த குறைந்த-தாக்கப் பயிற்சியாக அமைகிறது. இந்த பயிற்சியை மேற்கொள்வது இதய வலிமையை ஆதரிக்கிறது. நீச்சல் செய்யும் போது பயன்படுத்தப்படும் சீரான சுவாசம் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும், சுழற்சியை அதிகரிக்கவும் உதவுகிறது. இது நீரின் எதிர்ப்பு தசைகளைத் தொனிக்க உதவுகிறது. அதே சமயம், இந்த தாள இயக்கங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க வழிவகுக்கிறது.
சைக்கிள் ஓட்டுதல் பயிற்சி
எந்தவொரு உடற்பயிற்சியும் உடலின் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில், இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது தவிர, உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கவும் சைக்கிள் ஓட்டுதல் பயிற்சி உதவுகிறது. இது தவிர, நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடவும் இந்தப் பயிற்சி உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Winter yoga asanas: குளிர்கால சோம்பலை எதிர்த்துப் போராட தினமும் காலையில் இந்த யோகாசனங்களை செய்யுங்க
நடைபயிற்சி
நடைபயிற்சி ஆனது குறைந்த தாக்கம் கொண்ட உடற்பயிற்சியாகத் தோன்றலாம். ஆனால், இது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பை மேம்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. மேலும் நடைபயிற்சி செய்வது உடல் முழுவதும் நோயெதிர்ப்பு செல்களை சிறப்பாக நகர்த்த உதவுகிறது.
நீட்சிப்பயிற்சி
உடலில் உருவாகும் பதற்றம் தசைகளில் சேமிக்கப்படுகிறது. இது மன அழுத்தம், வலி மற்றும் குறைந்தளவிலான நோய் எதிர்ப்புச் சக்திக்கு வழிவகுக்கிறது. எனவே நீட்சிப்பயிற்சி தசை பதற்றத்தை எளிதாக்கவும், நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: எப்போ பாத்தாலும் கவலை, பதட்டமா இருக்கா? இதை செஞ்சா எந்தக் கவலையும் பறந்தோடிடும்!
Image Source: Freepik