How to increase respiratory immunity: HMPV என்பது ஒரு சுவாச நோய் சம்பந்தமான பிரச்சனையைக் குறிப்பதாகும். இது ஒரு சுவாச வைரஸ் ஆகும். இது குளிர்காலத்தின் பிற்பகுதியிலும் வசந்த காலத்திலும் செயலில் இருக்கக் கூடியதாகும். இது லேசானவை மற்றும் சில நாள்களுக்குள் தானாகவே தீர்க்கப்படக்கூடியதாகும். எனினும்,கடுமையான சந்தர்ப்பங்களில், HMPV மிகவும் தீவிரமான சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. சீனாவிலில் பரவிய இந்த தொற்று ஆனது, தற்போது இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் இந்த வைரஸ் தொற்று பரவி வருகிறது.
HMPV என்றால் என்ன?
மனித மெட்டாப்நியூமோவைரஸ் என்பது நியூமோவிரிடே குடும்பத்தின் எதிர்மறை-உணர்வு ஒற்றை இழையான ஆர்என்ஏ வைரஸைக் குறிக்கிறது. இந்த நோயானது காய்ச்சல், நாசி நெரிசல், தொண்டைப்புண், மூச்சுத்திணறல், இருமல் போன்ற பொதுவான அறிகுறிகளுடன் சுவாச மண்டலத்தை எளிதில் பாதிக்கிறது. கடுமையான நேரங்களில் இது நிமோனியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சிக்கு வழிவகுக்கலாம். இந்த HMPV பொதுவாக ஒரு வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளைப் பாதிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: HMPV and Pregnancy: HMPV தொற்று கர்ப்பத்தை பாதிக்குமா? டாக்டர் கூறுவது இங்கே!
HMPV பொதுவாக தொடக்கத்தில் சளி போன்ற லேசான மேல் சுவாச அறிகுறிகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. எனினும், இது சில நேரங்களில் இளம் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக, இது பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம் பரவுகிறது. HMPV-க்கான மதிப்பிடப்பட்ட காலம் மூன்று முதல் ஆறு நாள்கள் ஆகும்.
HMPV-ஐ எதிர்த்துப் போராடுவது எப்படி?
HMPV ஆனது சுவாச ஒத்திசைவு வைரஸ் ஆகும். இது பல நூற்றாண்டுகளாகவே இருந்து வரக்கூடிய ஒரு நீண்டகால வைரஸ் ஆகும். இது மிகவும் லேசானதாகும். உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொள்வதன் மூலம் HMPV-ஐ எதிர்த்துப் போராட முடியும். இதில் HMPV மற்றும் பிற சுவாச நோய்களுக்கு எதிராக நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான சில குறிப்புகளைக் காணலாம்.
- கைகளை சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு குறைந்தது 20 விநாடிகள் கழுவ வேண்டும் அல்லது ஆல்கஹால் சார்ந்த சானிட்டைஷர்களைப் பயன்படுத்த வேண்டும்.
- பெரும்பாலும் நெரிசலாக மற்றும் மோசமான காற்றோட்டம் உள்ள பகுதியில் மாஸ்க்கை அணிய வேண்டும். குறிப்பாக, இந்த பருவகால சுவாச நோய்களின் மீதான தாக்கத்தின் போது மாஸ்க் அணியலாம்.
- இருமல் மற்றும் தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை, துணி அல்லது கையைப் பயன்படுத்தி மறைக்க வேண்டும்.
- கழுவப்படாத கைகளால் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- மேலும், நோய்வாய்ப்பட்டிருப்பின் வீட்டிலேயே இருக்க வேண்டும் மற்றும் மற்றவர்களுடனான நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: HMPV Symptoms: HMPV வைரஸ் தொற்று பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது?
- கிரீன் டீ, பூண்டு, மஞ்சள், சிட்ரஸ் பழங்கள் மற்றும் இஞ்சி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சீரான உணவு முறையைக் கையாள வேண்டும். சர்க்கரை, கொழுப்பு மற்றும் காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதே சமயம், ஆல்கஹாலைத் தவிர்க்க வேண்டும். அதன் படி, ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம் போன்றவற்றில் வைட்டமின் சி உள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை பலப்படுத்துகிறது.
- கிவி, குடை மிளகாய், பெர்ரி பழங்கள் மற்றும் தக்காளி போன்ற பிற ஆதாரங்களும், நுரையீரல் திசுக்களில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் ஆக்ஸிஜனேற்றத்தை வழங்குகிறது. ஒமேகா-3 நுரையீரல் வீக்கத்தை எதிர்த்து, சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கிரீன் டீ-யில் உள்ள கேட்டசின்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சுவாச தொற்று அபாயத்தைக் குறைக்கிறது. நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த இது அழற்சி எதிர்ப்பு நன்மைகளைத் தருகிறது.
- ஒரு இரவுக்கு ஏழு முதல் 8 மணி நேரம் போதுமான மற்றும் நிம்மதியான தூக்கத்தை இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும்.
- யோகா மற்றும் சுவாச நுட்பங்களை முயற்சி செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், மனநிலை மேம்பாட்டிற்கும் உதவுகிறது.
- வீட்டில் சுத்தமான காற்று சுழற்சியை மேம்படுத்துவதற்கு ஜன்னல்களைத் திறக்கலாம் அல்லது காற்று சுத்திகரிப்பாளர்களைப் பயன்படுத்தலாம்.
இவ்வாறு ஆரோக்கியமான முறைகளைக் கையாள்வதன் மூலம் HMPV வைரஸ் பரவுதலைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: HMPV வைரஸ் என்றால் என்ன? முன்னெச்சரிக்கை நடவடிக்கள்!