பல வகை சுவைகள் பலருக்கும் பிடித்தாலும் இதில் இனிப்பு என்பது இன்றியமையாத ஒன்றாகும். இனிப்பு சுவை பிடிக்காதவர்கள் மிகக் குறைவாகும். மில்க் சுவீட், மில்க் சாக்லேட், டார்க் க்ரீமி மில்க் சாக்லேட், பாயாசம், கேசரி, அல்வா, ரசகுலா, குலாப் ஜாம் என பல வகை ஸ்வீட்களில் எல்லாருக்கும் ஏதேனும் ஒன்று பிடித்தம் இருக்கும்.
இந்த ஸ்வீட்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்தால், நாம் எந்த நிலையில் இருந்தாலும் லேசாகவாவது டேஸ்ட் செய்யவும். இப்படி சாப்பிடுவது தவறு இல்லை என்றாலும் எதை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என அறிவது முக்கியம். ஸ்விட் சாப்பிட சரியான நேரம் எது, எந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது என்பது குறித்துதான் இப்போது பார்க்கப் போகிறோம்.
அனைவருக்கும் பிடிக்கும் சுவை
சந்தோஷத்தை எப்போது அணுபவித்தாலும் சர்க்கரை கொடுப்பதும் சாப்பிடுவதும் வழக்கம். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் சர்க்கரை சாப்பிடுவது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எக்காரணம் கொண்டும் சில நேரங்களில் சர்க்கரையை சாப்பிடக் கூடாது. இது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.
சர்க்கரையை காலையில் சாப்பிடக் கூடாது
சர்க்கரையை எக்காரணம் கொண்டும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூட வாய்ப்புள்ளது. ஆரோக்கியமாக உங்கள் நாளைத் தொடங்க ஆரோக்கியமான உணவுடன் உங்கள் பொழுதைத் தொடங்குங்கள். ஆரோக்கியமான புரதத்துடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். இது மிக நன்மை பயக்கும்.
சர்க்கரையை இரவில் சாப்பிடக் கூடாது
அதேபோல் எக்காரணம் கொண்டும் நள்ளிரவில் சிக்கரையை உட்கொள்ளக் கூடாது. சர்க்கரை ஸ்பைக் உங்கள் ஹார்மோன்களை சீர்குலைக்கக் கூடும். அதேபோல் இது நிச்சயமாக எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
ஆரோக்கியமான பழங்கள் சாப்பிடலாம்
சரி, இப்போது ஒரு கேள்வி வரும். பழங்கள் சர்க்கரை தானே இதை எப்போதும் சாப்பிடலாமா என்று. இனிப்புகள் சார்ந்த பழங்களான டேட்ஸ், பெர்ரி, திராட்சை உள்ளிட்டவைகளை நீங்கள் தாராளமாக ஆரோக்கியமான உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் கட்டாயம் சாக்லேட் வேண்டும் என விருப்பப்படுபவர்கள் டார்க் சாக்லேட் சாப்பிடலாம். இது இதயத்தை ஆரோக்கியமாக வைப்பது உட்பட பல நன்மைகளை வழங்கும்.
ஸ்வீட் சாப்பிட சரியான நேரம்
ஸ்வீட் சாப்பிட சரியான நேரம் என்றால் மதிய உணவுக்கு பிறகு ஒரு மணி நேரம் கழித்து, உடற்பயிற்சிக்கு முன்பு எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் உங்கள் உடல்நிலையை சரியாக பராமரிக்க வேண்டியது மிக முக்கியம். முறையாக மருத்துவர் ஆலோசனையை பெற வேண்டியதும் மிக முக்கியம்.
ஸ்வீட் சாப்பிடுவதை தவிர்ப்பது எப்படி?
நீரேற்றமாக இருக்க போதுமான தண்ணீரை குடிப்பதை மிக முக்கியம். மனிதருக்கு சர்க்கரை ஆசை ஏற்படுவதற்கான பல காரணங்களில் நீரிழப்பும் ஒன்றாகும். உங்களுக்கு ஸ்வீட் உண்ண வேண்டும் என்ற ஆவல் இருக்கும்போது பழம் அல்லது பேரீச்சம்பழம், திராட்சை, உலர்ந்த பாதாமி உள்ளிட்ட உலர்ந்த பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவை அனைத்தும் சர்க்கரை ஆசைக்கு பயனுள்ள மாற்றாகும்.
வாய் புத்துணர்ச்சி தரும் உணவுகள், பெருஞ்சீரகம் விதைகள் உள்ளிட்ட அதுபோன்ற பொருட்களை எப்போதும் அருகில் வைத்துக் கொள்ளுங்கள். இவை உங்கள் சர்க்கரை ஆசையை தணிக்கும் திறனைக் கொண்டுள்ளன.
உங்கள் உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் சேர்ப்பதை உறுதி செய்யவும். இந்த ஊட்டச்சத்துக்கள் பசியை திறம்பட கட்டுப்படுத்த உதவுகின்றன, அதே நேரத்தில் திருப்தியை ஊக்குவிக்கின்றன. பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், செயற்கை இனிப்புகள் மற்றும் பிற உயர் சர்க்கரை உணவுகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவது மிக நல்லது.
காலையில் வெறும் வயிற்றில், சர்க்கரை சாப்பிடுவது நீரிழிவு நோய் பாதிப்பை அதிகரிக்கிறது. அதேபோல் இரவு சர்க்கரை சாப்பிடுவது ஹார்மோன்களை சீர்குலைத்து எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.
இனிப்பு சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்
கண்ட நேரத்தில் இனிப்பு சாப்பிடுவது பல பாதிப்புகளை ஏற்படுத்தும். ர்க்கரையின் அதிகப்படியான நுகர்வு காரணமாக, அது கொழுப்பு வடிவில் கல்லீரலில் சேமிக்கத் தொடங்குகிறது, இது கல்லீரல் சேதத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது.
சர்க்கரை சாப்பிடுவதும் உடலில் வீக்கம் பிரச்சனையை அதிகரிக்கும். இதற்குக் காரணம், சர்க்கரையை அதிக அளவில் உட்கொள்ளும் போது, இன்சுலின் எதிர்ப்புத் தன்மை அதிகரித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடலில் ஏற்படும் அழற்சிப் பிரச்சனையை அதிகரிக்கும். சர்க்கரையின் அதிகப்படியான நுகர்வு காரணமாக, நீரிழிவு அபாயமும் அதிகரிக்கிறது.
சர்க்கரைக்கு பதிலாக என்ன சாப்பிடலாம்?
பேரிச்சம்பழம், அத்திப்பழம், உலர்ந்த பிளம்ஸ், திராட்சை மற்றும் கருப்பு திராட்சை ஆகியவற்றை உட்கொள்ளலாம்.
சர்க்கரை சாப்பிடுவது உடலுக்கு இது போன்ற தீங்கு விளைவிக்கும். இருப்பினும், நீங்கள் உட்கொள்ள வேண்டிய சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உங்கள் மருத்துவரை அணுகலாம்.
Image Source: FreePik