Tea Tree Oil Benefits: சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு தேயிலை மர எண்ணெய் தரும் நன்மைகள்

  • SHARE
  • FOLLOW
Tea Tree Oil Benefits: சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு தேயிலை மர எண்ணெய் தரும் நன்மைகள்


Tea Tree Oil Benefits For Skin And Hair: தேயிலை மர எண்ணெய் ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்டதாகும். தேயிலை மரத்தின் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் இந்த எண்ணெய் தேயிலை மர எண்ணெய் அல்லது மெலலூகா எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது. இது பல நூற்றாண்டுகளாக பழங்குடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மருத்துவ குணம் மிகுந்த எண்ணெய் ஆகும். சருமம் மற்றும் முடிக்கு தேயிலை மர எண்ணெய் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

சருமம் மற்றும் முடிக்கு தேயிலை மர எண்ணெயின் நன்மைகள்

அழகு சேர்க்கும் தேயிலை மர எண்ணெய், சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்த உதவுகிறது என்பதைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Pink lip Tips: உங்க உதடு கருப்பா அசிங்கமா இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

சரும எரிச்சலைத் தணிக்க

தேயிலை மர எண்ணெய், சருமத்தில் ஏற்படும் எரிச்சல் அல்லது வீக்கமடைந்த சருமத்திற்கு மிகச்சிறந்த தீர்வாக அமைகிறது. இது சருமம் சிவப்படைதல் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் அரிப்பு, எரியும் உணர்வு போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்க தேயிலை மர எண்ணெய் உதவுகிறது. இது தவிர தடிப்புத் தோலழற்சி, அரிக்கும் தோலழற்சி, உணர்திறன் வாய்ந்த தோல் போன்றவற்றிற்கு தேயிலை மர எண்ணெய் உதவுகிறது.

தழும்புகளின் தோற்றத்தைக் குறைக்க

தேயிலை மர எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் உள்ள தழும்புகளைக் குறைப்பதுடன், சிவத்தல் மற்றும் வீக்கத்தையும் குறைக்கின்றன. மேலும், இதன் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. வடுக்கள் மீது தேயிலை மர எண்ணெயைத் தடவி வர நாளடைவில் அவை மறைவதைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Curd Benefits: தயிரை சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு எப்படி பயன்படுத்துவது?

எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த

சருமத்தில் அதிக எண்ணெய் பசை கொண்டவர்கள் தேயிலை மர எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது எண்ணெய் உற்பத்தியை சீராக வைக்க உதவுகிறது. இவர்கள் தேயிலை மர எண்ணெயைப் பயன்படுத்தும் போது, சருமத்தில் தேங்கியிருக்கும் அதிகப்படியான எண்ணெய், அழுக்கு போன்றவற்றை நீக்கி சுத்தமாக மற்றும் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது. எனவே, தேயிலை மர எண்ணெய், சருமத்திற்கு சிறந்த இயற்கை தீர்வாகும்.

முகப்பருவை எதிர்த்துப் போராட

தேயிலை மர எண்ணெயின் மிகப் பிரபலமான நன்மைகளில் ஒன்று முகப்பருக்களை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டதாகும். இதற்கு தேயிலை மர எண்ணெயில் உள்ள பாக்டீரியா மற்றூம் அழற்சி எதிர்ப்புப் பண்புகளே காரணமாகும். இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், சருமத்தில் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவைக் கொல்ல உதவுகிறது. சருமத்துளைகளை அடைத்து, அதிகப்படியான எண்ணெயை அகற்ற உதவுகிறது. இது முகப்பரு கொண்ட சருமத்திற்கு சிறந்த இயற்கையான தீர்வாக தேயிலை மர எண்ணெய் அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Best Nail Care Tips: நகம் அழகாக மற்றும் பாதுகாப்பாக இருக்க இந்த டிப்ஸ் ஃபாலோப் பண்ணுங்க..

உச்சந்தலையின் அரிப்பு நீங்க

தலையில் உள்ள பொடுகு மற்றும் பிற தோல் நிலைகளால் ஏற்படும் வறண்ட மற்றும் அரிப்பு போன்றவற்றை நீக்க தேயிலை மர எண்ணெய் உதவுகிறது. இதன் ஈரப்பதமூட்டும் பண்புகள் உச்சந்தலையில் நீரேற்றம் செய்ய உதவுகிறது. மேலும் வீக்கத்தைக் குறைக்க மற்றும் தொற்றுநோயைத் தடுக்க பெரிதும் உதவுகிறது.

பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சையாக

இயற்கையாகவே பூஞ்சை எதிர்ப்புப் பண்புகளைக் கொண்ட தேயிலை மர எண்ணெய், பூஞ்சை தொற்று சிகிச்சைக்கு உதவுகிறது. குறிப்பாக, தடகள வீரர்களின் கால் மற்றும் கால் விரல் நகம் போன்ற பூஞ்சை தொற்றுகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. இவை பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்கவும் உதவுகிறது. எனவே, இவை பூஞ்சை காளான் கிரீம்கள் மற்றும் மருந்துகள் போன்றவற்றிற்கு சிறந்த இயற்கை மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Pedicure at Home : பார்லருக்கு செல்லாமல் இனி வீட்டிலேயே எளிமையான முறையில் பெடிக்யூர் செய்யலாம்!

முடி வளர்ச்சியை ஊக்குவிக்க

தேயிலை மர எண்ணெய் முடி ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், தலையில் பொடுகைக் குறைக்க உதவுகின்றன. முடியின் மயிர்க்கால்கள் வரை ஆழமாகச் சென்று ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் முடி உதிர்தலைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.

இவ்வாறு தேயிலை மர எண்ணெயில் பல்வேறு அழகு சார்ந்த பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வாக அமைகிறது. இதன் பண்புகள் சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பல்துறை மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. எனினும், தேயிலை மர எண்ணெயை எப்போதும் பயன்படுத்துவதற்கு முன் நீர்த்த வேண்டும். ஏனெனில், நீர்த்த வடிவில் பயன்படுத்துவது தோல் எரிச்சலை ஏற்படுத்தலாம். எந்தவொரு தோல் பராமரிப்பு அல்லது முடி பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்தும் முன், அதற்கான நிபுணரை அணுகலாம் அல்லது பேட்ச் டெஸ்ட் செய்து பயன்படுத்துவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Guava Leaves Bath: சருமம் மற்றும் முடி பிரச்சனைகளை நீக்கும் கொய்யா இலை குளியல்

Image Source: Freepik

Read Next

Dark Circle: கருவளையங்கள் ஏற்பட காரணமும், சிறந்த வைத்திய முறையும்..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version