Benefits of tea tree oil for hair and how to use it: இன்று பலரும் முடி உதிர்வு, முடி வறட்சி, நுனி முடி பிளவு உள்ளிட்ட பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட சிலர் கடைகளில் விற்பனை செய்யப்படும் இரசாயனங்கள் நிறைந்த பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை முடி ஆரோக்கியத்தை மேலும் மோசமாக்கலாம். இந்நிலையில், முடி ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சில தாவர இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் பெரிதும் நன்மை பயக்கும்.
இதில் மெலலூகா ஆல்டர்னிஃபோலியா தாவரத்தின் இலைகளிலிருந்து எடுக்கப்படும் அத்தியாவசிய எண்ணெயான டீ ட்ரீ ஆயில் பெரிதும் நன்மை பயக்கும். இது முகப்பரு உள்ள பலருக்கும் சிறந்த வீட்டு வைத்தியமாகும். டீ ட்ரீ ஆயிலில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இதை முகம், கழுத்து, முதுகு, தோள்கள் மற்றும் மார்பில் தோன்றக்கூடிய முகப்பருவைப் போக்க உதவுகிறது. இது சரும பராமரிப்பு மட்டுமல்லாமல் முடி ஆரோக்கியத்திற்கும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இவை முடி பராமரிப்புத் துறையில் பிரபலமான ஒரு தேர்வாகும்.
இந்த பதிவும் உதவலாம்: தலை முடியை மசாஜ் செய்ய எந்த எண்ணெய் சிறந்தது? அடர்த்தியான முடிக்கு ஆயுர்வேத டிப்ஸ்!
முடி பராமரிப்பில் டீ ட்ரீ ஆயில்
ஹெல்த்ஷாட்ஸ் தளத்தில் குறிப்பிட்ட படி, டீ ட்ரீ ஆயில் ஆரோக்கியமான முடியை ஆதரிக்கவும், பொடுகை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இதில் முடி வளர்ச்சிக்கு தேயிலை மர எண்ணெய் எவ்வாறு உதவுகிறது மற்றும் அதைப் பயன்படுத்தும் முறை குறித்து காணலாம். இந்த எண்ணெய் ஒரு மருந்தைப் போல நேரடியாக முடியை வளர்க்காது என்றாலும், இது ஆரோக்கியமான மற்றும் வலுவான முடி வளர்ச்சிக்கு ஏற்ற உச்சந்தலையில் சூழலை உருவாக்குகிறது. இதை சில மருந்துகளுடன் சேர்ப்பது குறிப்பாக முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
முடி வளர்ச்சிக்கு டீ ட்ரீ ஆயிலின் நன்மைகள்
உச்சந்தலையில் வீக்கத்தைக் குறைக்க
இது அமைதியான உச்சந்தலை வளர்ச்சிக்கு வீக்கம், அரிப்பைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமானதாகும். பெரும்பாலும் பூஞ்சை அல்லது பாக்டீரியா அதிகப்படியான வளர்ச்சியால், முடி நுண்ணறைகளை சேதப்படுத்தலாம். தேயிலை மர எண்ணெயில் வலுவான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவை உச்சந்தலையில் சிவத்தல் மற்றும் எரிச்சலைக் குறைக்கவும், சருமத்தை ஆற்றவும் உதவுகிறது.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கு
தேயிலை மர எண்ணெயைக் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்யும்போது இரத்த ஓட்டத்தைத் தூண்ட உதவுகிறது. இவை முடி நுண்ணறைகளுக்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்ல உதவுகிறது. நன்கு ஊட்டமளிக்கப்பட்ட நுண்ணறையின் உதவியுடன் ஆரோக்கியமான, அடர்த்தியான சுழற்சியில் முடி வளர ஊக்குவிக்கிறது.
முடி வேர்களை வலுப்படுத்த
இந்த வகை எண்ணெய் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் வேர்களில் முடியை பலப்படுத்துகிறது. மேலும் தொற்று அல்லது அழற்சியால் ஏற்படும் முடி உதிர்தலைக் குறைக்க உதவுகிறது. ஆரோக்கியமான முடி நுண்குழாய்கள் என்பது வலுவான மற்றும் ஆரோக்கியமான முடி இழைகளைக் குறிப்பதாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Dandruff home remedies: தீராத பொடுகுத் தொல்லையால் அவதியா? இந்த ரெமிடிஸ் யூஸ் பண்ணுங்க
பொடுகை எதிர்த்துப் போராட
டீ ட்ரீ ஆயிலில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பொடுகை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஆய்வு ஒன்றில் தேயிலை மர எண்ணெயுடன் கூடிய ஷாம்பு பொடுகை எதிர்த்துப் போராட முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த பொதுவான முடி பிரச்சனை உரிதல் மற்றும் அரிப்பு ஏற்படுவதன் மூலமும், நுண்ணறைகளை பலவீனப்படுத்துவதன் மூலமும் முடி வளர்ச்சியை சீர்குலைக்கும் என்று கூறப்படுகிறது. இவை உச்சந்தலையின் இயற்கையான சமநிலையை மீட்டெடுக்கவும், சிறந்த முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
முடி வளர்ச்சிக்கு டீ ட்ரீ ஆயிலை பயன்படுத்துவது எப்படி?
முடி வளர்ச்சிக்கு தேயிலை மர எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு முன்பு, முதலில் எப்போதும் அதை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும். இது முடி வகையைப் பொறுத்து மற்ற எண்ணெய்களுடன் நன்றாகச் சேர்க்கப்படுகிறது.
சாதாரண முடிக்கு - டீ ட்ரீ ஆயிலுடன் பாதாம் எண்ணெயைப் பயன்படுத்தலாம். ஏனெனில், இது லேசானதாகும். மேலும் வைட்டமின் ஈ நிறைந்த இந்த எண்ணெய் முடிக்கு வலிமை, பளபளப்பைச் சேர்க்கிறது.
வறண்ட உச்சந்தலைக்கு - ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இவை உச்சந்தலைக்கு நன்கு ஊட்டமளித்து, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
எண்ணெய் நிறைந்த உச்சந்தலைக்கு - எண்ணெய்ப்பசை முடி உள்ளவர்கள் ஜோஜோபா எண்ணெயுடன் கலந்து பயன்படுத்துவது உச்சந்தலையில் அடைப்பு ஏற்படாமல் எண்ணெயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
- இதற்கு 2-3 சொட்டு தேயிலை மர எண்ணெயை 2 தேக்கரண்டி அளவிலான விருப்பமான கேரியர் எண்ணெயுடன் கலக்க வேண்டும்.
- இந்தக் கலவையை உச்சந்தலையில் மசாஜ் செய்து 30 முதல் 60 நிமிடங்கள் வரை வைத்து, பின்னர் லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி கழுவலாம்.
உணர்திறன் வாய்ந்த சருமம் அல்லது அரிக்கும் தோலழற்சி உள்ளவர்கள் இதைப் பயன்படுத்துவதற்கு முன்பாக பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும். ஏனெனில், இவை உச்சந்தலையில் எரிச்சலை ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Tea Tree Oil Benefits: சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு தேயிலை மர எண்ணெய் தரும் நன்மைகள்
Image Source: Freepik