சோஃபா சேர் எதுக்கு? தரையில உட்கார்ந்து எழுந்திருங்க! ஏன்னு தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
சோஃபா சேர் எதுக்கு? தரையில உட்கார்ந்து எழுந்திருங்க! ஏன்னு தெரியுமா?


ஆனால் இன்றைய காலகட்டத்தில், சோஃபா சேரில் தான் நாம் நம் பொழுதை கழிக்கிறோம். வேலை செய்தல், உணவு அருந்துதல், பொழுது கழித்தல் என்று எல்லாவற்றிலும், சோஃபா சேர் போன்றவற்றில் அமர்ந்து தான் செய்கிறோம். இதனால் நம் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதற்கு நாம் தரையில் அமர்ந்து எழுந்திருக்க வேண்டும். இவ்வாறு தரையில் அமர்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இது குறித்து இங்கே விரிவாக காண்போம். 

செரிமானம் மேம்படும்: 

தரையில் அமர்ந்து சாப்பிட்டால், செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படும். தரையில் அமர்ந்து சாப்பிடும் போது முன்னோக்கி குனிந்து சாப்பிட வேண்டும். அவ்வாறு செய்யும்போது வயிற்று தசைகள் நகரும். இதன் காரணமாக, செரிமான சாறுகள் நன்றாக வெளியேறும். உணவு எளிதில் செரிமானம் ஆவதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும். தரையில் சம்மலம் போட்டு அமர்ந்து சாப்பிடும்போது மூளைக்கு சரியாக சிக்னல்கள் செல்லும். இது செரிமான அமைப்பை மேம்படுத்தும். 

இடுப்பு தசைகள் வலுப்பெறும்:

சேர் அல்லது சோஃபாவில் அமர்வதை விட தரையில் அமர்வதால் அதிக நன்மை கிடைக்கும். சேரில் அமர்வதால் இடுப்பு மூட்டு இறுக்கமாகிவிடும். ஆனால் தரையில் அமர்வது இடுப்பு நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இந்த முறை தசைகளை நீட்டவும், இயக்கத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இது ஒரு வகையான உடல் செயல்பாடு போன்றது. கீழே உட்கார்ந்திருப்பது கால்களின் கீழ் தசைகளை நீட்ட உதவுகிறது.

இதையும் படிங்க: Yoga For Heart: BP-யை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் 3 யோகாசனங்கள்!

முதுகு வலியில் இருந்து நிவாரணம்: 

முதுகுவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரையில் உட்கார்ந்திருப்பது மிகவும் நன்மை பயக்கும். தரையில் அமர்வதால் முதுகுத்தண்டு நேராக இருக்கும். இதனால் முதுகு சார்ந்த பிரச்னை குறையும். எனவே முதுகுவலியால் அவதிப்படுபவர்கள் தரையில் அமர்ந்து முயற்சி செய்யுங்கள்.

எடை குறையும்: 

தரையில் அமர்ந்து சாப்பிட்டால், எடை கட்டுக்குள் இருக்கும். சிலர் டைனிங் டேபிளில் அமர்ந்து எவ்வளவு சாப்பிட்டோம் என்று தெரியாமல் அதிகமாக சாப்பிடுவார்கள். இதனால் எடை கூடுகிறது. நாம் போதுமான அளவு சாப்பிட்டுவிட்டோமா? அல்லது வயிற்றில் இருந்து மூளைக்கு சரியான சிக்னல் அனுப்பப்படுகிறதா? என்று தெரிவதில்லை. டைனிங் டேபிளை விட தரையில் உட்கார்ந்து சாப்பிடும் போது உடல் சுறுசுறுப்பாக இருக்கும். நாம் போதுமான அளவு உணவை மட்டுமே சாப்பிட்டால், எடை கட்டுக்குள் இருக்கும். இதற்கு தரையில் அமர்ந்து சாப்பிடுவது உதவும். 

இரத்த ஓட்டம் மேம்படும்:

தரையில் சம்மலம் போட்டு உட்கார்ந்துகொள்வது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் இடுப்பைச் சுற்றியுள்ள தசைகளில் வலி குறையும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் பலம் கிடைக்கும்.

இந்த விவரங்கள் சுகாதார நிபுணர்கள் மற்றும் ஆய்வுகளின்படி வழங்கப்பட்டுள்ளன. உடல்நலம் தொடர்பான எந்த ஒரு சிறிய பிரச்சனைக்கும் மருத்துவர்களை அணுகுவதே சிறந்த வழி.

Image Source: Freepik

Read Next

குளிர்கால நோய்களை தடுக்க தொப்புளில் இந்த எண்ணெயை தடவி பாருங்கள்!

Disclaimer

குறிச்சொற்கள்