Rosemary Skin Benefits: சருமத்திற்கு ரோஸ்மேரி தரும் அற்புத நன்மைகள் என்னென்ன தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Rosemary Skin Benefits: சருமத்திற்கு ரோஸ்மேரி தரும் அற்புத நன்மைகள் என்னென்ன தெரியுமா?


இயற்கைத் தாவரமான ரோஸ்மேரியை ஒரு சக்தி வாய்ந்த மருந்து என்றே கூறலாம். உடலின் பல பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க ரோஸ்மேரி உதவுகிறது. வயிற்றுப்புண், ஹெபடோடாக்சிட்டி, இதய நோய், கண்புரை, அழற்சி நோய்கள், புற்றுநோய், மோசமான விந்தணு இயக்கம் போன்றவற்றின் சிகிச்சை அல்லது தடுப்பதற்கான ஆற்றலை ரோஸ்மேரி கொண்டுள்ளது.

தோலுக்கு ரோஸ்மேரி தரும் நன்மைகள்

உடல் நலப் பிரச்சனைகளுக்கு மட்டுமல்லாமல், சருமத்திற்கும் ரோஸ்மேரி உதவுகிறது. இப்போது முகத்திற்கு ரோஸ்மேரி தரும் நன்மைகள் சிலவற்றைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Ways To Remove Dark Spots: முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் மறைய சில வழிகள்!

முகப்பருக்களை நீக்க

ரோஸ்மேரியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றூம் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளது. இவை முகப்பருவை நீக்குவதற்கு ஒரு இயற்கை தீர்வாகக் கருதப்படுகிறது. முகப்பரு வளர்ச்சிக்கு ப்ரோபியோனிபாக்டீரியம் ஆக்னஸ் என்ற பாக்டீரியா காரணமாகிறது. இந்த பாக்டீரியாவிற்க எதிரான பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளை ரோஸ்மேரி சாறு கொண்டுள்ளது. எனவே சரும பராமரிப்பில் ரோஸ்மேரி சாறு முக்கிய பங்கு வகிக்கிறது. இவை முகப்பருவை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது.

முதுமை எதிர்ப்புக்கு

சில உணவு முறைகள் மற்றும் கால நிலை மாற்றங்களால் விரைவாகவே முதுமை சருமத்தைப் பெறுவர். முதுமை அடைவதன் பண்பாக தோலில் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் ஏற்படும். இவை இரண்டையும் குறைப்பதற்கு ரோஸ்மேரி உதவுகிறது. எனவே, வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராடுவதில் ரோஸ்மேரி நன்மை தருகிறது.

காயத் தழும்புகளைத் தடுக்க

முகத்தில் காயம் ஏற்பட்டு நீங்கிய பிறகு தழும்புகள் ஏற்படும். இந்த தழும்புகளை இயற்கை முறையில் நீக்க ரோஸ்மேரி ஒரு நீண்ட கால மருத்துவ தாவரமாக பயன்படுத்தப்படுகிறது. இவை காயங்களைக் குணப்படுத்துவதுடன் அதன் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இவை வடுவைக் குறைக்க உதவுகின்றன. ரோஸ்மேரியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் காயத்தின் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Strawberry Face Scrub : சரும அழகை பராமரிக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி ஸ்க்ரபை வீட்டிலேயே செய்யலாம்!

சுத்திகரிப்பு செயல்முறை

ரோஸ்மேரி இயற்கையான அஸ்ட்ரிஜென்ட் ஆகும். இது சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் சருமத்தைச் சுத்தப்படுத்துவதுடன், வெடிப்புகளைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அசுத்தங்களை நீக்க உதவுகிறது. எனவே எண்ணெய் அல்லது முகப்பருவால் பாதிக்கப்பட்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு இது சிறந்த மூலப்பொருளாகும்.

தோல் அமைப்பை மேம்படுத்த

ரோஸ்மேரியை சருமத்திற்குத் தடவி வர இரத்த ஓட்டம் மேம்பாடடைகிறது. மேலும் தோலின் செல்களை புதுப்பிக்க உதவுகிறது. இவை சருமத்தின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இவை சருமத்தை மென்மையாக, பளபளப்பாக மற்றும் இயற்கையாக வைத்திருக்க உதவுகிறது.

இது போன்ற ஏராளமான நன்மைகளைக் கொண்ட சரும மேம்பாடு மற்றும் பாதுகாப்பில் ரோஸ்மேரி உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Natural Skin Care Tips: அழகான சருமத்திற்கு இயற்கையான சில வீட்டுக்குறிப்புகள்!

Image Source: Freepik

Read Next

Kiwi Face Mask: சொன்னா நம்ப மாட்டிங்க, கிவி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க ஒரே வாரத்தில் முகம் வெள்ளையாகும்!

Disclaimer