மாதவிடாய் பிரச்சனைக்கான ஆயுர்வேத தீர்வு!

  • SHARE
  • FOLLOW
மாதவிடாய் பிரச்சனைக்கான ஆயுர்வேத தீர்வு!


மாதவிடாய் பிரச்சனைகளை ஆயுர்வேத மருத்துவ முறை படி எளிதில் குணமாக்க முடியும். மாதவிடாய் தள்ளிப்போகும் போது அதனை அலட்சியப்படுத்தாமல், அதற்கான தீர்வை கண்டறிந்தாலே போதும். அவற்றை குணப்படுத்திடலாம். அதிகமான உதிரபோக்கு, குறைவான உதிரபோக்கு, மாதவிடாய் வராமல் இருப்பது என பல பிரச்சனைகளை ஆயுர்வேத முறைபடி எளிதில் குணப்படுத்திடலாம். 

வெள்ளை செம்பருத்தி:

வெள்ளை செம்பருத்தி பூக்களின் மொட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை நன்றாக சுத்தம் செய்து உள்ளிருக்கும் மகரந்த காம்பை நீக்க வேண்டும். இதனை அரிசியுடன் சேர்த்து அரைத்து பேஸ்ட் போல் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை இரவு தூங்குவதற்கு முன் ஒரு டீஸ்பூன் சாப்பிட வேண்டும். இதனை ஏழு நாட்களுக்கு தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். 

கருப்பு எள்:

பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்க, கருப்பு எள் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் வைட்டமின் பி, இ, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் உள்ளன. இதனை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

புளி நரம்பு:  

புளிய மரத்தின் நுனியில் இருக்கும் நரம்புகளை மட்டும் தனியாக எடுக்க வேண்டும். இந்த நரம்புகளை அரிசி நீரில் சேர்த்து மசித்து ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிடவும். இதனை  ஒருவாரம் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இது மாதவிடாய் சிக்கல்களை தீர்ப்பதோடு அது வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கும் மருந்தாகும்.

மேற்கூறிய குறிப்புகளை பின்பற்றுவது உங்களை மாதவிடாய் பிரச்சனையில் இருந்து காக்கும். இருப்பினும் இவற்றை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், இவை பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் ஆயுர்வேத முறையை பின்பற்றும் முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. 

Image Source: Freepik

Read Next

Guava Leaves Benefits: மழைக்காலத்தில் கொய்யா இலையை சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?

Disclaimer

குறிச்சொற்கள்