Ajinomoto side effects: அஜினோமோட்டோ என்ற வார்த்தையை பலர் கேள்விப்பட்டிருந்தாலும், சிலர் கேள்வியேப்பட்டிருக்க மாட்டீர்கள். இதில் பல உணவகங்களில் சுவையை அதிகரிக்க உணவில் பயன்படுத்தப்பட்டது.
இன்றளவும் சில இடங்களில் இது பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதை உணவில் பயன்படுத்தினால் சுவை அதிகரிக்கும். ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் இதுபோன்ற உணவுகளை கடைகளில் வாங்கும் போது, அஞ்சரை பெட்டி போன்ற டப்பாவில் இருந்து பல மசாலை பொருட்களை கொஞ்சம் கொஞ்சம் தூவிவிடுவார்கள். இதில் அஜினோமோட்டோ இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
உயிருக்கே ஆபத்தாகும் அஜினாமோட்டோ
எந்தவகை உணவில் அஜினோமோட்டோவை கலந்தாலும் அதன் சுவை பல மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அப்படி சுவையை அதிகரிக்கும் அளவு இதில் என்னதான் இருக்கிறது என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். சீன உணவு பழக்கத்தில் அஜினோமோட்டோ இயல்பாகவே பயன்படுத்தப்படுகிறது.
அஜினாமோட்டோ என்றால் என்ன?
அஜினாமோட்டோவை வெறும் வாயில் போட்டால் இது ஒருமாதிரியான உப்பு போன்ற வித்தியாச சுவையைக் கொண்டிருக்கும். சீனர்கள் இதை நூடுல்ஸ், ஃப்ரைட் ரைஸ், சூப் போன்றவற்றில் பயன்படுத்தினார்கள். இந்த உணவு இந்தியாவில் பிரபலமடையும் போதுதான் இந்த அஜினோமோட்டோவும் வளர்ச்சியடைந்தது.
அஜினோமோட்டோவில் குளிட்டமிக் அமிலம் உள்ளது. இது மூளையில் நரம்பு கடத்தியாக செயல்பட்டு உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதை அதிகம் பயன்படுத்தும் போது குளுட்டமிக் நரம்பு செல்களை அழிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அஜினோமோட்டாவால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள்
அஜினாமோட்டோவை அதிகம் சாப்பிடுவது உடலில் வியர்வையை உண்டாக்கி நீரிழப்பு பிரச்சனையை ஏற்படுத்தி சோர்வை உண்டாக்கும். வயிற்றில் எரியும் உணர்வை ஏற்படுத்தவும், தசை, மூட்டு வலியை உண்டாக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் ஒட்டு மொத்த செரிமான அமைப்பிலும் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
மேலும் இதில் உள்ள மோனோசோடியம் குளுட்டமேட்டானது தூங்கும் போது சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும். இதை அதிகம் சாப்பிடுவது புற்றுநோய் செல்களை இனப்பெருக்கம் செய்ய வைத்து பெருங்குடல் புற்றுநோய்க்கும் வழி வகுக்கும் என கூறப்படுகிறது.
அஜினாமோட்டோவில் கவனம் தேவை
அயல் நாடுகளில் அஜினோமோட்டோ பயன்படுத்தினால் அதை வெளிப்படையாக எழுத வேண்டும் என சட்டமே இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் இன்னும் சில இடங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி தான் வருகின்றனர்.
முடிந்த அளவு ஆரோக்கியமான உணவிற்கு முக்கியத்துவம் கொடுங்கல். குறிப்பாக உங்கள் நலனோடு, உங்கள் பெற்றோர்கள், குழந்தைகள் நலனில் கவனம் செலுத்துங்கள். உணவே மருந்து என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவு முறை என்பது மிக முக்கியம்.
Image Source: FreePik