மூன்று பெரிய பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு.. இந்த ஐந்து உணவுகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க போதும்

இன்று பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளாக உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் போன்றவை உள்ளன. எனினும், சில எளிய உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் இதிலிருந்து விடுபடலாம். இதில் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் போன்றவற்றிலிருந்து விடுபட உதவும் உணவுகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
மூன்று பெரிய பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு.. இந்த ஐந்து உணவுகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க போதும்


இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையால் பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் நீரிழிவு, எடை மேலாண்மை மற்றும் இதய ஆரோக்கியம் போன்ற நாள்பட்ட பிரச்சனைகள் பொதுவானதாக மாறிவிட்டது. இவை மூன்றுமே பெரும்பாலும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாகும். உதாரணமாக, உடல் பருமன் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் என்றும், பிந்தையது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

இந்த பிரச்சினைகள் அனைத்தும் நம்பமுடியாத அளவிற்கு சிக்கலானவை ஆகும். மேலும் இது பல காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. எனினும், இந்த பிரச்சனைகளுக்கு மூலக்காரணமாக உணவுமுறை அமைகிறது. எனவே இந்த பிரச்சினைகள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கவும், அவற்றின் விளைவுகளைக் கட்டுப்படுத்தவும் சீரான உணவுமுறையைக் கையாள வேண்டும். அவ்வாறு இந்த மூன்று பிரச்சனைகளையும் திறம்பட நிர்வகிப்பதில் பல வகையான உணவுகள் உதவுகின்றன. இதில் எடை அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் இதய நோயைத் தவிர்க்க சாப்பிட வேண்டிய உணவுகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Calcium Rich Foods: பாலை விட அதிக கால்சியம் நிறைந்த உணவுகள் இங்கே.

நீரிழிவு மேலாண்மை, எடை இழப்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய உணவுகள்

பாதாம்

பாதாம் மக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இதய ஆரோக்கியத்தையும் ஆதரிக்கவும் உதவுகிறது. மேலும், இதில் உள்ள புரதம் பசியைக் கட்டுப்படுத்தவும், மனநிறைவை ஊக்குவிக்கவும் உதவும். கூடுதலாக இவை அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். எனவே இது எடை மற்றும் நீரிழிவு மேலாண்மைக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சில பாதாம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

பாலக்கீரை

உடல்நலப் பிரச்சனைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பச்சை இலை காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. இவை பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்ததாகும். இது உடலுக்கு அதிசயங்களைச் செய்யக்கூடிய நன்மை பயக்கும் தாவர கலவைகளால் நிரம்பியுள்ளது. மேலும், கீரையில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து மற்றும் நீர் உள்ளடக்கம் போன்றவை எடை இழப்பு உணவுகள் மற்றும் நீரிழிவு உணவுகள் இரண்டிற்கும் ஒரு சிறந்த கூடுதலாக அமைகிறது. மேலும் இதில் நைட்ரேட்டுகளும் உள்ளது. இவை இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் என்று கூறப்படுகிறது.

ஓட்ஸ்

இது மாங்கனீசு, பாஸ்பரஸ், மெக்னீசியம், தாமிரம், இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட தாதுக்களின் ஆற்றல் மையமாக விளங்குகிறது. மேலும், இதில் உள்ள பீட்டா-குளுக்கன், கரையக்கூடிய நார்ச்சத்து வகையாகும். இவை கெட்ட கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது. ஓட்ஸ் ஊட்டச்சத்து நிறைந்த ஆற்றலை வழங்குவதால் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவை உடலுக்கு ஊட்டமளிக்கும் அதே வேளையில், கூடுதல் கிலோவைக் குறைக்கவும் உதவுகிறது. சீலாக்கள், தோசைகள் மற்றும் பிற காலை உணவுகளை ஓட்ஸ் பயன்படுத்தி தயார் செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தான்! ஆனா, இதை அதிகம் சாப்பிட்டா பிரச்சனை உங்களுக்குத் தான்

ராகி

தானிய வகையைச் சேர்த்த ராகி பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்களின் நல்ல மூலமாக விளங்குகிறது. இது ட்ரைகிளிசரைடுகள், எல்டிஎல் கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது இதயத்திற்கு உகந்த ஒரு மூலப்பொருளாகக் கருதப்படுகிறது. ராகியில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் நீரிழிவு மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது எடை மேலாண்மைக்கும் நன்மை பயக்கும்.

பச்சைப்பயிறு

பச்சைப் பயறில் காணப்படக்கூடிய ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இவை இரண்டுமே இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை ஆகும். மேலும், இதில் குறைந்த அளவிலான கிளைசெமிக் குறியீடு உள்ளது. இது தவிர இதில் உள்ள அதிகளவு நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளது. இதை உட்கொள்வது நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கவும், இரத்த சர்க்கரை அதிகரிப்பைத் தவிர்க்கவும் உதவுகிறது. மேலும், எடையைக் குறைக்க அல்லது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த விரும்புவோர்க்கு இது மிகவும் நன்மை பயக்கும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Healthy Fat Foods: ஆரோக்கியமான கொழுப்புகளை உங்கள் டயட்டில் சேர்ப்பது முக்குயம்.. இங்கே சில உணவுகள்

Image Source: Freepik

Read Next

தினமும் அப்பளம் சாப்பிடுபவர்களா நீங்க? இது தெரிஞ்சா இனிமே சாப்பிட மாட்டீங்க

Disclaimer