உலக தற்கொலை தடுப்பு தினத்தின் முக்கியத்துவம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

  • SHARE
  • FOLLOW
உலக தற்கொலை தடுப்பு தினத்தின் முக்கியத்துவம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை


World Suicide Prevention Day 2024: ஆண்டுதோறும் உலக தற்கொலை தடுப்பு தினம் செப்டம்பர் 10 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளின் முக்கியத்துவமாக தற்கொலை தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், மன தைரியத்தை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்கொலை தடுப்புக்கான சர்வதேச சங்கம் (IASP) உலக சுகாதார அமைப்புடன் இணைந்து இந்த தினத்தை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் இது சமூக ஆதரவின் முக்கியத்துவம், உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஆரம்பத் தலையீட்டையும் குறிக்கிறது.

உலகளவில் ஏராளக்கணக்கானோர் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை எண்ணங்களால் அவதியுறுகின்றனர். இது ஒரு பெரிய பொது சுகாதார சவால் என்றே உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இதில் ஒவ்வொரு தற்கொலையும் சமூக, உணர்ச்சி மற்றும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் சமூகங்களை ஆழமாக பாதிக்கும் விதமாகவும் தற்கொலை எண்ணம் அமைகிறது. இந்த நாளின் முக்கிய நோக்கமாக தற்கொலையைத் தடுக்கலாம் என்ற விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்துவதே ஆகும்.

இந்த பதிவும் உதவலாம்: மொபைல் போன் பயன்படுத்துவதால் மூளை புற்றுநோய் ஏற்படாது - WHO தகவல்!

உலக தற்கொலை தடுப்பு நாள், தேதி

தற்கொலைத் தடுப்பில் கவனம் செலுத்துவதற்கான உலகளாவிய அர்ப்பணிப்பை இந்த நாள் எடுத்துக் கூறுகிறது. உலகளவில் 100 இறப்புகளில் ஒன்று தற்கொலையால் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இது தற்கொலை பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கும், செயலில் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளை மேம்படுத்துவதற்கும் தற்கொலைத் தடுப்பு நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இது உலகளவில் தற்கொலை எண்ணிக்கையைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக தற்கொலை தடுப்பு தினம் செப்டம்பர் 10 ஆம் நாள் அன்று அனுசரிக்கப்படுகிறது.

2024-2026 ஆம் ஆண்டிற்கான உலக தற்கொலை தடுப்பு தினத்தின் கருப்பொருள், "உரையாடலைத் தொடங்கு" என்ற அழைப்புடன் "தற்கொலை பற்றிய கதையை மாற்றுதல்" ஆகும். இந்த கருப்பொருளானது “களங்கத்தைக் குறைப்பதன் முக்கியத்துவம் மற்றும் தற்கொலைகளைத் தடுக்க திறந்த உரையாடல்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தைப்” பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலக தற்கொலை தடுப்பு நாள் வரலாறு

2003 ஆம் ஆண்டில் WHO உடன் இணைந்து தற்கொலை தடுப்புக்கான தினம் சர்வதேச சங்கத்தால் நிறுவப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரச்சனையில் கவனம் செலுத்துவதும், களங்கத்தைக் குறைப்பதும் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், தற்கொலைகளைத் தடுக்கக்கூடிய செய்தி வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Side effects of overeating: அளவுக்கு அதிகமா சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா?

உலக தற்கொலை தடுப்பு தினத்தின் முக்கியத்துவம்

உலகளவில் மரணத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றான தற்கொலை பிரச்சனைக்கு கவனம் செலுத்துவதை நோக்கமாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் தற்கொலை எண்ணங்களுடன் போராடும் நபர்களுக்கு ஆதரவு, ஆரம்பகால தலையீடு மற்றும் மனநல விழிப்புணர்வு போன்றவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இந்த தினத்தின் முக்கியத்துவமாக மக்கள் தங்கள் மன ஆரோக்கியத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசவும் அனுமதிக்கிறது.

தற்கொலை எண்ணங்களைத் தடுப்பது எப்படி?

  • தற்கொலை எண்ணங்களை எதிர்த்துப் போராட எளிதான இடத்தில் இருக்க வேண்டும். நண்பர்களின் வீடு, நூலகங்கள் அல்லது பிற பொது இடங்கள் போன்றவை இருக்கலாம்.
  • மனதை நிதானமாக வைத்துக் கொள்வதன் மூலம் தற்கொலை எண்ணங்களைத் தடுக்கலாம். இசை கேட்பது, நல்ல உணவை உண்ணுதல், விரும்பும் படங்கள், வீடியோக்கள் பார்ப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.
  • ஆல்கஹால் மற்றும் பிற பொருள்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை நிலைமையை மேலும் மோசமாக்கலாம்.
  • மன அமைதிக்கு யோகா, தியானம், உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

இந்த எளிதான வழிமுறைகளின் மூலம் தற்கொலை எண்ணங்களைத் தடுக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஸ்லீப் பாராலிசிஸ் எதனால் ஏற்படுகிறது தெரியுமா? அதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

Image Source: Freepik

Read Next

வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்குறீங்களா.? இதை நினைவில் கொள்ளவும்..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version