World Hepatitis Day 2024: மழைக்காலத்தில் ஹெபடைடிஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியவை?

  • SHARE
  • FOLLOW
World Hepatitis Day 2024: மழைக்காலத்தில் ஹெபடைடிஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியவை?

பொதுவாக ஹெபடைடிஸ் என்பது கல்லீரல் அழற்ஜியைக் குறிக்கிறது. இது மது அருந்துதல், வைரஸ் தொற்று மற்றும் பல சுகாதார நிலைகளால் ஏற்படுவதாகும். உலகளவில் மில்லியன் கணக்கிலான மக்கள் ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி மற்றும் ஈ போன்ற ஐந்து வகைகள் காணப்படுகிறது. இந்த ஒவ்வொரு வகைக்கும் வெவ்வேறு காரணங்கள் உள்ளது. இதில் ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ இரண்டும் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு உட்கொள்வதால் ஏற்படுகிறது. மேலும் ஹெபடைடிஸ் பி, சி மற்றும் டி போன்றவை பாதிக்கப்பட்ட உடல் திரவங்களின் மூலம் பரவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு பரவல்! மக்களே உடனே இத செய்யுங்க

மழைக்காலத்தில் ஹெபடைடிஸின் தாக்கம்

பொதுவாக மழைக்காலத்தில் ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ போன்ற இரண்டு நோய்களின் தாக்கங்கள் அதிகமாகவே காணப்படும். ஏனெனில் இவை அசுத்தமான உணவு, தண்ணீரால் பரவக் கூடியதாகும். இந்நிலையில் மழைக்காலத்தில் அதிக மழைப்பொலிவு காரணமாக நீர் நிலைகள் மற்றும் நீராதரங்கள் மாசுபடலாம். இதில் மக்கள் அசுத்தமான நீரை உட்கொள்வது அதிகமாகிறது. இதன் ஹெபடைட்டிஸ் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கிறது. மேலும் மழைக்காலமானது கொசுக்கள் மற்றும் பிற நோய்க்கிருமிகளின் இனப்பெருக்கத்திற்கு சாதகமான சூழல் அமைவதால், இது ஹெபடைடிஸ் பரவுவதற்கு வழிவகுக்கிறது.

இதில் வைரஸ் தொற்றுக்கள் முதன்மையாக மல-வாய்வழி பாதையில் பரவி கல்லீரல் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. இது காய்ச்சல், குமட்டல், வாந்தி, பசியின்மை, வயிறு அசௌகரியம் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகளை உண்டாக்குகிறது. மேலும், கடுமையான சந்தர்ப்பங்களில் இது கடுமையான கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுப்பதுடன், உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தலாம். எனவே மழைக்காலத்தில் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு குறிப்பிடத்தக்க தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியமாகும்.

மழைக்காலத்தில் ஹெபடைடிஸ் நோயைத் தவிர்க்க உதவும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

மழைக்காலத்தில் சில குறிப்பிடத்தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளின் உதவியுடன் ஹெபடைடிஸ் நோயைத் தவிர்க்க முடியும்.

நீர் பாதுகாப்பை உறுதி செய்வது

மழைக்காலத்தில் அசுத்தமான நீர் காரணமாக ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ போன்ற குறிப்பிடத்தக்க நோய்கள் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் அசுத்தமான மூலங்களிலிருந்து அல்லது சரிபார்க்கப்படாத தண்ணீர் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். நீரை நன்கு கொதிக்க வைத்து வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். இவ்வாறு நீரைக் கொதிக்க வைக்கும் போது பெரும்பாலான நோய்க்கிருமிகள் கொல்லப்பட்டு குடிப்பதை பாதுகாப்பானதாக மாற்றுகிறது.

உணவு பாதுகாப்பு முறை

ஹெபடைடிஸ் நோய்க்கு மற்றொரு பொதுவான காரணமாக உணவு மாசுபாடு ஆகும். பச்சைக் காய்கறிகளை சுத்தமான தண்ணீரில் கழுவி விடுவதன் மூலம் அவற்றைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக வெளியில் சாப்பிடும் போது நல்ல சுகாதாரத்தை பராமரிக்கும் இடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: World Hepatitis Day 2024: ஹெபடைடிஸ் தொடர்பான கட்டுக்கதைகளை நம்புகிறீர்களா.? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்..

தனிப்பட்ட சுகாதார முறைகள்

வைரஸ் ஹெபடைடிஸ் பரவுவதைத் தடுக்க நல்ல தனிப்பட்ட சுகாதாரத்தைப் பராமரிப்பது மிகவும் முக்கியமாகும். அதன் படி, கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு, வெளியில் சென்று வீட்டிற்குத் திரும்பிய பிறகு, உணவைக் கையாளும் முன்பும் சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை நன்கு அடிக்கடி கழுவ வேண்டும். மேலும், ஈரப்பதம் அதிகம் இல்லாமல் சுத்தமான மற்றும் வறண்ட சூழலைப் பராமரிக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்துதல்

ஹெபடைடிஸ் ஏ தொற்றுக்களைத் தடுக்க தடுப்பூசி மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் படி, இந்த வைரஸூக்கு எதிராக நீண்டகால பாதுகாப்பை வழங்கும் தடுப்பூசிகள் உள்ளது. குறிப்பாக, அதிக ஆபத்தில் இருப்பின் அல்லது ஹெபடைடிஸ் ஏ அதிகமாக உள்ள பகுதிகளுக்குச் செல்வதாக இருப்பின், மருத்துவரை அணுகி தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது.

மருத்துவ உதவியை நாடுதல்

ஹெபடைடிஸ் நோய்த்தாக்குதால் காய்ச்சல், பசியின்மை, குமட்டல், வாந்தி, வயிறு அசௌகரியம், மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகளை சந்திக்க நேர்ந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது நல்லது. மேலும் ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சையானது ஹெபடைடிஸ் நோயின் சிக்கல்களைத் தடுக்கவும், விரைவாக நோயிலிருந்து மீட்கவும் உதவுகிறது.

இது போன்ற, பாதுகாப்பு நடவடிக்கைகளை மழைக்காலத்தில் மேற்கொள்வதன் மூலம் ஹெபடைடிஸ் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: World Hepatitis Day: உலக ஹெபடைடிஸ் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கருப்பொருள் இங்கே.

Image Source: Freepik

Read Next

Hyderabad Chikungunya Cases: குழந்தைகளை குறிவைக்கும் சிக்குன்குனியா.. தடுப்பு நடவடிக்கை இங்கே..

Disclaimer