கர்ப்ப காலம் மட்டுமின்றி ஒரு குழந்தையை சிறுவனாக வளர்ப்பதற்கு பெற்றோர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் வரை பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். காரணம், குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என அவர்களால் சொல்ல முடியாது, அதை பெற்றோர்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
இதில் மிக குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் குழந்தைகள் பொதுவாக பால் குடித்ததும், குடித்த பால் மூக்கு மற்றும் வாய் வழியாக திரும்ப வரக்கூடும். இது அனைத்து நேரத்திலும் பொதுவானது என கூறிவிட முடியாது. இதை சிலர் எதுக்களித்தல், ஓங்கரித்தல் என குறிப்பிடுவது உண்டு.
அதிகம் படித்தவை: Drinking Enough Water: தண்ணீர் மட்டும் குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க முடியுமா?
குழந்தைகளால் தங்கள் பிரச்சினைகளை பெற்றோரிடம் வாய்மொழியாக வெளிப்படுத்த முடியாது. அத்தகைய சூழ்நிலையில், பெற்றோர்கள் குழந்தையின் நடத்தையை அடையாளம் கண்டு, அவருடைய பிரச்சனையை யூகிக்க வேண்டும். தாயின் பால் குடித்த பிறகு குழந்தைகள் வாந்தி எடுப்பதை நீங்கள் அடிக்கடி கவனித்திருப்பீர்கள். உண்மையில், இது பலவீனமான செரிமான செயல்முறையின் அறிகுறியாகும்.
குழந்தை எதுக்களித்தல் காரணம் என்ன?
- பல முறை குழந்தை இரைப்பை, உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் காரணமாக வாந்தி எடுக்கிறது.
- இந்த நேரத்தில் குழந்தை வாய் மற்றும் மூக்கில் இருந்து பால் வெளிப்படுகிறது.
- பெற்றோர்கள் பொறுமையாக இருந்து இதற்கான காரணத்தை அறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குழந்தை ஏன் வாய் மற்றும் மூக்கிலிருந்து வாந்தி எடுக்கிறது என்று இன்ஸ்டாகிராமில் குழந்தையைப் பற்றிய தகவல்களை வழங்கும் குழந்தை மருத்துவ மருத்துவர் சூரஜ் யாதவ் வழங்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
குழந்தைக்கு வாய் மற்றும் மூக்கில் பால் திரும்ப வர காரணம் என்ன?
அதீத உணவு
பல சமயங்களில் குழந்தைகள் அளவு தெரியாமல் தேவைக்கு அதிகமாக பால் குடித்துவிடுகிறது. அந்த குழந்தையின் சிறிய வயிற்றில் அதிகமான பாலை கையாள முடியாததால் கூடுதலான பால் தானாகவே வெளியேறிவிடுகிறது.
இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ்
GERD எனப்படும் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் என்பது உணவுக் குழாயில் மீண்டும் குடித்த பால் வெளியேறும் நிலையாகும். இதன் காரணமாகவே மூக்கு மற்றும் வாய் வழியாக பால் வெளியேறுகிறது.
முறையாக உணவளிக்காதது
குழந்தைக்கு பால் குடிக்கும் போது அவர்களின் தலை கீழ்நோக்கி இருந்தாலோ அல்லது சரியாக பிடிக்கப்படாமல் இருந்தாலோ பால் தொண்டையிலேயே சிக்கி நிற்கிறது. இது சமயங்களில் மூக்கு மற்றும் வாய் வழியாக வெளியேறுகிறது.
ஒவ்வாமை பிரச்சனை
தாய் உண்ணும் சில உணவுகள் காரணமாகவும் அதீத வாசனையின் காரணமாகவும் குழந்தைக்கு சமயத்தில் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படுகிறது. இதன் காரணமாக குழந்தைக்கு செரிமான பிரச்சனை ஏற்படுத்து பால் வெளியேறுகிறது.
பலவீனமான செரிமான அமைப்பு
குழந்தையின் செரிமான அமைப்பு என்பது சரியாக வளர்ச்சியடையவில்லை என்றாலும் இந்த நிகழ்வு ஏற்படுகிறது. குழந்தைகள் குடித்த பால் தானாகவே மூக்கு மற்றும் வாய் வழியாக வெளியேறுகிறது.
இதையும் படிங்க: நிற்காத வயிற்றுப்போக்கைக் குணப்படுத்த தேன் உதவுமா? அப்படினா எப்படி சாப்பிடலாம்?
குழந்தைக்கு மூக்கு வழியாக பால் மீண்டும் வந்தால் என்ன செய்வது? (குழந்தை ஓங்கரித்தால் என்ன செய்வது)
- குழந்தைக்கு சரியான நிலையில் உணவளிக்கவும்.
- குழந்தைக்கு பால் ஊட்டும் போதெல்லாம், தலையை சற்று உயர்த்தி வைக்கவும்.
- கொஞ்சம் கொஞ்சமாக பால் கொடுங்கள். ஒரே நேரத்தில் குழந்தைக்கு அதிக பால் கொடுக்க வேண்டாம்.
- ஒவ்வொரு முறையும் உணவளித்த பிறகு குழந்தையுடன் சற்று விளையாடுங்கள், அதேபோல் நன்றாக தூங்குகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- நிலைமை மீண்டும் மீண்டும் ஏற்பட்டால் அல்லது குழந்தை மனச்சோர்வடைந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
pic courtesy: freepik