குழந்தை பிறந்தவுடன் எவ்வளவு நாளில் மொட்டையடிக்க வேண்டும்?

  • SHARE
  • FOLLOW
குழந்தை பிறந்தவுடன் எவ்வளவு நாளில் மொட்டையடிக்க வேண்டும்?


பிறந்த குழந்தைக்கு மொட்டையெடுப்பது வழக்கம். ஒவ்வொரும் தங்கள் விருப்பதற்கு ஏற்ப ஒவ்வொரு கோயில்களில் மொட்டை எடுப்பார்கள். பொதுவாக மொட்டை எடுப்பது, குழந்தை முந்தைய பிறவிகளின் கடன்கள் மற்றும் பாவங்களிலிருந்து விடுதலை பெறுகிறது என்று நம்பப்படுகிறது. அதேபோல் விஞ்ஞானத்தின்படி மொட்டை எடுப்பது குழந்தைக்கு முடி வலுவாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும்.

இது ஒருபுறம் இருந்தாலும் பலருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம் என்னவென்றால் குழந்தை பிறந்த எத்தனை தினங்களில் மொட்டை எடுக்க வேண்டும் என்பதுதான். குழந்தைக்கு எப்போது மொட்டை எடுக்க வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன எடுக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

குழந்தைக்கு எப்போது மொட்டை எடுக்கலாம்?

ஒரு குழந்தைக்கு மொட்டை அடிப்பதற்கு 1 முதல் 3 வயது வரைதான் சரியான வயது. இந்த காலகட்டத்தில், குழந்தையின் தலையில் உள்ள முடி துளைகள் பிறந்த பிறகு மூடப்பட்டுவிடும், அதன் பிறகு முடியை மொட்டை எடுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.

அதுமட்டுமின்றி, பிறந்த உடனேயே குழந்தையின் தலையின் எலும்புகள் கழுத்துடன் சரியாக இணைக்கப்படுவதில்லை. இதனால் குழந்தையின் தலை அங்கும் இங்கும் ஆடிக்கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தையின் தலையில் கைகளை வைத்தால் எலும்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

நிபுணர்களின் கூற்றுப்படி, குழந்தை பிறந்த உடனேயே மொட்டையடித்து, பிளேடால் குழந்தையின் தலையில் ஒரு சிறிய கீறல் கூட இருந்தால், மூளை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த காரணத்திற்காக, 9 முதல் 11 மாதங்களுக்குள் குழந்தைக்கு மொட்டை எடுப்பது நல்லது.

குழந்தைக்கு மொட்டை எடுக்கும் போது தேவையான முன்னெச்சரிக்கைகள்

குழந்தையை மொட்டையடிப்பதற்கு முன், அனுபவம் வாய்ந்த முடிதிருத்தும் ஒருவரை பெற்றோர் தேர்வு செய்ய வேண்டும். இதன்மூலம் குழந்தையின் தலை பகுதியில் கீறல் அல்லது ஆழமான காயம் ஏற்படாமல் தடுக்க முடியும்.

மொட்டை எடுக்கும் போது எந்த பிளேடு அல்லது ரேஸர் பயன்படுத்தினாலும் முதலில் கிருமி நாசினியால் சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் தொற்று நோய் வராமல் தடுக்கலாம்.

உங்கள் குழந்தைக்கு எந்த இடத்தில் மொட்டை எடுத்தாலும், முதலில் அதை சரியாக சுத்தம் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைக்கு தொற்று நோய் ஏற்படாது.

குழந்தைக்கு மொட்டை எடுக்கும் போது, ​​குழந்தை தலையை அங்கும் இங்கும் அசைக்காமல், கவனத்தைத் திசைதிருப்பும் வகையில், ஒரு பொம்மையை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

மொட்டை எடுத்த பிறகு, குறைந்தது 1 வாரத்திற்கு ஷாம்பு மற்றும் எண்ணெய் கொண்ட எந்த விதமான ரசாயனத்தையும் பயன்படுத்த வேண்டாம். ரசாயனங்கள் கொண்ட ஷாம்புகள் குழந்தையின் உச்சந்தலையில் தீங்கு விளைவிக்கும், இதன் காரணமாக அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படலாம்.

அதேபோல் பலர் மொட்டை எடுத்த உடன் தலையில் சந்தனம் தடவுவது உண்டு. பெரியவர்களுக்கு அதுசரி., ஆனால் குழந்தைகளுக்கு அவ்வளவு சந்தனம் தடவக்கூடாது. லேசாக மட்டும் தடவுவது நல்லது. காரணம் சந்தனம் அதிகம் தடவினால் குழந்தைக்கு உடனடியாக சளி பிடிக்க வாய்ப்புள்ளது.

Image Source: FreePik

Read Next

Tooth Decay Tips: சிறு குழந்தைகளை எளிதில் அட்டாக் செய்யும் பற்சொத்தை! எப்படி தடுப்பது?

Disclaimer

குறிச்சொற்கள்