$
Women's Health: தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலரும் தங்கள் ஆரோக்கியத்தை கவனம் செலுத்துவதில்லை. அதேநேரத்தில் இன்றைய காலக்கட்டத்தில் அலுவலகத்துடன் வீட்டையும் நிர்வகிக்கும் பெண்களும் ஏராளம். அத்தகைய சூழ்நிலையில், மற்ற அனைத்தையும் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலரும் தங்களை கவனித்துக் கொள்ள மறக்கின்றனர்.
இதன் காரணமாக பெண்களின் உடலில் சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறையத் தொடங்குகின்றன. இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.
ஆரோக்கியமாக இருக்க, பெண்கள் அவ்வப்போது உடல்நலப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், மேலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் பெண்கள் எந்த ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்படுகின்றனர். இதை போக்க இயற்கையான வழிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பெண்களுக்கு எந்த ஊட்டச்சத்து குறைபாடுகள் அதிகம்?
பெண்களின் உடல் மற்றும்மன ஆரோக்கியம் பராமரிப்பில் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும்.

இரும்புச்சத்து
பெண்கள் பெரும்பாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர், இதன் காரணமாக பல பெண்கள்இரத்த சோகைக்கு பலியாகின்றனர். இரும்புச்சத்து உடலில் இரத்தத்தை உருவாக்க உதவுகிறது.
இரும்புச்சத்து குறைபாட்டை போக்க பெண்கள் சமையலில் ஆரோக்கியமான உணவை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட அசை உணவுகளையும் கீரை, பெருங்காயம், எள், பீன்ஸ், பட்டாணி, பயறு போன்ற உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
செலினியம்
செலினியம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும், இது பல்வேறு நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இந்தக் குறைபாட்டைப் போக்க, பெண்கள் தங்கள் உணவில் சூரியகாந்தி விதைகள், பழுப்பு அரிசி மற்றும் பருப்புகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அசைவ உணவு உண்பவராக இருந்தால் மீன், கோழி, இறால் போன்றவற்றையும் உட்கொள்ளலாம்.
மெக்னீசியம்
மெக்னீசியம் எலும்பு வலிமை, உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இந்தக் குறைபாட்டைப் போக்க பெண்கள் பாதாம், கீரை, பூசணிக்காய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அசைவ உணவு உண்பவராக இருந்தால் சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களையும் உட்கொள்ளலாம்.
வைட்டமின் பி
வைட்டமின் பி உடலுக்கு மிகவும் முக்கியமானது. அதன் குறைபாட்டால், ஒருவர் சோர்வாகவும் பலவீனமாகவும் உணரத் தொடங்குகிறார்.
வைட்டமின் பி ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது மற்றும் மூளை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இந்த குறைபாட்டை ஈடு செய்ய பால், தயிர், பிஸ்தா, குங்குமப்பூ, கசகசா, முந்திரி, சூரியகாந்தி விதைகள், வேர்க்கடலை, சோயாபீன் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.
வைட்டமின் டி
உடலில் வைட்டமின் டி குறைபாடு காரணமாக, எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன, மேலும் தசை பலவீனம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.
இதை ஈடுகட்ட, தினமும் சிறிது நேரம் வெயிலில் இருக்க வேண்டும். ஏனெனில் வைட்டமின் டி இன் சிறந்த ஆதாரம் சூரிய ஒளி இருக்கிறது. இது தவிர சால்மன் மீன், கானாங்கெழுத்தி, முட்டை மற்றும் பால் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
Image Source: FreePik