What are the most common cancers in women: உலகளாவிய இறப்புக்கு முக்கிய காரணமாக புற்றுநோய் அமைகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலுள்ள நபர்களும் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். World Health Organization Eastern Mediterranean Region பதிவில் குறிப்பிட்டுள்ள படி, “உலகளவில், 2022 இல் 20 மில்லியன் புதிய புற்றுநோய் வழக்குகள் இருந்ததாகவும், புற்றுநோயால் 9.7 மில்லியன் இறப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் மிக முக்கியமாக புற்றுநோய் ஆபத்து காரணிகளின் அதிக பரவலானது புகையிலை பயன்பாடு, உடல் பருமன், ஆரோக்கியமற்ற உணவுகள், காற்று மாசுபாடு மற்றும் உடல் செயலற்ற தன்மை போன்றவற்றால் ஏற்படுகிறது.
ஹெபடைடிஸ் பி மற்றும் சி அல்லது மனித பாப்பிலோமா வைரஸ் உள்ளிட்ட சில தொற்றுகளின் விளைவாகவும் புற்றுநோய் ஏற்படலாம். இந்த ஹெபடைடிஸ் பி மற்றும் HPV போன்றவற்றைத் தடுப்பூசி மூலம் எளிதில் தடுக்க முடியும் என்றாலும், இன்னும் சில பகுதியில் இந்த நோய்த்தொற்றுக்கள் அதிகமாக உள்ளது. உலகளவில் காணப்படும் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் மார்பகம், நுரையீரல், பெருங்குடல் மற்றும் மலக்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்றவை அடங்கும். 2020 ஆம் ஆண்டில் மார்பகப் புற்றுநோய் உலகளவில் மிகவும் பரவலாகக் காணப்படும் புற்றுநோயாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அதே சமயம், நுரையீரல் புற்றுநோய் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு வழிவகுத்தது.”
இந்த பதிவும் உதவலாம்: kidney stone: சிறுநீரக கற்கள் புற்றுநோயை உண்டாக்குமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
உலக புற்றுநோய் தினம் 2025 (World Cancer Day 2025)
உடலில் உள்ள சில செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து உடலின் பிற பகுதிகளுக்கும் பரவும் ஒரு நிலையே புற்றுநோய் ஆகும். இது உலகளவில் ஏற்படும் இறப்புக்கு முக்கிய காரணமாகும். புற்றுநோயானது புகையிலை பயன்பாடு, நீண்டகால மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் உடற்பயிற்சியின்மை மற்றும் காற்று மாசுபாட்டிற்கு ஆளாகுதல் உள்ளிட்டவை புற்றுநோய்க்கான ஆபத்து காரணிகளாகும். ஆண்கள், பெண்கள் என அனைவருமே புற்றுநோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதில் பெண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோய்கள் சிலவற்றைக் காணலாம்.
பெண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோய்கள்
நுரையீரல் புற்றுநோய்
அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின்படி, அமெரிக்காவில் பெண்களில் நுரையீரல் புற்றுநோய் இரண்டாவது பொதுவான புற்றுநோயாகக் கருதப்படுகிறது. இந்த புற்றுநோயானது புகைபிடிப்பதால் ஏற்படக்கூடியதாகும். ஆனால் நுரையீரல் புற்றுநோயால் புகைபிடிக்காதவர்களுக்கும் பாதிக்கப்படலாம். இந்த புற்றுநோயின் அறிகுறிகளாக தொடர்ச்சியான இருமல், மார்பு வலி, மூச்சுத் திணறல், இரத்தத்துடன் கூடிய இருமல் மற்றும் விவரிக்க முடியாத உடல் எடை இழப்பு போன்றவை ஏற்படலாம்.
மார்பகப் புற்றுநோய்
இது பெண்களில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாகும். உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட கூற்றின் படி, ஆண்டுதோறும் சுமார் 2.3 மில்லியன் மார்பக புற்றுநோய் வழக்குகள் கண்டறியப்படுகிறது. இந்த அறிகுறிகளாக மார்பக அளவு அல்லது வடிவத்தில் ஏற்படும் மாற்றங்கள், மார்பகத்தில் ஒரு கட்டி, தோல் மாற்றங்கள் அல்லது மார்பகம் அல்லது முலைக்காம்பில் வலி போன்றவை ஏற்படுகிறது.
கருப்பை புற்றுநோய்
இந்த புற்றுநோய்க்கான சரியான காரணம் தெரியவில்லை. இது பெரும்பாலும் 'அமைதியான புற்றுநோய்' என்றே அழைக்கப்படுகிறது. ஏனெனில், இது ஆரம்பகாலகட்டத்தில் முன்னேறும் வரை தெளிவான அறிகுறிகளைக் காட்டாது. எனினும் இதன் ஆரம்ப அறிகுறிகளில் வயிற்று வலி, பசியின்மை, வீக்கம் போன்றவை ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: World Cancer Day 2025: உலக புற்றுநோய் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா.? இங்கே காண்போம்..
பெருங்குடல் புற்றுநோய்
பெருங்குடல் புற்றுநோயானது பெருங்குடல் அல்லது மலக்குடலை பாதிக்கிறது. இது பொதுவாக காலப்போக்கில் உருவாகக் கூடிய புற்றுநோயாகும். மலத்தில் இரத்தம், வயிற்று வலி மற்றும் விவரிக்க முடியாத உடல் எடையிழப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். வழக்கமான பரிசோதனைகளின் உதவியுடன் இதை முன்கூட்டியே கண்டறியலாம்.
எண்டோமெட்ரியல் புற்றுநோய்
அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் கூற்றுப்படி, எண்டோமெட்ரியல் புற்றுநோய் கருப்பையின் புறணியைப் பாதிக்கக் கூடியதாகும். மேலும் மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு இது மிகவும் பொதுவாக ஏற்படக்கூடிய புற்றுநோயாகும். இதன் அறிகுறிகளில் அசாதாரண யோனி இரத்தப்போக்கு, உடலுறவின் போது வலி மற்றும் இடுப்பு வலி போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. இந்த புற்றுநோய் உருவாகும் ஆபத்தானது வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது.
தோல் புற்றுநோய்
மெலனோமா உள்ளிட்ட தோல் புற்றுநோய் ஆனது அதிகப்படியான சூரிய ஒளியால் ஏற்படக்கூடியதாகும். இது மிகவும் தடுக்கக்கூடிய புற்றுநோய்களில் ஒன்றாகும். அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் கூற்றுப்படி, இது பெரும்பாலும் ஆரம்பத்தில் கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது. இதன் அறிகுறிகளாக இரத்தப்போக்கு, அரிப்பு அல்லது பெரிதாகுதல் போன்ற சருமங்களில் ஏற்படும் மாற்றங்கள் அடங்கும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: World Cancer Day 2025: மக்களே உஷார்! இந்த உணவுகளைச் சாப்பிட்டா கண்டிப்பா கேன்சர் வரும்..
Image Source: Freepik