Blood Sugar Exercise: நீரிழிவு நோய் என்பது ஒரு நபரின் உடல் குளுக்கோஸை சரியாகப் பயன்படுத்த முடியாத ஒரு பிரச்சனையால் வரக்கூடியதாகும். குளுக்கோஸ் உடலின் முக்கிய ஆற்றல் மூலமாகும். அத்தகைய சூழ்நிலையில், உடலில் வீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
நீரிழிவு நோய்க்குப் பிறகு, ஒரு நபரின் உடலில் உற்பத்தி செய்யப்படும் குளுக்கோஸ் உயிரணுக்களில் உறிஞ்சப்படுவதற்குப் பதிலாக இரத்தத்தில் கரையத் தொடங்குகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை என்பது மிக முக்கியம்.
இரத்த சர்க்கரை அதிகரிப்பு ஏன் ஆபத்தானது?
நாம் எந்த உணவைச் சாப்பிட்டாலும் அது வயிற்றுக்குள் நுழைந்தவுடன் சிறு துண்டுகளாக உடைந்து, செரிமான அமைப்பு இந்த உணவுத் துண்டுகளிலிருந்து ஊட்டச்சத்துக்கள் மற்றும் குளுக்கோஸைப் பிரிக்கிறது. உடல் பல்வேறு செயல்பாடுகளைச் செய்யவும், உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இந்த ஊட்டச்சத்துக்களை உடல் பயன்படுத்துகிறது. அதேபோல் இந்த குளுக்கோஸ் என்பது நம் உடலுக்கு 'டீசல் அல்லது பெட்ரோல்' போன்றதாகும்.

இரத்த சர்க்கரை நோய் உடற்பயிற்சிகள்
நீரிழிவு நோயாளிகளில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மிக அதிகமாக உள்ளது. உடலில் அதிகப்படியான குளுக்கோஸ் இருந்தால், உடலில் வீக்கம் ஏற்படத் தொடங்குகிறது. உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சியின் காரணமாக, இந்த உறுப்புகள் சரியாக செயல்பட முடியாமல், நபர் நோய்வாய்ப்படுகிறார்.
இது தவிர, குளுக்கோஸ் அதிகரிப்பால், உடலில் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுவதால், சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோயை குறைக்க உடற்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதிர்வு இயந்திரம்
நீரிழிவு நோயாளிகள் ஒவ்வொரு நாளும் வைப்ரேட்டர் இயந்திரத்தில் சிறிது நேரம் செலவழித்தால், அது அவர்களின் உடலில் குளுக்கோஸ் அதிகரிக்கும் அபாயத்தைக் குறைக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. முழு உடல் அதிர்வு இயந்திரங்கள் சந்தையில் மிகக் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கின்றன.
உடல் முழுவதும் அதிர்வுறும் போது, உடல் சக்திக்காக குளுக்கோஸை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது நீரிழிவு நோயால் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது.
இயந்திரம் இல்லை என்றால் என்ன செய்வது?
இயந்திரம் இல்லை என்றால் சர்க்கரை நோயாளிகள் தினமும் சிறிது நேரம் விளையாடலாம், ஜம்பிங் பயிற்சிகள் செய்யலாம், சிறிது நேரம் சத்தம் எழுப்பும் பாடல்களுக்கு நடனமாடலாம், இவை அனைத்தும் தங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
வாக்கிங் மற்றும் சைக்கிளிங்
தினசரி வாக்கிங் செல்வது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும். அதேபோல் சைக்கிளிங் செய்வதும் உடலுக்கு பேருதவியாக இருக்கும்.
ஸ்விம்மிங் மற்றும் யோகா
ஸ்விம்மிங் செல்வதும் உடல் முழுவதும் பலனளிக்கக் கூடிய விஷயமாகும். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் யோகா செய்வதும் உடலுக்கும் நீரிழிவு நோய்க்கும் மிகவும் நன்மை அளிக்கக் கூடிய விஷயமாகும்.
Image Source: FreePik