தொப்புளில் நெய் தடவினால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

தொப்புளில் நெய் தடவுவது மிகவும் பழமையான மற்றும் பிரபலமான ஆயுர்வேத நடைமுறையாகும். ஆயுர்வேதத்தில் பல்வேறு மருந்துகளைத் தயாரிக்க நெய் பயன்படுத்தப்படுகிறது. இதனை நேரடியாக உட்கொள்வது சுவையுடன் கூடிய பல்வேறு ஊட்டச்சத்து பண்புகளைத் தருகிறது. பொதுவாக, இதனை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலரும் அறிந்திருப்போம். ஆனால், இதன் தொப்புள் பயன்பாட்டு சிகிச்சை மற்றும் நன்மைகள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?
  • SHARE
  • FOLLOW
தொப்புளில் நெய் தடவினால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?


What happens when you put ghee in your navel: நாம் அனைவரும் தொப்புளில் எண்ணெய் தடவுவதைப் பார்த்திருப்போம். ஆனால் தொப்புளில் நெய் தடவுவதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம். தொப்புளில் நெய் தடவுவது மிகவும் பழமையான மற்றும் பிரபலமான ஆயுர்வேத நடைமுறையாகும். ஆயுர்வேதத்தில் பல்வேறு மருந்துகளைத் தயாரிக்க நெய் பயன்படுத்தப்படுகிறது. இதனை நேரடியாக உட்கொள்வது சுவையுடன் கூடிய பல்வேறு ஊட்டச்சத்து பண்புகளைத் தருகிறது. பொதுவாக, இதனை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலரும் அறிந்திருப்போம். ஆனால், இதன் தொப்புள் பயன்பாட்டு சிகிச்சை மற்றும் நன்மைகள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?

இதன் அற்புதமான நன்மைகளை அறியும் முன்பாக, அது எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக, ஒரு பெண் குழந்தையைச் சுமக்கும்போது, அந்தக் குழந்தையின் தொப்புளுடன் இணைக்கப்பட்ட நஞ்சுக்கொடி வழியாக அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறுகிறது. அதன் படி, குழந்தை ஊட்டமளிக்கப்பட்டு பெரிதாக வளர்கிறது. அதே போல, நெய்யை தொப்புளில் மசாஜ் செய்யும் போது அதன் ஊட்டச்சத்துக்கள் உடலில் அதே போல நுழைகிறது. இது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் தொப்புளில் நெய் தடவுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: குளிர்கால நோய்களை தடுக்க தொப்புளில் இந்த எண்ணெயை தடவி பாருங்கள்!

தொப்புளில் நெய் தடவினால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of applying ghee on naval)

ஈரப்பதத்தைத் தக்கவைக்க

சரும பராமரிப்பு வழக்கத்தில் பெரும்பாலும் தொப்புள் பகுதி கவனிக்கப்படுவதில்லை. எனினும், அதிகப்படியான நீரிழப்பைத் தவிர்க்கவும், ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும் நெய்யைப் பயன்படுத்தலாம். குறிப்பாக வறண்ட சருமம் கொண்ட நபர்களுக்கு, நீரிழப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த இயற்கையான கலவை ஒரு தேர்வாக அமைகிறது. இதன் மென்மையாக்கும் பண்பு சருமத்தில் ஈரப்பதத்தை இழப்பதைத் தடுக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான சருமத்தை உருவாக்குகிறது.

image

what happens if we apply ghee on navel

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த

தொப்புளில் நெய் வைப்பதன் முக்கிய நன்மையாக அமைவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும். இவ்வாறு செய்வது சருமத்தை மிருதுவாக வைக்க உதவுகிறது. நெய்யில் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே, அதிகளவு கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. இவை அனைத்துமே சருமத்தின் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும். இது தொப்புளைச் சுற்றியுள்ள சருமத்தை ஈரப்பதமாக்கவும், வறட்சியைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இது மென்மையான, மிருதுவான அமைப்பை ஊக்குவிக்கிறது.

வலி நிவாரணிக்காக

நெய்யில் உள்ள ப்யூட்ரேட் ஒரு குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலமாகும். இது அழற்சி எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. தொப்புளில் நெய் தடவுவதன் மூலம் அனைத்து வகையான வீக்கத்திலிருந்து விடுபடலாம். மேலும் இது வீக்கம் அல்லது மாதவிடாய் பிடிப்புகள் போன்ற உடல் வலிகளில் அதிக நிவாரணம் தருகிறது. இது நிதானமாக பல்வேறு வகையான வலிகளை குணப்படுத்த உதவுகிறது.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த

ஆயுர்வேதத்தின் படி, தொப்புள் பகுதி செரிமானத்தின் இடமாகக் கருதப்படுகிறது. எனவே இந்த மண்டலத்தில் நெய் தடவுவதன் மூலம் செரிமான நொதிகளை செயல்படுத்தி, சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கிறது. நெய் சிறந்த ஊட்டச்சத்து உறிஞ்சுதலைப் பெற உதவுவதுடன் இறுதியாக, ஆரோக்கியமான குடலுக்கு பங்களிக்கிறது. மேலும், செரிமான பிரச்சனை உள்ளவர்கள் நெய் தடவுவது, பிரச்சனைக்கு நிவாரணம் அளிப்பதற்கும், செரிமான அமைப்பின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கும் முக்கியமாக இருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Belly Button Oil: ஆண்கள் இந்த 4 வகை எண்ணெய்களை மட்டும் தொப்புளில் தடவி பாருங்கள்!

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

நெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவுகிறது. இதைத் தொப்புளில் பயன்படுத்துவதன் மூலம், இந்த ஊட்டச்சத்துக்கள் மிகவும் திறம்பட உறிஞ்சப்பட்டு பல்வேறு நோய்த்தொற்றுக்கள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், நெய்யில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.

image

Does applying ghee on navel boost immunity

தூக்கத்தை மேம்படுத்த

சீரான உடல் மற்றும் அமைதியான மனம் ஆகியவற்றின் மூலம் ஒருவர் நல்ல இரவு தூக்கத்தைப் பெற முடியும். இந்நிலையில், தொப்புளில் நெய் தடவுவது உடலை அமைதியாக வைக்க உதவுகிறது. இது பதற்றத்தைக் குறைக்கிறது. மோசமான தூக்கமின்மை பிரச்சனையை அனுபவிப்பர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. நெய் ஒரு அமைதியான, மனநிலையை உருவாக்க இன்றியமையாததாக விளங்குகிறது.

தொப்புளில் நெய் தடவுவது எப்படி? (How to apply ghee on navel)

நெய்யை தொப்புளில் பயன்படுத்துவது மிகவும் எளிதாகும். இதில் தொப்புளில் நெய் தடவுவது எப்படி என்பதைக் காணலாம்.

  • உயர்ந்த, ஆரோக்கிய நலன்களுக்காக ஆர்கனிக் நெய்யைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • நெய்யைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக, தொப்புளில் உள்ள அழுக்கு மற்றும் பிற அசுத்தங்களை அகற்ற, வெதுவெதுப்பான நீரில் மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும்.
  • பிறகு, ஒரு சிறிய அளவு நெய்யைப் பயன்படுத்தலாம். விரும்பினால் சிறிது நெய்யை சூடாக்கலாம்.
  • பின் இந்த நெய்யை விரல் நுனியில் தொப்புளில் தடவலாம்.
  • குளிப்பதற்கு முன் தோராயமாக 15-30 நிமிடங்களுக்கு நெய்யை சருமத்தில் படுமாறு விடலாம்.
  • இதன்மூலம் நெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தால் சரியாக உறிஞ்சப்படும்.
  • பின்னர் வழக்கமான குளியல் செயல்முறையை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு தொப்புளில் நெய் தடவுவதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தொப்புளில் எப்படி, எப்போது, எந்த எண்ணெய்யைத் தடவ வேண்டும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Diwali Health Tips: தீபாவளி முடிஞ்ச கையோட இந்த 5 விஷயங்கள செய்யுங்க!

Disclaimer