Dengue Diet: பருவ மழை காலத்தில் ஏற்படும் சீதோஷன மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் போன்று நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. டெங்கு காய்ச்சல் என்பது ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் பரவும் ஒரு வகை வைரஸ் நோய் ஆகும். இந்த கொசுக்கள் பெரும்பாலும் பகல் நேரங்களில் கடிக்கும். கொசுக்கள் கடித்த 6 நாட்களில் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படத் தொடங்கிவிடுகின்றன.
டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்த வகை கொசுக்கள் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரில் தான் உருவாகின்றன. டெங்கு காய்ச்சல் பரவும் கொசுக்கள் சுற்றுப்புறத்தில் தேங்கியிருக்கும் அசுத்தமான தண்ணீரில் முட்டைகளை இட்டு புழுக்கள் உருவாக அதன் எண்ணிக்கையை பெருக்கின்றன. எனவே சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது முக்கியம்.
முக்கிய கட்டுரைகள்
இதையும் படிங்க: நல்ல உறக்கம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்
சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்க விடாமல், குப்பைகள் சேரவிடாமல் அப்புறப்படுத்த வேண்டும். மழைக் காலங்களில் சுற்றுப்புறத்தில் மழை நீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
டெங்கு விழிப்புணர்வு அவசியம்
ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டு தோறும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. யாரேனும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் குணமடையும் வரை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்.
டெங்கு உணவு முறை

பப்பாளி இலைச்சாறு
பப்பாளி இலைச்சாறு டெங்கு காய்ச்சலை குறைக்கும். இந்த சாறு காய்ச்சலை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. இது பிளேட்லெட் எண்ணிக்கையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. புதிய பப்பாளி இலைகளை எடுத்து சிறிது சாறு எடுக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
காய்கறி சாறு
புதிய காய்கறி ஜூஸில் முக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளது. உங்களுக்கு விருப்பமான காய்கறிகள் உடன் இந்த ஜூஸ் செய்யலாம். இதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்ப்பதால் வைட்டமின் சி சத்தும் அதிகரிக்கும். இதன் சுவையும் மேம்படும்.
மூலிகை டீ
மூலிகை டீயில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. இலாச்சி, இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றை ஒன்றாக கலந்து நல்ல மூலிகை டீ தயாரிக்கலாம். இந்த மூலிகை டீ உங்களுக்கு புத்துணர்ச்சி உணர்வையும், மனதைுயம் தெளிவாக வைத்திருக்கும்.
வேப்பம்பூ
வேப்பம்பூக்களில் மருத்துவ குணங்கள் அதிகம். இது டெங்கு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேப்பம்பூ சாறு வளர்ச்சி மற்றும் பரவலைத் தடுக்கிறது. வேப்பம்பூ சாறில் இதுபோன்ற பல நன்மைகள் உள்ளது.
மஞ்சள்
மஞ்சள் கிருமி நாசினியாக செயல்படுகிறது. இது வளர்சிதை மாற்ற ஊக்கியாகவும் உள்ளது. மஞ்சள் பால் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இது விரைவாக நோயில் இருந்து மீட்க உதவுகிறது. உங்களுக்கு மஞ்சள் பால் பிடிக்கவில்லை என்றால், மஞ்சள் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆம்லா
ஆம்லா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ சத்தும் இதில் நிறைந்துள்ளது. இது பிளேட்லெட்டுகளை உருவாக்க உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக செறிவில் உள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் விளைவைக் குறைக்கும். இது நாள்பட்ட நிலைகளில் இருந்து வலியை விடுவிக்கிறது.
சிக்கன் சூப்
சளி மற்றும் காய்ச்சலைக் குறைக்க சிக்கன் சூப் உதவுகிறது என்பதை நிரூபிக்கும் பல நிகழ்வுகள் உள்ளன. இது உங்களை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. மூச்சுக்குழாய் வெப்பநிலையை உயர்த்துகிறது. சளியை கரைக்க உதவுகிறது.
இந்த உணவுகளை சாப்பிடக் கூடாது
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளை சில உணவுகள் மோசமாக்கும். அவற்றை தவிர்ப்பதன் மூலம் விரைவாக மீண்டு வரலாம். வறுத்த உணவுகள், காஃபின், கார்பனேற்றப்பட்ட பானங்கள், காரமான உணவுகள் மற்றும் அதிக கொழுப்புள்ள உள்ள உணவுகளை சுத்தமாக தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: சொத்தைப் பற்களுக்கான ரூட் கெனால் சிகிச்சை - முழு விவரங்களையும் மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்வோம்
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. டெங்குவை குணமாக்கும் வரை மருத்துவரின் பரிந்துரை பின்பற்றுங்கள். சுத்தமான சுற்றுப்புறங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
Image Source: Freepik