Stomach Pain: உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க, நல்ல செரிமானத்தை பராமரிக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவு முறை என்பது மிக முக்கியம். நாம் சாப்பிடும் மொத்த உணவும் வயிற்றுக்குள் செல்வது வழக்கம். அது சரியாக ஜீரணிக்கப்பட வில்லை என்றால் பல பிரச்சனைகள் வரும்.
இதற்கு குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். மோசமான குடல் ஆரோக்கியம் அமிலத்தன்மை, வீக்கம், அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதேநேரத்தில் மோசமான குடல் ஆரோக்கியமும் பல கடுமையான நோய்களை ஏற்படுத்தும்.
முக்கிய கட்டுரைகள்
அடிக்கடி வயிறு வலி இதனால் கூட வரலாம். மோசமான குடல் ஆரோக்கியத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து பார்க்கலாம். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது உங்களது ஆரோக்கியத்திள் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
வயிறு தொடர்பான பிரச்சனைகளை போக்க என்ன செய்ய வேண்டும்?

மோசமான உணவு முறை
பதப்படுத்தப்பட்ட உணவுகள், முறையற்ற இனிப்பு உணவுகள், ஆரோக்கியமற்ற கொழுப்பு உணவுகள், நார்ச்சத்து குறைந்த உணவுகள் உள்ளிட்டவைகளை உட்கொள்ளும் போது குடல் பாக்டீரியாக்களின் சமநிலையை சீர்குலைத்து வயிறு தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்தும்.
அதிகப்படியான ஆண்டிபயாடிக்
நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் அதிகப்படியான பயன்பாடும் குடலுக்கு தீங்கு விளைவிக்கும். இது குடல் சுகாதார பிரச்சனைக்கு ஆபத்து ஏற்படுத்தி பெரும் தீங்கு ஏற்படுத்தும்.
உடல் செயல்பாடு இன்மை
டிஜிட்டல் யுகத்தில் பலர் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்கிறார்கள். இதனால் செரிமானம், குடல் இயக்கம் குறைதல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு பங்களிக்கும்.
தூக்கமின்மை பிரச்சனை
ஒருவரின் நல்வாழ்விற்கு தூக்கம் என்பது மிக முக்கியம். போதிய தூக்கம் இல்லாதது ஒருவரின் குடல் ஆரோக்கியத்தையும் முழுவதுமாக பாதிக்கும்.
அதிகப்படியான மது
அதிகப்படியாக மது அருந்துவதும் குடல் பாக்டீரியாக்களின் சமநிலையின்மையை ஏற்படுத்தும் இது வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும். மது அருந்துவதை தடுப்பது பெரும் பிரச்சனையை தடுத்து ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
புகைப்பிடித்தல்
புகைப்பிடித்தல் குடல் நுண்ணுயிர்களை மாற்று குடல் தொடர்பான பிரச்சனையை அதிகரிக்கும். இது வயிறு தொடர்பான பிரச்சனையை அதிகரிக்கும். மது மட்டுமல்ல புகைப்பிடித்தலும் ஆரோக்கியத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும்.
Image Source: FreePik