Doctor Verified

Breast Pain Reasons: பெண்களின் மார்பக வலிக்கு இது தான் காரணமா?

  • SHARE
  • FOLLOW
Breast Pain Reasons: பெண்களின் மார்பக வலிக்கு இது தான் காரணமா?

பெண்களுக்கு ஏற்படும் மார்பக வலிக்கான பல்வேறு காரணங்களையும், புற்றுநோயால் ஏற்படும் மார்பக வலியில் இருந்து இவை எப்படி வேறுபடுகிறது என்பது குறித்தும், மருத்துவர் துரு ஷா கூறியதை கீழே காண்போம். 

மார்பக வலியின் வித்தியாசங்கள்: 

மார்பக கட்டிகள், நோய்த்தொற்றுகள் மற்றும் தோல் மாற்றங்கள் போன்ற பல நிலைகளால் தீங்கற்ற மார்பக வலி ஏற்படும் என்று கூறிய மருத்துவர் ஷா, மார்பக வலி வகைகளை மூன்றாக பிரிக்கலாம் என்றார். 

1. மாதவிடாய் சுழற்சி:

மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக மார்பக வலி ஏற்படுகிறது. இரண்டு மார்பகங்களுலும் இந்த வலி ஏற்படுகிறது. இவை  மாதவிடாய்க்கு சுமார் 8-10 நாட்களுக்கு முன்பு நிகழ்கிறது.

இதையும் படிங்க: Breast Size: இயற்கை முறையில் மார்பக அளவை அதிகரிப்பது எப்படி?

2. சுழற்சி அல்லாத மார்பக வலி:

இவை பெரும்பாலும்  ஒரு மார்பகத்தில் ஏற்படுகிறது. புகைபிடித்தல், அதிக கொழுப்புள்ள உணவு உட்கொள்ளுதல், ஹார்மோன் மாற்று சிகிச்சை அல்லது பெரிய அளவிலான மார்பகங்களைக் கொண்ட  பெண்கள் இந்த வலியை அனுபவிக்கின்றனர். இதில் முலையில் ஏற்படும் அலெற்சியும் அடங்கும்.  பொதுவாக பாலூட்டும் பெண்கள் இதற்கு ஆளாகின்றனர். 

3. முதுகுத்தண்டு பிரச்சனை:

பெண்கள் உணரும் மார்பக வலி, சில நிரம்பு பிரச்னை காரணமாகவும் இருக்கலாம். உதாரணமாக, ஒரு பெண்ணுக்கு முதுகுத்தண்டில் பிரச்சனை இருந்தால், அது மார்பகத்தின் வெளிப்புறப் பகுதி, தோள்பட்டை மற்றும் மேல் முதுகு பக்கத்தில் வலியை ஏற்படுத்தும்.

தொடர்ந்து மார்பக வலியை அனுபவிக்கும் பெண்கள் ஆராயப்பட வேண்டும் என்று மருத்துவர் ஷா கூறினார். மார்பக வலி ஏற்பட்டால் அது புற்றுநோயாக இருக்காது. புற்றுநோய் இருந்தால், மார்பகத்தில் கட்டியுடன் கூடிய வலி ஏற்படும். மேலும் மார்பக மேற்பரப்பு தோலில் நிறம் மாற்றம், முலையில் இரத்தக் கரை அல்லது முலைகாம்பு உள்ளடக்கம் போன்ற மாற்றங்கள் ஏற்படும் என்று மருத்துவர் ஷா கூறினார்.   

இதனைத்தொடர்ந்து, அலெற்சி மார்பக புற்றுநோய் குறித்து பேசிய மருத்துவர், “இது அறிய வகை புற்றுநோயாகும். இதில் பெண்களுக்கு மார்பகங்கள் வீங்கி, வலி மிகுதியாக காணப்படும். மேலும் தோலில் மாற்றம் மற்றும் முலைகள் நீர் வடித்த வாறு இருக்கும்” என்றார். 

மேற்கூறியதில் எந்தவெரு அறிகுறிகளையும் நீங்கள் கவனித்தவுடன், உடனடியாக மருத்துவரை அணுகுமாறு மருத்துவர் ஷா பரிந்துறைத்தார். இது தொற்றுநோயை தடுக்க உதவுகிறது. சிலருக்கு புற்றுநோய் இருந்தால் அதனை சீர்படுத்த முடியாமலையே போகலாம். ஆகையால் பெண் மருத்துவ நிபுணர்களை பார்ப்பது சிறந்தது என்று மருத்துவர் துரு ஷா கூறினார். 

Image Source: Freepik

Read Next

Pregnancy Time Vaccines: கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுக்க வேண்டிய தடுப்பூசிகள் இது தான்

Disclaimer

குறிச்சொற்கள்