$
Heart Beat Problem: இதயத் துடிப்பு என்பதை கவனிக்க வேண்டியது மிக முக்கியம், இதயத் துடிப்பு திடீரென படபடப்பையும், பதட்டமானதாகவும் இருக்கும். நம்மில் பெரும்பாலானோரும் இதுபோன்ற உணர்வை சந்தித்து இருப்போம். இதயத் துடிப்பு சரியான நிலையில் எப்படி இருக்க வேண்டும், அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து இருதயநோய் நிபுணர் மற்றும் எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட் டாக்டர் வி ராஜசேகர், (யசோதா மருத்துவமனை, ஐதராபாத்) கூறிய கருத்துகளை பார்க்கலாம்.
தங்கள் கிளினிக்கில் கலந்துக் கொள்ளும் நோயாளிகளிடையே இதயத் துடிப்பு என்பது ஒரு பொதுவான புகாராகும். தலைச்சுற்றல், பலவீனம் மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில் சுயநினைவு இழப்பு, படபடப்பு ஆகிய உணர்வுகள் பாதிக்கப்பட்டவர்களை குறிக்கும்.
இதயத் துடிப்பு என்பது கவனிக்க வேண்டிய பிரச்சனை
ஒவ்வொருவரும் தங்கள் இதயத் துடிப்பை கண்காணிக்க வேண்டும் என்பது மிக முக்கியம். உங்கள் இதயம் துடிக்கலாம் அல்லது படபடக்கலாம். சில குறிப்பிட்ட உணர்வுகள் தொடர்ச்சியாகவோ அல்லது அவ்வப்போது ஏற்படலாம். படபடப்படான இதயத்துடிப்பு என்பது பல்வேறு சூழ்நிலையால் ஏற்படலாம். சில இதயத் துடிப்பு தீங்கற்றதாகவும் சில வகை இதயத் துடிப்புகள் மருத்துவ அணுகலை பெறக்கூடியதாகவும் இருக்கலாம்.

நொய்டாவில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் கார்டியோவாஸ்குலர் சயின்சஸ் தலைவர் டாக்டர் அஜய் கவுல், படபடப்புக்கு வழிவகுக்கும் பதட்டம் மிகவும் சாதாரணமானது என்று ஒன்லி மைஹெல்த்திடம் கூறினார். இருப்பினும், வெளிப்படையான காரணத்திற்காகவோ அல்லது சிறிய விஷயங்களுக்காகவோ நீங்கள் பதட்டமடைந்தால், நீங்கள் ஒரு அசாதாரண நிலையை சந்திக்க நேரலாம்.
இதயத் துடிப்புக்கான பொதுவான காரணங்கள்
மன அழுத்தம் மற்றும் பதட்டம்
மன அழுத்தம், பதட்டம் அல்லது பீதியான நிலை படபடப்பை ஏற்படுத்தலாம். இந்த நிலை தொடரும் பட்சத்தில் உங்கள் இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும்.
காஃபின் உட்கொள்ளல்
ஃபின், எனர்ஜி பானங்கள் மற்றும் தூண்டுதலுக்கான சில மருந்துகளின் அதிகப்படியான நுகர்வும் உங்கள் இதய துடிப்பை அதிகரிக்கலாம்.
நீரிழப்பு
போதுமான அளவு திரவ உட்கொள்ளல் எலக்ட்ரோலைட் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும், இது படபடப்பை ஏற்படுத்தும்.
மருந்துகள்
ஆஸ்துமா இன்ஹேலர்கள், டிகோங்கஸ்டெண்ட்கள் மற்றும் சில மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது ஏற்படும் பக்கவிளைவுகள் படபடப்பை ஏற்படுத்தலாம்.
மது மற்றும் புகையிலை
பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனின் கூற்றுப்படி , அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் இரண்டும் உங்கள் இதயத்தின் இயல்பான தாளத்தை சீர்குலைக்கும்.
தைராய்டு பிரச்சனை
ஹைப்பர் தைராய்டிசம் இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். மயோகிளினிக்கின் கூற்றுப்படி , தைராய்டு சுரப்பிகள் அதிகமாக செயல்படுவது அல்லது செயல்படாதது இதயத் துடிப்புக்கு வழிவகுக்கும்.
இரத்த சோகை
குறைந்த இரத்த இரும்பு அளவானது இரத்தத்தை திறமையாக பம்ப் செய்யும் இதயத்தின் திறனை பாதிக்கலாம். ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் மெடிசின் படி , இரும்புச்சத்து குறைபாடு (ID) என்பது இதய செயலிழப்பு (HF) உள்ள நோயாளிகளுக்கு ஒரு பொதுவான கொமொர்பிடிட்டி ஆகும், இது இரத்த சோகை இல்லாத நோயாளிகளிடமும் 59% வரை இருப்பதாக கூறப்படுகிறது.

பிற அசாதாரண துடிப்பு
இதயத் துடிப்பு என்பது அரித்மியா, இதய வால்வு பிரச்சனைகள் அல்லது இதய தசை நோய்கள் போன்ற அடிப்படை இதய நிலைகளின் அறிகுறியாக இருக்கலாம்.
அடிப்படை சுகாதார நிலைமைகள்
சில நேரங்களில், படபடப்பு என்பது மருத்துவ கவனிப்பு தேவைப்படும் அடிப்படை இதய நிலையின் அறிகுறியாகும். இந்த அறிகுறிகளைப் புறக்கணிப்பது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
பக்கவாதம் ஆபத்து
படபடப்புடன் தொடர்புடைய சில அரித்மியாக்கள் சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
மருத்துவ கவனிப்பு அவசியம்
நீங்கள் அடிக்கடி இதயத் துடிப்பு அசாதாரணத்தை அனுபவித்தாலோ அல்லது மார்பு வலி, மூச்சுத் திணறல், தலைச்சுற்றல், மயக்கம் போன்ற பிற அறிகுறிகளுடன் இருந்தாலோ மருத்துவரை அணுகுவது முக்கியம். உங்கள் படபடப்புக்கான காரணத்தைக் கண்டறியவும், தகுந்த சிகிச்சையை பரிந்துரைக்கவும், எக்கோ கார்டியோகிராம்கள் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் உள்ளிட்ட சோதனைகளை மேற்கொள்ள முயற்சி செய்யவும்.
இதயத் துடிப்பு ஒரு வழக்கமான நிகழ்வாகும், மேலும் அவை பெரும்பாலும் பாதிப்பில்லாதவை போன்றே தோன்றும். இருப்பினும் ஏதேனும் தீவிரத்தையோ அல்லது அசௌகரியத்தையோ உணரும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: Freepik