உங்கள் குழந்தைக்கு நல்ல பெயரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பமா?இதோ உங்களுக்கான 13 உதவி குறிப்புகள்

  • SHARE
  • FOLLOW
உங்கள் குழந்தைக்கு நல்ல பெயரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பமா?இதோ உங்களுக்கான 13 உதவி குறிப்புகள்


குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பதற்கான 13 உதவிக்குறிப்புகள்:

குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது எளிதான காரியம் அல்ல. இதற்காக நிபுணர்களின் உதவியையும் பலர் எடுத்துக்கொள்கிறார்கள். நீங்களும் உங்கள் குழந்தைக்கான நல்ல பெயரைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த உதவிக்குறிப்புகள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுக்கும்போது, பெயர் தரமாகவும் அவருக்குப் பொருத்தமாகவும் இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

  1. பெற்றோர்களாக அனுபவம் உள்ளே உங்கள் உறவினர் அல்லது நண்பர்களிடம் ஆலோசனை கேட்கலாம். அவர்கள் ஏற்கனவே பின்பற்றிய செயல்முறை உங்களுக்குச் சிறந்த வழிகாட்டாக இருக்கும்
  1. வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வாயில் நுழையக்கூடிய சுலபமான பெயரரை சூட்டினால், அனைவரும் குழந்தையைப் பெயர் சொல்லி அழைப்பதற்கு எளிதாக இருக்கும்
  2. எந்த அர்த்தமும் இல்லாத பெயரைத் தவிர்த்திடுங்கள். எப்போதும் நல்ல அர்த்தமுள்ள பெயர்களைத் தேர்வு செய்யுங்கள்.
  3. குழந்தைக்கு நீண்ட பெயரிட்டு தவறு செய்ய வேண்டாம். எளிதாக உச்சரிக்க கூடிய குறுகிய பெயரைத் தேர்ந்தெடுங்கள்.
  4. நீங்கள் உங்கள் குழந்தைக்கு எந்தப் பெயரைத் தேர்வு செய்தாலும் அது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். ஒரு சிலர் தங்கள் குழந்தைக்கு வினோதமாகப் பெயரிடுகிறார்கள்.இதனால் வளர்ந்த பிறகு குழந்தைகள் கேலிக்குள்ளாகிறார்கள்.

6. ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களைக் குழந்தைக்கு வைப்பது தவறானது. குழந்தையின் வாழ்நாள் முழுவதும் அவருடன் இணைந்திருக்கும் ஒரே ஒரு பெயரை மட்டுமே நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

7. தனித்துவமான பெயர் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் இணையத்தின் உதவியைப் பெறலாம். இதில் மில்லியன் கணக்கான பெயர்களும் அதற்கான அர்த்தங்களும் இருக்கும்.அதிலிருந்து ஒரு நல்ல பெயரைத் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

8. குழந்தைக்குப் புதிய பெயரைத் தேர்வு செய்ய முடியாத பட்சத்தில் உங்களுக்கு விருப்பமான பெயரையோ அல்லது உங்களுக்கு விருப்பமான நபரின் பெயரையோ குழந்தைக்கு வைக்கலாம்.

9. குழந்தைக்குப் பெயரிட புத்தகங்களின் உதவியையும் எடுத்துக் கொள்ளலாம். பல மருத்துவ இல்லங்களில், இந்தப் புத்தகம் அனைத்து பெற்றோர்களுக்கும் வழங்கப்படுகிறது. புத்தகங்களில், பெயருடன், அதன் அர்த்தமும் கொடுக்கப்பட்டு இருக்கும். இது போன்ற புத்தகங்களை இணையத்திலும் படிக்கலாம்.

10. மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட வித்தியாசமான ஒரு பெயரை உங்கள் குழந்தைக்காகத் தேர்வு செய்யுங்கள்.


11.குழந்தைக்குப் பெயர் சூட்டுவதற்கு முன், குழந்தையின் கோத்திரம் மற்றும் நட்சத்திரம் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். வாஸ்து சாஸ்திரத்தின்படி, குழந்தையின் பெயரும் குழந்தையைப் பாதிக்கிறது.

12. நீங்கள் பெரிய குடும்பமாக இருந்தால் ஆன்லைன் வாக்களிப்பையும் செய்யலாம். உங்கள் குழந்தைக்குப் பெரும்பாலான மக்கள் விரும்பும் பெயரை நீங்கள் தேர்வு செய்யலாம்.


13. நீங்கள் தேர்வு செய்த மற்றும் உங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களும் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் நிபுணர்களின் உதவியைப் பெற்று ஒரு சிறந்த பெயரைத் தேர்வு செய்யலாம்.

Images Credit: Freepik

Read Next

குறை மாத குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை!!!

Disclaimer

குறிச்சொற்கள்