$
பல பெண்கள் விழாக்களுக்கும் பார்ட்டிகளுக்கும் செல்வதற்கு முன்பு பார்லருக்குச் செல்கிறார்கள். அவர்கள் தங்களை அழகாகக் காட்டுவதற்காக ஃபேஷியல் மற்றும் ஹேர் ஸ்டைல் செய்கிறார்கள். ஏனெனில் ஃபேஷியல் முகத்திற்கு பொலிவைத் தரும்.
இதில் பல்வேறு வகையான ஃபேஷியல்களும் உள்ளன. எந்த மாதிரியான பளபளப்பு வேண்டும் என்பதைப் பொறுத்து. ஃபேஷியல் தேர்வு செய்யலாம். ஆனால் ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஃபேஷியல் செய்தாலும் நீங்கள் செய்யும் சில தவறுகளால் முகம் பொலிவிழக்கக்கூடும்.

ஆம், சில சின்ன,சின்ன தவறுகளால் முகப் பொலிவு பாதிக்கப்படும் என அழகு கலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உங்களுக்கு வாடிக்கையாக இருந்தாலும், ஃபேஷியலுக்குப் பிறகு சில விஷயங்களைச் செய்யாதீர்கள் என்கிறார்கள்.
ஃபேஷியலுக்குப் பிறகு முகத்தில் உள்ள தோல் மிகவும் உணர்திறன் வாய்ந்ததாக மாறுகிறது. எனவே இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் வழக்கமான ஸ்கின் கேர் முறைகள் அல்லது பொருட்கள் சருமத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். எனவே நீங்கள் விலையுயர்ந்த ஃபேஷியல் செய்யும் போது கண்டிப்பாக சில டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் நல்ல பொலிவு கிடைக்கும்.
முகத்தைத் தொடாதீர்கள்:
முகத்தில் பருக்கள் அல்லது ஏதேனும் புள்ளிகள் இருந்தால், ஃபேஷியலுக்குப் பிறகு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த நேரத்தில் நீங்கள் பருக்களை தொடவோ அல்லது அவற்றை உரிக்கவோ கூடாது.

ஒவ்வொரு முறையும் நீங்கள் பருக்களை தொடும் போது பாக்டீரியா பரவுகிறது. ஒருவேளை உங்கள் சருமம் உணர்திறன் வாய்ந்ததாக இருந்தால், தோலில் தீவிர அரிப்பு உருவாகும் அபாயம் அதிகம். இது உங்கள் நிறத்தை சேதப்படுத்தும். எனவே எக்காரணம் கொண்டு ஃபேஷியல் செய்த பிறகு பருக்களை தொடாமல் இருப்பது நல்லது.
ஜிம்மிற்கு லீவு கொடுங்கள்:
ஃபேஷியல் செய்த பிறகு ஜிம்மிற்கு செல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அதிகப்படியான வியர்வை முகத்தில் பருக்களை ஏற்படுத்தும். அதிகப்படியான வியர்வைக்கு தோல் எதிர்மறையாக செயல்படுகிறது.

எனவே ஃபேஷியல் செய்த பிறகு ஜிம்மிற்கு செல்வதையோ அல்லது கடுமையான உடற்பயிற்சி செய்வதையோ தவிர்க்கவும். அதேபோல் பயணங்களைக் குறைப்பது நல்லது. கட்டாயம் பயணம் செய்ய வேண்டியிருந்தால் முகத்தை மறைப்பது நல்லது.இல்லையெல் சூரிய கதிர்களால் சருமம் பாதிக்கப்படக்கூடும்.
மேக்கப்:
ஃபேஷியல் செய்யும் போது அதிகமாக மேக்கப் போடாமல் இருப்பது நல்லது. ஏனெனில் ஃபேஷியல் செய்த பிறகு, உங்கள் சருமத்தில் உள்ள துளைகள் வழக்கத்தை விட அதிகமாக திறந்திருக்கும். இதன் காரணமாக, கிருமிகள் மற்றும் முறிவுகள் அதிகம்.

அதனால் சில நாட்களுக்கு மேக்கப் போடாமல் இருப்பது நல்லது. அதேபோல் உங்கள் மேக்கப் பிரஸ் போன்ற அழகு சாதன கருவிகளை உங்கள் முகத்தில் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றைக் கழுவவும் மறக்காதீர்கள்.
தோல் வெளிப்பாடு:
ஃபேஷியலுக்குப் பிறகு, உங்கள் சருமம் சூரியனால் அதிகம் பாதிக்கப்படும். சுத்தப்படுத்தப்பட்ட தோலில் சூரிய ஒளி படுவதால் சரும பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இதனால் முகத்தில் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் அதிகரிக்கும். மெலனோமா உற்பத்தி அதிகரிப்பதால், சரும நிறம் பாதிப்படையும். எனவே ஃபேஷியலுக்குப் பிறகு வீட்டில் இருந்தாலும் சரி, வெளியே சென்றாலும் சரி, SPF 30கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்தவும்.
வேக்சிங் வேண்டாம்:

ஃபேஷியல் செய்த பிறகு முகத்தில் உள்ள முடிகளை அகற்றுவதைச் செய்ய வேண்டாம். இது தோலில் எரிச்சலை ஏற்படுத்தும். ஃபேஷியலின் போது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு, புதிய சரும செல்கள் வெளிப்படுகின்றன. இதன் காரணமாக, தோல் மிகவும் உணர்திறன் அடைகிறது. இந்த நேரத்தில் வேக்சிங் போன்ற சிகிச்சையிலிருந்து விலகி இருப்பது நல்லது.
Image Source: Freepik