Hair Care: அடர்த்தியான, நீளமான, பட்டு போன்ற முடியை விரும்பாத பெண்களே இருக்க மாட்டார்கள். ஆனால் பிஸியான வாழ்க்கை முறை, மன அழுத்தம், பதட்டம், ஓய்வு இல்லாமை, மாசுபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, உடல்நலப் பிரச்சனைகள் போன்ற காரணங்களால் பல பெண்கள் முடி பராமரிப்பு இல்லாமை, முடி உதிர்தல் போன்ற பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். முடி உதிர்தலை சந்திக்காத நபர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.
ஆரோக்கியமான முடிக்கான வழிகள்

பெண்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்சனையா? என்றால் அதுதான் இல்லை. இந்த பிரச்சனையில் சிக்காத ஆண்களும் இல்லை. அடர்த்தியமான முடியை பெற சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை. அதுகுறித்த பார்க்கலாம்.
இதையும் படிங்க: சுருட்டை முடியுடன் போராட்டமா? இதோ 8 சூப்பர் டிப்ஸ்!
ஊட்டச்சத்து முக்கியம்
முடி உதிர்வைக் குறைத்து மீண்டும் வளரச் செய்வதில் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் தலைமுடி ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வளர வேண்டுமெனில், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உணவில் பச்சை காய்கறிகள், முட்டை, மீன், கொட்டைகள், விதைகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.
உச்சந்தலை மசாஜ்
முடி வேர்களை உறுதியாக வைத்திருக்க உச்சந்தலையில் மசாஜ் செய்வது அவசியம். இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்களுக்கு உங்கள் விரல்களால் உங்கள் உச்சந்தலையை மெதுவாக மசாஜ் செய்யவும். மசாஜ் செய்வது உங்கள் முடி வேரை ஆழமாக வைத்திருக்க உதவும். மேலும் மன அழுத்தத்தை குறைக்கும்.
முட்டை
முட்டையில் உள்ள புரோட்டீன்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முடிக்கு ஊட்டச்சத்தை அளித்து முடி உதிர்தல் பிரச்சனைகளைத் தடுக்கிறது. முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து நன்றாக கலக்கவும். அதை வேர்களில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் உலர விடவும். பின்னர் உங்கள் தலையை வெதுவெதுப்பான நீர் மற்றும் லேசான ஷாம்பு கொண்டு கழுவவும். இப்படி வாரந்தோறும் செய்து வந்தால் மிருதுவான கூந்தலைப் பெறுவீர்கள்.
தேங்காய் பால்
தேங்காய் பால் முடி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க திறம்பட செயல்படுகிறது. தேங்காய் பாலில் கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, சி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் இயற்கை புரதங்கள் நிறைந்துள்ளன. புதிய தேங்காய் பாலை உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் உலர வைக்கவும். பிறகு லேசான ஷாம்பு கொண்டு தலையை அலசவும். இப்படி வாரம் இருமுறை செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்து புதிய முடி வளர ஆரம்பிக்கும்.
கற்றாழை
கற்றாழை முடிக்கு ஊட்டமளித்து வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கற்றாழை உச்சந்தலையில் pH ஐ சமன் செய்து, வீக்கத்தைக் குறைக்கிறது. கற்றாழை சாறை முடியில் தடவி 30 முதல் 45 நிமிடங்கள் உலர விடவும். அதன்பின் வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். வராம் ஒருமுறை இதை செய்யவும்.
க்ரீன் டீ
கிரீன் டீயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதைக் கொண்டு உங்கள் தலைமுடியை அலசவும். க்ரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி உதிர்வை குறைத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கூடுதலாக, இது முடிக்கு பளபளப்பை சேர்க்கிறது, முடி பராமரிப்பை எளிதாக்குகிறது
வெங்காயம் சாறு
வெங்காயத்தில் உள்ள சல்பர் முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. எனவே இளமையான கூந்தல் வேண்டும் என்றால், வெங்காய சாறு எடுத்து அதன் வேர்களில் மெதுவாக மசாஜ் செய்யவும். 15 நிமிடம் உலர வைத்து லேசான ஷாம்பு கொண்டு கழுவவும். இப்படி வாரம் இருமுறை செய்து வந்தால், அடர்த்தியான கூந்தல் கிடைக்கும்.
முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள்

முடி ஆரோக்கியத்திற்கு புரதம் மற்றும் பயோட்டின் மிகவும் முக்கியம். இதற்கு முட்டையை உட்கொள்ளலாம். அதேபோல் கீரையை எடுத்துக் கொள்ளலாம். கீரையில் வைட்டமின் ஏ, சி, இரும்பு மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. உங்கள் உணவில் கேரட் மற்றும் ஸ்வீட் பொட்டாட்டோ சேர்ப்பது முடிக்கு மிகவும் நல்லது. அதேபோல் ஓட்ஸ், வால்நட் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: ஆரோக்கியமான முடி வேண்டுமா? இந்த 7 ரகசியத்தை தெரிந்துக்கொள்ளுங்களேன்!
முடியை பராமரிக்கவும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இந்த வழிகள் உதவும் என்றாலும் ஏதேனும் தீவிரத்தை உணரும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: Freepik