பண்டிகை கொண்ட்டாங்களால் உளவியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?

  • SHARE
  • FOLLOW
பண்டிகை கொண்ட்டாங்களால் உளவியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?

இந்தியா பண்டிகைகளின் பிறப்பிடம். ஒவ்வொரு நிகழ்வையும் ஒரு பண்டிகையாகக் கருதுவது நமது கலாச்சாரத்தில் உள்ள வழக்கம். இந்திய பண்டிகைகள் மனநலத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. தசரா, தீபாவளி, ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் மத வேறுபாடின்றி குடும்பங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துகின்றன.

இன்றைய தலைமுறையினர் பண்டிகைகள் என்பது வேறும் சடங்குகள் மட்டுமே என நினைக்கிறார்கள். இதனால் அதன் பின்னணியில் உள்ள உளவியல் நன்மைகளை அடையாளம் காண தவறவிட்டு விடுகிறார்கள். திருவிழாக்கள் வெறும் சடங்குகள் அல்ல. குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்கும் சந்தர்ப்பம். வேடிக்கை மற்றும் மகிழ்ச்சிக்கான நேரம் என்பதை 2கே தலைமுறை உணர வேண்டும்.

திருவிழாக்கள் உளவியல் ரீதியாக பல நன்மைகளைக் கொண்டுள்ளன. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், உறவுகளை வலுப்படுத்தவும் பண்டிகைகள் உதவுகின்றன. பண்டிகைகளின் பலன்களைப் பார்ப்போம்.

  • திருவிழாக்கள் பத்து பேர் சந்திக்கும் வாய்ப்பை வழங்குகின்றன. சமூக பிணைப்புகளை வலுப்படுத்துகிறது. இது மக்களிடையே சமூக பாதுகாப்பு உணர்வை உருவாக்குகிறது. பண்டிகை சமயங்களில் ஒன்றாகப் பேசி மக்களிடையே ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொள்ளலாம்.
  • வாழ்வாதாரத்திற்காக தொலைதூர ஊர்களுக்குச் சென்றவர்கள், பண்டிகை சமயங்களில் சொந்த ஊருக்குச் சென்று உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுபவர்களிடம் நேர்மறை உணர்ச்சிகள் வளரும். அவை ஒருவரின் மனநிலையை மாற்றி மன அழுத்தத்தையும் குறைக்கின்றன.
  • பண்டிகைக் காலங்களில் வீடுகள், கோவில்கள், பிரார்த்தனைக் கூடங்கள் மற்றும் மசூதிகளில் செய்யப்படும் அலங்காரங்கள் நமக்கு பாசிட்டிவ் உணர்வைத் தருகின்றன. வண்ணமயமான விளக்குகள் மற்றும் மலர்கள் கண்ணுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
  • திருவிழாக்களில் நிகழ்த்தப்படும் குழு நடனங்களின் தாள அசைவும் இசைக்கருவிகளின் ஓசைகளும் கண்களுக்கு மட்டுமல்ல கருத்திற்கும் நல்ல விருந்தாக அமைகிறது. அவை மக்களில் நேர்மறையான உணர்ச்சிகளை ஊக்குவிக்கின்றன மற்றும் மன அழுத்தத்தை குறைக்கின்றன.
  • திருவிழா என்பது மன உணர்வுகளின் தொகுப்பு. உறவினர்கள் மற்றும் பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும், அவர்களுடன் வேடிக்கையாக அரட்டை அடிப்போம். அதேசமயம் பண்டிகை முடிந்து அனைவரையும் விட்டுச் செல்லும் போது தூக்கம், வருத்தம், வலி என அனைத்துவிதமான உணர்ச்சிகளையும் அறிமுகப்படுத்தும் “எமோஷனல் ரோலர்கோஸ்டராக” அமைகிறது.
  • பண்டிகைக் கால ஆன்மீகச் சூழல் மனிதனிடம் நல்ல சிந்தனையை ஏற்படுத்துகிறது. "நான்" என்பதை விட "நாம்" என்று முன்னோக்கி செல்வது சிறந்தது என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது.
  • பண்டிகைகள், மனரீதியாகவும், சமூக ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் நமக்கு நன்மை பயக்கும் என்பதை அறிந்து விழாவை இன்னும் உற்சாகமாக கொண்டாடுவோம்.. நம் வாழ்வில் மகிழ்ச்சியை வரவேற்போம்.

Image Source: Freepik

Read Next

World Mental Health Day: உலக மனநல தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் இது தான்..

Disclaimer

குறிச்சொற்கள்