Expert

நடிகை தமன்னாவின் எச்சில் Trick பருக்களை குறைக்குமா.? வெடிக்கும் சர்ச்சை.. மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை!

நடிகை தமன்னா பாட்டியா பருக்களை குறைக்க காலை எச்சிலை முகத்தில் தடவ வேண்டும் என கூறிய தகவல் வைரலாகியுள்ளது. ஆனால் இது உண்மையா? மருத்துவர்கள் எச்சரிக்கையுடன் கூறும் உண்மைகள் இங்கே!
  • SHARE
  • FOLLOW
நடிகை தமன்னாவின் எச்சில் Trick பருக்களை குறைக்குமா.? வெடிக்கும் சர்ச்சை.. மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை!


அழகு, தோற்றம், சரும பராமரிப்பு இவை அனைத்தும் இன்று சமூக வலைத்தளங்களின் மூலமாக விரைவாக பரவும் தலைப்புகள் ஆகிவிட்டன. குறிப்பாக சினிமா பிரபலங்கள் ஏதேனும் ஒரு டிப்ஸ் பகிர்ந்துவிட்டால், அது நம்மை ஆழமாக கவர்ந்துவிடுகிறது. இந்த வரிசையில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம், நடிகை தமன்னா பாட்டியா கூறிய எச்சில் டிப்ஸ்.

காலை எழுந்தவுடன் நம்முடைய எச்சிலை முகத்தில் தேய்த்தால் முகப்பருக்கள் குறையும் என்கிறார் நடிகை. ஆனால், பாரம்பரிய ரகசியம் போல தோன்றும் இந்தப் புது முயற்சி, நிபுணர்களிடம் கடும் கண்டனத்தையும், எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

எச்சில்.. இயற்கை மருந்தா.?

மனித எச்சிலில் Lysozyme, Histatin, Peroxidase போன்ற பாக்டீரியாக்களை அழிக்கக்கூடியவை. ஆனால் அவை வாயின் உள்ளடக்கத்திற்கே பொருத்தமானவை. முகத்தில் உள்ள பாக்டீரியாக்களுக்கு இது பயனளிக்குமா என்ற கேள்விக்கு முழுமையான மருத்துவ ஆதாரம் இன்னும் இல்லை. மனித எச்சில் கிருமிகள் நிறைந்தவை. பருக்கள் இருப்பவர், அது மேல் எச்சிலை பயன்படுத்தினால், இன்னும் தீவிரமாக பரவக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

artical  - 2025-08-07T172649.693

ஏன் இந்த பரபரப்பு?

தமன்னா பாட்டியா மிகுந்த ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். அவர் கூறிய ஒவ்வொரு உரையும் இளைஞர்களிடையே நேரடியாக சேரும். இதன் காரணமாக, பலர் அந்த முறையை முயற்சித்து வருகின்றனர் என்பது மருத்துவர்களை பதற வைத்துள்ளது. Celebrity influence என்பதை தவறாக பயன்படுத்தக்கூடாது. எச்சிலை முகத்தில் தடவுவது பாதுகாப்பானது என்று மருத்துவத்தில் நிரூபிக்கப்படவில்லை.

மேலும் படிக்க: சருமம் ஜொலிக்கணுமா.? கிரீம் வேண்டாம்.. இந்த collagen cube போதும்!

சருமத்தில் எச்சில் தடவுவதன் பக்க விளைவுகள்

பாக்டீரியா பரவல்: வாயில் உள்ள எச்சிலில் E.Coli, Streptococcus போன்ற பல பாக்டீரியாக்கள் இருக்கலாம். இது முகத்தில் பருக்கள் இருந்தால் இன்னும் மோசமாக பரவ வாய்ப்பு உண்டு.

தோல் எரிச்சல்: Sensitive skin உடையவர்களுக்கு எச்சில் தடுப்பதால் redness, itching, burning sensation போன்ற விளைவுகள் ஏற்படக்கூடும்.

அலர்ஜி: சிலருக்கு எச்சிலில் உள்ள கெமிக்கல்களுக்கு எதிராக உடல் அலர்ஜியாகவும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மறைமுக பாதிப்பு: ஒரே இடத்தில் தொடர்ந்து தடுப்பதன் மூலம் தோலில் நிறமாற்றம் (Pigmentation) ஏற்படும் அபாயமும் உள்ளது.

artical  - 2025-08-07T172812.795

பாரம்பரிய மருத்துவத்தில் இந்தப் பயிற்சி?

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில், எச்சிலில் உள்ள சக்தி மற்றும் பலன் குறித்து குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால், அவை அனைத்தும் சரியாக சுத்திகரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும் என்றும், நோயாளியின் உடல் தன்மை அறிந்த பிறகே பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

கவனிக்க வேண்டியவை

* எச்சில் எப்போதும் ஒரு வைரஸ், பாக்டீரியா மற்றும் வேதிப்பொருட்கள் நிறைந்த திரவம்.

* முகத்துடன் தொடர்பில் கொண்டால், அது சுகாதாரத்துக்கும் தோலுக்கும் ஆபத்தாகும்.

* இது மருத்துவ ரீதியாக பரிந்துரைக்கப்படாதது. எந்த நிபுணரும் இதனை ஆதரிக்கவில்லை.

* பிரபலங்கள் கூறுவதைக் கேட்டு உங்கள் தோலின் பாதுகாப்பை பரிசுத்துவிட வேண்டாம்.

குறிப்பு

பருக்கள் மற்றும் தோல் பிரச்சனைகளுக்கான சிகிச்சை, தனிநபர் தோல் வகை மற்றும் உடல் நிலையைப் பொறுத்தே அமைய வேண்டும். எனவே, ஒரு சாதாரண ஆலோசனை அல்லது இணைய தகவலை மட்டும் நம்பி சிகிச்சை மேற்கொள்வது தவறான முடிவுகளைத் தரலாம்.

தமன்னா பாட்டியாவின் எச்சில் பரிந்துரை ஒரு பரபரப்பை ஏற்படுத்தினாலும், மருத்துவ ரீதியாக இது பயனளிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக பரிசோதிக்கப்பட்ட மற்றும் சுகாதாரமான முறைகளை பின்பற்றுவது தான் உடல் நலத்துக்கும், தோல் பாதுகாப்புக்கும் ஏற்றது.

பிரபலங்கள் கூறும் தகவல்களை நாம் அவர்களது புகழால் ஏற்க வேண்டியதில்லை. அறிவியலால் நிரூபிக்கப்படாத எந்தவொரு முறையும் உடனடியாக முயற்சி செய்வதற்குப் பதிலாக, மருத்துவ ஆலோசனைகளையும் எடுத்துக்கொண்டு முன்னேறவேண்டும். மருத்துவ ரீதியாக சோதிக்கப்படாத எதையும் முகத்தில் போடக் கூடாது. தவிர்த்து வருவது தான் பாதுகாப்பு என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Read Next

ஸ்கின்ல அங்கங்க பழுப்பு நிறமா இருக்கா? விரைவில் மறைய ஆரஞ்சு பழத்தோலை இப்படி யூஸ் பண்ணி பாருங்க

Disclaimer