Disadvantages Of Hair Dye: பெரும்பாலானோர் முடிக்கு ஹேர் டையைப் பயன்படுத்தி, முடியின் நிறத்தை மாற்ற விரும்புவர். இதை ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் பயன்படுத்துகின்றனர். இது சாம்பல் அல்லது வெள்ளை நிற முடியை மறைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு ஹேர் டை செய்து மக்கள், தங்கள் தோற்றத்தை மாற்ற விரும்புகின்றனர். இது ட்ரெண்டாக இருப்பினும், முடி சாயம் மற்றும் முடியின் ஆரோக்கியம் இரண்டும் முற்றிலும் வேறுபட்டவையாகும். முடிக்கு கலரிங் செய்யும் முன், முதலில் அது பாதுகாப்பானதா என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். முடிக்கு சாயமிடுதல் உடல் ஆரோக்கியத்திற்கும், கூந்தலுக்கும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து முடிக்கு சாயம் பூசுவது முடி பராமரிப்பை வீணாக்கிவிடும்.
ஹேர் டை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்
முடிக்கு வண்ணமிடுதலில் நிரந்தர முடி சாயங்கள், அரை நிரந்தர முடி சாயங்கள், ப்ளீச்சிங், அம்மோனியா அல்லாத முடி சாயங்கள் என பல வகைகள் உள்ளன. எனினும், நிரந்தர முடி சாயத்தில் அதிகளவு இரசாயனங்கள் நிறைந்துள்ளன. இதில் முடிக்கு ஹேர் டை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளைக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Hair Transplant Myths: முடி மாற்று அறுவை சிகிச்சை பற்றி மக்களிடையே நிலவும் கட்டுக்கதைகள்
ஒவ்வாமை எதிர்வினை
முடிக்கு வண்ணமிடும் சாயங்களில் அதிகளவு இரசாயனங்கள் உள்ளது. இதில் பாராஃபெனில்டைமைன் என்ற ஒவ்வாமையும் அடங்கும். இதனால் தோல் அழற்சி உள்ளவர்களுக்கு கடுமையான ஒவ்வாமை எதிர்வினை ஏற்பட வாய்ப்புண்டு. குறிப்பாக, தடிப்புத் தோல் அழற்சி, அரிக்கும் தோலழற்சி உள்ளவர்கள் முடி சாயங்களைத் தவிர்ப்பது நல்லது. மேலும், இந்த முடி சாயங்கள் தோல் அரித்தல், சிவப்படைதல், எரிதல் மற்றும் வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.
வெண்படல அழற்சி
முடிக்கு சாயமிடுவது, கண்களையும் பாதிப்படையச் செய்யலாம். இது கண்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். முடி சாயத்தில் இருக்கும் இரசாயனங்கள், கண்களை பாதிப்படையச் செய்யும் கன்ஜக்டிவிடிஸ் அல்லது இளஞ்சிவப்பு கண்களை ஏற்படுத்தலாம். சில நேரங்களில், இது கண்களுக்கு எரிச்சல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.
முடி உதிர்தல்
இரசாயனங்கள் அடங்கிய முடி கலரிங் பயன்படுத்துவது, தலைமுடியில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். இதனால், உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது முடி பாதிப்பையும் ஏற்படுத்தும். அதன் படி, ஹேர் டையிங் அடிப்பது அம்மோனியா, முடி பிளவு, முடி உதிர்தல், பலவீனமான முடி போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Hair Growth Oil: அடர்த்தியா, நீளமா முடி வளர இந்த எண்ணெய்களை முயற்சி செஞ்சி பாருங்க!
ஆஸ்துமா
முடி சாயங்களால் ஏற்படும் கடுமையான ஒவ்வாமை எதிர்வினையின் அறிகுறி ஆஸ்துமா ஆகும். முடி சாயங்களில் உள்ள இரசாயனங்களை உள்ளிழுப்பதால், இது மூச்சுத்திணறல், தொடர்ச்சியான இருமல், நுரையீரல் வீக்கம், ஆஸ்துமா தாக்குதல்கள், மற்றும் தொண்டை அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். மேலும், ஏற்கனவே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹேர் டையிங் பாதிப்பை ஏற்படுத்தும்.
கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு
கர்ப்பிணி பெண்கள் முடி கலரிங் செய்வது பிறக்காத குழந்தைக்கும் கூட பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் இது வீரியத்தை ஏற்படுத்தலாம். எனவே கர்ப்ப காலத்தில் ஹேர் டையிங் அடிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. இது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஹேர் டையிங் செய்வதற்கு முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
தலைமுடி மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதிலிருந்து தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
- நிரந்த முடி கலரிங்கைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- பல்வேறு பொருள்கள் மற்றும் பிராண்டுகள் இரசாயனங்கள் பற்றி முறையான ஆராய்ச்சிக்குப் பின் தேர்வு செய்ய வேண்டும்.
- வீட்டில் கலரிங் செய்வதற்குப் பதில், நிபுணரிடம் சென்று முயற்சிக்கலாம்.

முடி சாயங்களைப் பயன்படுத்துவதால் மேலே கூறப்பட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். சில ஆய்வுகள், முடி சாயத்தினால் ஏற்படும் விளைவுகளில் புற்றுநோயும் அடங்கும் எனக் கூறப்படுகிறது. எனினும், இதற்கான அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை. எனவே, ஹேர் டையிங் அல்லது ஹேர் கலரிங் பயன்படுத்துவதற்கு முன், அனைத்து பக்க விளைவுகளையும் கருத்தில் கொண்டு முடிவெடுப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Cinnamon for hair : அடர்த்தியான கூந்தலை பெற இலவங்கப்பட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க!
Image Source: Freepik