$
Housefly Disease: சாலையோர உணவுகளை விரும்பிச் சாப்பிடாதவர் மிக சொர்ப்பம் என்றே சொல்லலாம். என்னதான் கார், பங்களா என வாழ்ந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு சாலையோர ஃபுட் ஃபேவரட்தான். பாதுகாப்பாக விற்கும் சாலையோர கடைகள் ஒருபுறம் இருந்தாலும் சுகாதார வழிகளை பின்பற்றாமல் இயங்கும் சாலையோர கடைகள் இருக்கத் தான் செய்கிறது.
ஈக்கள் மூலம் பரவும் நோய்கள்
நாம் இப்போது அந்த சாலையோரக் கடைகள் உணவுகள் குறித்து தான் பார்க்கிறோம். பொதுவாக சுகாதாரம் இல்லாத சாலையோர கடைகளில் ஏற்படும் பொதுவான பிரச்சனை உணவுப் பொருட்களின் மீது ஈக்கள் மொய்ப்பது தான். ஈக்கள் மூலம் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஈக்களால் என்னப்பா, இதில் என்ன இருக்கிறது என நீங்கள் சிந்திக்கலாம். இதனால் பல பிரச்சனைகள் இருக்கிறது.
ஏணைய வகை பாக்டீரியாக்கள்
ஈக்கள் மூலம் 351 வகையான பாக்டீரியாக்களும், வெயில் காலத்தில் வரும் நீல ஈக்கள் மூலம் 316 வகையான பாக்டீரியாக்களும் பரவுகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், ஈக்களால் பல ஆபத்தான கிருமிகள் வேகமாக பரவும்.
ஈக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பாக்டீரியாவை வேகமாக பரவச் செய்யும். ஈக்கள் தன்னுடைய இறக்கை, கால், ரோமங்கள் மூலம் என பாக்டீரியாக்களை பல வழிகளில் பரப்பும். ஈக்கள் வரம்பின்றி கழிவு, குப்பை, சாக்கடை என அனைத்து இடத்திலும் உட்காரும், அப்படியே மனிதர்கள் உண்ணும் உணவுப் பொருட்கள் மீதும் அமர்ந்து சுவைக்கும்.

ஈக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்
இதன்மூலம் ஈக்களின் பாக்டீரியாக்கள் நேரடியாக மனிதர்களுக்கு பரவும். இதோடு ஈக்கள் நேரடியாக மனிதர்களுக்கு ஏற்படும் புண்கள் மீதும் உட்காருகிறது. இதனால் பாக்டீரியாக்கள் மனித உடலில் வேகமாக பரவும். இதைப்போல் பல நோய்கள் ஈக்கள் மூலம் ஏற்படுகிறது. ஒரு ஆய்வின்படி சுமார் 65க்கும் மேலான நோய்கள் ஈக்கள் மூலமாக பரவுவதாக கூறப்படுகிறது.
ஈக்கள் அமர்ந்தால் அதை விரட்டிவிட்டு அப்படியே சாப்பிட்டுவிடுவோம். குறிப்பாக ஈக்கள் மூலம் பரவும் சால்மோனல்லா, ஈ-கோலி உள்ளிட்ட பாக்டீரியாக்களால் குடல் புண், ஆந்த்ராக்ஸ், காசநோய் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.
உலக சுகாதார அமைப்பு தகவல்
அதுமட்டுமில்லை ஈக்களால் ஏற்படும் நோய்களை உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. அதன்படி, இரைப்பை பிரச்சனை ஏற்படுத்தும் ஹெல்மித் தொற்று, ட்ரோகாமா, எபடமிக் போன்ற கண் பாதிப்புகள் மற்றும் சரும நோய், தொழுநோய் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.
ஈக்கள் தானே என்று சாதாரணமாக எடுக்கக் கூடாது. கொசுக் கடிக்கிறது, ஈக்கள் கடிக்கவில்லை அவ்வளவுதான் வித்தாயசம். இரண்டும் பாக்டீரியாக்கள் நோய்களை பாரபட்சமின்றி பரப்புகிறது. பாதுகாப்பான வாழ்க்கைக்கு சுகாதாரம் மிக முக்கியம்.
எனவே சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரமும் முக்கியம் என ஒருபக்கம் கருதினாலும் சுகாதாரம் என்பது மறுபுறம் மிக முக்கியம். உங்களுக்கு தெரிந்த சாலையோர வியாபாரிகள் இருந்தால் அவர்களுக்கு இந்த தகவலை பகிர்ந்து அறிவுறுத்துங்கள். சுகாதாரம் மிக மிக முக்கியம் என்று.
Image Source: FreePik