Mango Benefits For Hair: மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். குறிப்பாக மாங்காய். சாலையோர கடைகளில் மாங்காய்யை கீற்றாக வெட்டி மிளகாய் உப்பு தூவி வைத்திருப்பதை பார்த்தாலே எச்சில் ஊறும்.
மாங்காய் மீது ஆசை இருக்கும் பலருக்கும் அதன்மீது சிறிதளவு அச்சமும் இருக்கும். மாங்காயில் பல நன்மைகள் கொட்டிக் கிடக்கிறது, இதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. முதிர்ச்சி எதிர்ப்பு பண்புகள் இதில் உள்ளது. செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு இது உதவும். இரும்புச் சத்து உணவுகளின் இயற்கை ஆதாரங்களில் இது பிரதான ஒன்றாகும்.
இதையும் படிங்க: நிறைய தண்ணீர் குடிப்பதால் சருமம் பளபளப்பாக மாறுமா?
இதன் புளிப்புச் சுவையும், இதை உப்பு மிளகாய்த் தூள் போட்டும் சாப்பிடும் போது ஏற்படும் சுவையும் தனி. இதை எதனுடனும் ஒப்பிட முடியாது. மாங்காயில் பல நன்மைகள் உள்ளது என்பது அனைவருக்கும் ஆனால் முடி வளர்ச்சிக்கு இது பெரும்பங்கு வகிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
முடிக்கு மாங்காய்யை பயன்படுத்துவது எப்படி?
மாங்காயில் தலைமுடிக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளது. கொலாஜன் உற்பத்திக்கு வைட்டமின் சி என்பது இன்றியமையாத ஒன்று. இது உங்கள் தலைமுடியை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். முடி உடைவதில் இருந்து பாதுகாக்க இது உதவுகிறது. வைட்டமின் சி அளவை பெற தினசரி ஓரிரு துண்டுகளை மாங்காய் சாப்பிடுங்கள்.
ஜிங்க் சக்தி நிரம்பியுள்ளது
ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு ஜிங்க் மிக முக்கியம். இது உங்கள் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மேலும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இது உதவும். தினசரி ஓரிரு துண்டுகள் மாங்காய்யை சாப்பிடலாம் அல்லது நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஸ்மூத்தியில் சில துண்டுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
வைட்டமின் ஏ-வின் நல்ல மூலமாகும்
ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ முக்கியமானது. இது உங்கள் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். தினசரி ஓரிரு துண்டுகள் மாங்காய்யை சாப்பிடலாம் அல்லது நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஸ்மூத்தியில் சில துண்டுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
பொடுகைத் தடுக்க உதவும்
மாங்காயில் இருக்கும் வைட்டமின் சி, உங்கள் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மேலும் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட இது உதவும். தினசரி ஓரிரு துண்டு மாங்காய்யை சாப்பிடுவது என்பது பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட இது உதவும். மாங்காயை நன்கு அறைத்து உச்சந்தலையில் தடவி 20 நிமிடங்கள் விட்டு அதன்பின் கழுவவும்.
மாங்காய் உங்கள் தலைமுடியை சீரமைக்க உதவும்
மாங்காயில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளது. இது உங்கள் தலைமுடியை சீரமைக்க உதவும். மாங்காயை அரைத்து உங்கள் தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் ஊறவிடவும். பின் அதை கழுவவும் அல்லது நீங்கள் அப்ளை செய்யும் ஹேர் மாஸ்க்கில் சில துண்டு மாங்காய் சேர்க்கவும்.
மாங்காய்யை எப்படி சாப்பிட்டால் தலைமுடிக்கு நல்லது?
மாங்காய்யை உங்கள் முடிக்கு நன்மை பயக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. மாங்காய் உங்கள் தலைமுடிக்கான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு முடி உதிர்தலையும் தடுக்கும்.
இதில் உள்ள வைட்டமின் சி, முடி வளர்ச்சிக்கு மிகுந்த நல்லதாகும். ஆரோக்கியமான முடிக்கு தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் இ ஆகியவை இதில் உள்ளன. முடி வளர்ச்சிக்கு தேவையும் இரும்புச் சத்தும் இருக்கிறது.
ஹேர் மாஸ்க்காகவும் அப்ளை செய்யலாம். மாங்காய்யை பிசைந்து அதை தலைமுடியில் தடவவும். சுமார் 30 நிமிடம் அப்படியே தலைமுடியில் ஊறவிட்டு பின் கழுவவும். இது முடிக்கு மிகவும் நல்லது.
பொடுகு வராமல் தடுக்கிறது
இயற்கையாக நிகழும் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இதில் உள்ளன. உச்சந்தலை நோய்களை தடுக்க மாங்காய் மிக பயனுள்ளதாக இருக்கும். தலையில் பொடுகு ஏதும் ஏற்படாமல் இது தடுக்க உதவுகிறது.
இதையும் படிங்க: குளிர்கால உதடு பராமரிப்பு முறைகள் - உங்கள் உதடுகளை இளஞ்சிவப்பாகவும், மென்மையாகவும் மாற்ற 8 சூப்பர் டிப்ஸ்
முடியின் ஆரோக்கியம் மேம்படும்
பச்சை மாங்காயில் வைட்டமின் இ உள்ளது. உங்கள் தலைமுடியின் நிலையை மேம்படுத்த இது உதவுகிறது. இது முடி சேதமடையும் வாய்ப்பை குறைக்கிறது. உச்சந்தலையில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை தடுக்க உதவுகிறது.