Twins Baby: இரட்டை குழந்தைகளை வளர்க்கும் போது இந்த விஷயங்களை மறக்காதீர்கள்!

  • SHARE
  • FOLLOW
Twins Baby: இரட்டை குழந்தைகளை வளர்க்கும் போது இந்த விஷயங்களை மறக்காதீர்கள்!

இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சலுகைகளை வழங்க பெரிதும் மெனக்கெடுகிறார்கள். ஒரு குழந்தையை மட்டும் புறக்கணிக்கும் பட்சத்தில் அவர்கள் எதிர்மறையான தாக்கத்தை எதிர்கொள்கின்றனர். இரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை குறித்து பார்க்கலாம்.

இரட்டை குழந்தைகளை வளர்க்க சிம்பிள் டிப்ஸ்

எந்தவொரு குழந்தையையும் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் எப்போதும் பரிந்துரைக்கின்றனர். அதேபோல வீட்டில் இரட்டைக் குழந்தைகள் இருந்தால், அவர்களை ஒருவரோடு ஒருவர் ஒப்பிடுவது மிக தவறான விஷயம். ஆனால் இந்த தவறுகளை தங்களையும் அறியாமல் பெரும்பாலான பெற்றோர்கள் செய்கின்றனர். ஒரு குழந்தையை மட்டும் புகழ்வதால் மற்றொரு குழந்தைக்கு அந்த குழந்தை மீது வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

பல சமயங்களில், ஒப்பிடுவதால் குழந்தைகள் தங்கள் சொந்த சகோதர சகோதரிகளை விரும்பாமல் வெறுக்கத் தொடங்குகிறார்கள். இது நிகழாமல் தடுக்க, உங்கள் குழந்தைகளை ஒருபோதும் ஒப்பிடக்கூடாது.

ஆர்வத்துக்கு மதிப்பீடு கொடுக்கவும்

இரட்டை குழந்தைகள் குறித்து பெற்றோர்கள் பொதுவாக நினைப்பது, இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரியான விஷயங்களை விரும்புவார்கள், ஒரே குணாதிசயங்கள் கொண்டிருப்பார்கள் என்று. ஆனால் இதற்கு சாத்தியம் மிகக் குறைவு. குழந்தைகள் இரட்டையர்களாக இருந்தாலும், அவர்கள் வெவ்வேறு குணாதிசயங்களை கொண்டிருக்கின்றனர். அதேபோல் அவர்களின் ஆர்வங்களும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும். இரண்டு குழந்தைகளின் ஆர்வத்தையும் தனித்தனியே அறிந்த அதை ஊக்கப்படுத்துவது மிக முக்கியம்.

பொறுப்புகளை பகிர்ந்து கொடுங்கள்

குழந்தைகள் இரட்டைக் குழந்தைகளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், வீட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்திருக்க வேண்டும். இரட்டை குழந்தைகள் உடல் ரீதியாக பலவீனமாக இருப்பார்கள். இந்த குழந்தைகளை பெற்றோர்கள் அதிகம் கவனித்துக் கொள்ள வேண்டும். இதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பொதுவாக கூறாமல், தனித்தனியே பொறுப்புகளையும் வேலைகளையும் பிரித்துக் கொடுக்க வேண்டும். அதேசமயம் குழந்தைகளுக்கு பொறுப்புகளை சமமாக பிரித்துக் கொடுங்கள்.

பகிர்ந்துக் கொடுக்க கற்றுக் கொடுங்கள்

இரட்டை குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுப்பதை கற்றுக் கொடுப்பது நல்லது. சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்கின்றனர். ஆனால் சில பெற்றோர்கள் பகிர்ந்து கொடுக்கும் விஷயங்களை கற்றுக் கொடுக்க மறுக்கிறார்கள். இரட்டை குழந்தைக்கு இது மிக முக்கியமான விஷயம். இப்படி செய்வது இருவரையும் ஒருங்கிணைந்து வளர மிக உதவியாக இருக்கும்.

Image Source: FreePik

Read Next

Summer Baby Care Tips: கோடை வெப்பத்திலிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது?

Disclaimer

குறிச்சொற்கள்