Doctor Verified

இரவில் உடலில் தோன்றும் 5 எச்சரிக்கை அறிகுறிகள்.. சிறுநீரக சேதத்தைக் குறிக்கும் சமிக்ஞைகள்.!

சிறுநீரகங்கள் சேதமடையும் போது, உடல் சில அறிகுறிகளை இரவு நேரத்தில் வெளிப்படுத்தும். அவை என்ன அறிகுறிகள் என்று நிபுணர் இங்கே விளக்குகிறார். படித்து பயன் பெறவும்.
  • SHARE
  • FOLLOW
இரவில் உடலில் தோன்றும் 5 எச்சரிக்கை அறிகுறிகள்.. சிறுநீரக சேதத்தைக் குறிக்கும் சமிக்ஞைகள்.!


“பலர் சிறுநீரக நோயின் அறிகுறிகளை கவனிக்காமல், அது கடுமையான நிலையில் தான் மருத்துவரை அணுகுகிறார்கள். ஆனால் உண்மையில், சிறுநீரக நோய்கள் ஆரம்பத்திலேயே சில சைகைகளை அனுப்பும், குறிப்பாக இரவில்” என ஹைதராபாத்தில் CARE மருத்துவமனைகளின் மூத்த சிறுநீரக நிபுணர், டாக்டர் ரத்தன் ஜா எச்சரிக்கிறார்.

இரவில் காணப்படும் 5 முக்கிய சிறுநீரக நோய் அறிகுறிகள்

இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்

ஒவ்வொரு இரவும் எழுந்து சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை இருந்தால், அது கவனிக்கப்பட வேண்டிய சிக்னல். சிறுநீரகங்கள் நன்றாக செயல்பட்டால், உடல் திரவத்தை பகலில் வெளியேற்றும். ஆனால் அவை பாதிக்கப்பட்டால், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும். இது சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப அறிகுறி ஆக இருக்கலாம்.

home-remedies-for-urinary-infection-main

கால்களில் வீக்கம்

காலையில் கண்கள் வீங்கியிருப்பது அல்லது பாதங்கள் புடைத்திருப்பது வெறும் உப்புசம் காரணமாக அல்ல. சிறுநீரகங்கள் திரவத்தை சரியாக வடிகட்ட முடியாதபோது, அது உடலில் தேங்கி, இரவில் முகத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

இரவில் தோல் அரிப்பு

இரவில் அதிக அரிப்பு, தோல் வறட்ச்சிஅல்லது கால்களில் ஊர்ந்துகொண்டு செல்லும் உணர்வு ஏற்படுகிறதா? அது சிறுநீரகங்கள் நச்சுகளை சரியாக அகற்ற முடியாததற்கான விளைவு ஆகும். இது Restless Leg Syndrome எனப்படும் நிலைக்கு வழிவகுக்கும், இது பெரும்பாலும் மேம்பட்ட சிறுநீரக நோயுடன் தொடர்புடையது.

இரவு நேர சோர்வு மற்றும் தூக்கமின்மை

போதுமான தூக்கத்துடன் இருந்தும் காலை எழும்போது சோர்வாக உணர்வது சிறுநீரக பிரச்சனையின் மறைமுக அறிகுறி ஆகும். சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது, நச்சுகள் இரத்தத்தில் தங்கி, உடல் மீள்நிலை பெற முடியாமல் போகிறது. இதனால் தூக்கம் பூரணமாக அமையாது.

நுரையுள்ள சிறுநீர் அல்லது நிறம் மாறுதல்

நுரையுடன் கூடிய சிறுநீர், குறிப்பாக தொடர்ந்து இருந்தால், அது சிறுநீரில் புரதம் கசிவதைக் குறிக்கும்.இது சிறுநீரக சேதத்தின் முக்கிய அடையாளம். இதனைப் புறக்கணிப்பது ஆபத்தாக அமையும்.

இந்த பதிவும் உதவலாம்: கிட்னியை க்ளீன் செய்ய இந்த 8 விஷயங்களைப் பின்பற்றுங்க.. மருத்துவர் ஹன்சாஜி தரும் விளக்கம்

இந்த அறிகுறிகளை புறக்கணிக்கக் கூடாததென்பதற்கான காரணம்

சிறுநீரகங்கள் ஒரே இரவில் செயலிழக்காது. ஆனால், சிறுநீரக நோய் மெதுவாக முன்னேறி, தாமதமாக கண்டறியப்பட்டால் சிகிச்சை கடினமாகிறது. இரவில் தோன்றும் சிறிய மாற்றங்கள் கூட முன்கூட்டியே நோயை கண்டறிய உதவும் வாய்ப்பு என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

“இந்த அறிகுறிகள் அனைத்தும் சிறுநீரக நோயை உறுதிப்படுத்தாது. ஆனால் அவை முன்கூட்டிய எச்சரிக்கை சைகைகள். குறைந்தபட்சம் ஒரு சிறுநீர் பரிசோதனை மற்றும் சிறுநீரக செயல்பாட்டு இரத்தப் பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்,” என்று டாக்டர் ரத்தன் ஜா கூறுகிறார்.

Main

சிறுநீரக ஆரோக்கியத்தைக் காக்க சில வழிகள்

* போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்

* உப்பு மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும்.

* இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நிலைகளை கவனிக்கவும்.

* வலி நிவாரணிகளை (painkillers) அடிக்கடி பயன்படுத்தாதீர்கள்.

* உடலில் வீக்கம், அரிப்பு, சோர்வு போன்றவை தொடர்ந்து இருந்தால் உடனே நிபுணரை அணுகுங்கள்.

இறுதியாக..

சிறுநீரக நோய் பெரும்பாலும் “silent killer” என அழைக்கப்படுகிறது. அது மெதுவாக வளர்ந்து, கடைசி கட்டத்தில்தான் தெளிவாக தெரியும். எனவே, இரவு நேரத்தில் தோன்றும் சிறிய மாற்றங்களும் ஒரு பெரிய எச்சரிக்கை ஆக இருக்கலாம். அவற்றைப் புறக்கணிக்காமல், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது உயிர் காக்கும் முடிவாக அமையும்.

(மறுப்பு: இந்தக் கட்டுரை மருத்துவ நிபுணரின் கருத்துகளின் அடிப்படையில் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டது. இது மருத்துவ ஆலோசனையாகக் கருதப்படக் கூடாது. ஏதேனும் உடல்நலப் பிரச்சனை அல்லது சந்தேகம் இருந்தால், தயவுசெய்து தங்களின் மருத்துவரை நேரடியாக அணுகுங்கள்.)

Read Next

அமிலத்தன்மை தலைச்சுற்றலை ஏற்படுத்துமா? உண்மையை நிபுணர் விளக்குகிறார்!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Nov 03, 2025 10:55 IST

    Modified By : Ishvarya Gurumurthy
  • Nov 03, 2025 10:55 IST

    Modified By : Ishvarya Gurumurthy
  • Nov 03, 2025 10:55 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்