Beauty Benefits of Using Ice Cubes On Skin: பருக்கள் இல்லாத அழகான மற்றும் தெளிவான சருமம் யாருக்குத்தான் பிடிக்காது. பண்டிகை காலங்களில் நாம் அழகாக தெரிய பெரும்பாலும் பார்லருக்கு சென்று பணம் செலவு செய்து நமது அழகை பராமரிப்போம். ஆனால், அவை வெறும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே நமக்கு உதவும். மேலும், அவர்கள் பயன்படுத்தும் கிரீம்களில் உள்ள கெமிக்கல் நமது சருமத்திற்கு தீனி விளைவிக்கும்.
எனவே, எப்போதும் சருமத்திற்கு இயற்கையான பொருட்களை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். உங்கள் முகத்திற்கு வித்தியாசமான பொலிவைக் கொண்டுவர விரும்பினால், வீட்டில் உள்ள பச்சை பால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம், வெறும் 1 டீஸ்பூன் பச்சை பாலை உங்கள் முகத்தில் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் பல நன்மைகளைப் பெறலாம். பச்சை பாலை பல வழிகளில் சருமத்தில் பயன்படுத்தலாம். ஆரோக்கியமான சருமத்தை பெற, பச்சை பாலை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : நிறைய தண்ணீர் குடிப்பதால் சருமம் பளபளப்பாக மாறுமா?
பச்சை பால் சருமத்திற்கு நல்லதா?

பச்சை பாலில் அதிக அளவு புரதம் உள்ளது, இது முகத்தை இறுக்கமாக்க உதவுகிறது. இதனால், முக நிறம் தெளிவாகவும், பளபளப்பாகவும் தோன்றும். பச்சை பாலில் அதிக கொழுப்பு உள்ளடக்கம் உள்ளது,இதை ஒரு மாய்ஸ்சரைசராகவும் பயன்படுத்தப்படலாம். பச்சை பால் தோல் வறட்சியை குறைத்து, நிறத்தை மேம்படுத்துகிறது.
முகத்தில் பச்சை பாலை எப்படி பயன்படுத்துவது?

பளபளப்பான சருமத்திற்கு பச்சை பாலை பயன்படுத்தலாம். இதற்கு, பச்சை பாலை குளிர்சாதன பெட்டியில் வைத்து உறைய வைக்கவும், பின்னர் அதை உங்கள் முகத்தில் தடவவும். மேலும் பலனளிக்க, அதில் நீங்கள் பல வகையான பொருட்களை கலக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : ஒளிரும் சருமம் வேண்டுமா? இந்த 10 அற்புதமான பழங்களை முயற்சிக்கவும்
தேவையான பொருட்கள்:
பச்சை பால் - 1 கப்.
தேன் - 2 ஸ்பூன்.
ரோஸ் வாட்டர் - 1 தேக்கரண்டி.
செய்முறை:
முதலில், ஒரு ஐஸ் கியூப் தட்டில் பச்சை பாலை ஊற்றவும்.
உங்கள் தோல் வகையைப் பொறுத்து தேன் மற்றும் ரோஸ் வாட்டரையும் சேர்க்கலாம்.
சில மணி நேரம் உறைய வைத்து பயன்படுத்தவும்.
பச்சைப் பால் மசாஜ்

பல வழிகளில் பச்சை பாலை சருமத்தில் பயன்படுத்தலாம், குறிப்பாக அதை வைத்து சருமத்தை மசாஜ் செய்வது நல்லது. இது சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்குகிறது மற்றும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் இலகுவாக மாறும். சருமத்தின் இரத்த ஓட்டமும் மேம்படுகிறது, இது நிறத்தை மேம்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம் : மஞ்சள் மற்றும் பால் கொண்டு முகத்தை சுத்தம் செய்வது எப்படி?
- இதற்கு, பருத்தி உருண்டையை பச்சை பாலில் நனைக்கவும்.
- அதை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும்.
கண்களைச் சுற்றிலும் தடவலாம். - ஒரு நாளைக்கு ஒரு முறை பச்சைப் பால் கொண்டு முகத்தை மசாஜ் செய்யவும்.
Pic Courtesy: Freepik