$
How to Make Tomato Face Pack at Home: தெளிவான மற்றும் பளபளப்பான சருமம் யாருக்குத்தான் பிடிக்காது. ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி தங்களின் சருமத்தை பராமரிக்க தவறுவதில்லை. ஏனென்றால், தங்களை அழகாக காட்டவே விரும்புகிறார்கள். ஆண்கள் தங்கள் உடல் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருந்தாலும், முக பராமரிப்பில் அவ்வளவு கவனம் செலுத்துவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால், ஸ்கின் டான், முகப்பரு, கரும்புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் சரும வறட்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
பெரும்பாலும், ஆண்கள் தங்கள் சருமத்தை பராமரிக்க, சந்தைகளில் கிடைக்கும் அழகு சாதனப் பொருட்களை மட்டுமே சார்ந்து இருப்பார்கள். ஆனால், அது அவர்களுக்கு சிறந்த முடிவையும் கொடுப்பதில்லை. ஒருவேளை, நீங்கள் உங்கள் சருமத்தை இயற்கையான முறையில் பராமரிக்க வொரும்பினால் உங்களுக்கான ஒரு உதவிக்குறிப்பை நாங்கள் கூறுகிறோம். நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி உங்கள் சருமத்தை பாதுகாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்த பதிவும் உதவலாம் : Causes of Pimples: முகத்தில் பருக்கள் வர முக்கிய காரணம்!
ஆம், தக்காளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை சருமத்தில் உள்ள பல பிரச்சனைகளை நீக்கி, சருமத்தை ஆரோக்கியமாக்குகிறது. இது சருமத்துளைகளை சுருக்கி கருவளையத்தை குறைக்கிறது மற்றும் பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது. பல்வேறு தோல் பிரச்சனைகளை தீர்க்கும் ஆண்களுக்கான தக்காளி ஃபேஸ் பேக் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தக்காளி மற்றும் தேன் ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
தக்காளி ஜூஸ் - 3 ஸ்பூன்.
தேன் - 1 ஸ்பூன்.
தக்காளி மற்றும் தேன் ஃபேஸ் பேக் செய்முறை:
தக்காளி மற்றும் தேன் ஃபேஸ் பேக் செய்ய, அனைத்து பொருட்களையும் கலந்து பேஸ்ட்டை தயார் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்னர், 20 நிமிடங்கள் அப்படியே விடவும். அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த பேக் தழும்புகளை குறைப்பது மட்டுமின்றி சருமத்தை பளபளப்பாகவும் மாற்றுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : ஒளிரும் சருமம் வேண்டுமா? இந்த 10 அற்புதமான பழங்களை முயற்சிக்கவும்
தக்காளி மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
தக்காளி ஜூஸ் - 2 ஸ்பூன்.
தயிர் - 1 ஸ்பூன்.
ஓட்ஸ் - 1 ஸ்பூன்.
தக்காளி - தயிர் ஃபேஸ் பேக் செய்முறை?
தக்காளி மற்றும் தயிர் ஃபேஸ் பேக் செய்ய, அனைத்து பொருட்களையும் மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும். பின்னர், இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர வைக்கவும். அதன் பிறகு முகத்தை தண்ணீரில் கழுவவும். இந்த பேக் சருமத்தை ஈரப்பதமாக்குவது மட்டுமின்றி கரும்புள்ளிகளையும் குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம் : இனி காசு கொடுத்து வாங்க தேவையில்லை. உங்கள் முகப்பொலிவிற்கான சிறந்த நைட் கிரீமை வீட்டிலேயே செய்யலாம்
தக்காளி மற்றும் அலோ வேரா ஃபேஸ் பேக்
தேவையான பொருள்:
தக்காளி சாறு - 3 ஸ்பூன்.
கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன்.
தக்காளி மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக் செய்முறை:
தக்காளி மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக் செய்ய, இரண்டு பொருட்களையும் கலந்து பேஸ்ட்டை தயார் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர வைக்கவும். அதன் பிறகு முகத்தை கழுவவும். இந்த பேக் சருமத்தை பளபளப்பாக்குகிறது, மந்தமான தன்மையை குறைக்கிறது மற்றும் கருவளையங்களில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
Pic Courtesy: Freepik
தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.