$
Can rice water remove sun tan: ஒவ்வொருவரும் தங்கள் சருமத்தை அழகாகவும், பளபளப்பாகவும் மாற்ற அனைத்து வகையான முயற்சிகளையும் செய்கிறார்கள். என்னதான் சந்தையில் விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி உபயோகித்தாலும் நமக்கு சரியான தீர்வு கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக சரும பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். ஏனென்றால், இந்த தயாரிப்புகளில் பெரும்பாலானவை ரசாயனங்கள் கொண்டவை.
இவற்றை பயன்படுத்துவதால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படலாம். எனவே, உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் எப்போதும் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது நல்லது. அந்தவகையில், வெயில் தாக்கத்தால் சருமம் கறுப்பாவதை சரி செய்யும் சில குறிப்புகள் பற்றி நாங்கள் கூறுகிறோம்.
இந்த பதிவும் உதவலாம் : இயற்கை முறையில் மேக்கப்பை அகற்ற வேண்டுமா? உங்களுக்கான வழிகள் இதோ!
நாம் பொதுவாக தலை முடிக்கு பயன்படுத்தப்படும் அரிசி கழுவிய நீர், சரும பிரச்சினைகளையும் நீக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், வெயிலால் ஏற்படும் சரும கருமையை நீக்க இது உதவும். சான் டானை நீக்க அரிசி கழுவிய நீரை எப்படி பயன்படுத்துவது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அரிசி நீரை சருமத்தில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

அரிசி நீரில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதை சருமத்தில் சரியான முறையில் பயன்படுத்தினால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அரிசி நீரில் முதுமையைத் தடுக்கும் தன்மை உள்ளது. இது வயதாவதால் ஏற்படும் சரும பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். மேலும், இது தொழில் உள்ள கருமையை நீக்கி, தழும்புகள் மற்றும் முகப்பரு போன்றவற்றை தடுக்கிறது. உங்கள் முகத்தை தெளிவாகவும், பளபளப்பாகவும் மாற்ற இதைப் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம் : உங்கள் சருமத்தை இப்படி பராமரித்தால், 30 வயதிற்கு பிறகும் கூட உங்கள் சருமம் இளமையாகவும், பளபளப்புடனும் இருக்கும்
அரிசி நீரில் உள்ள பண்புகள் கடுமையான சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் டானை நீக்க உதவுகிறது. ஸ்கின் டான் மற்றும் தோல் மீது அழுக்கு குவிவதால், உங்கள் தோல் நிறம் கெட்டுவிடும். இந்நிலையில், அரிசி நீரைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நார்ச்சத்து, வைட்டமின், மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் அரிசி நீரில் காணப்படுகின்றன. அரிசி நீரில் உள்ள பண்புகள் சருமத்தை இயற்கையான முறையில் சுத்தப்படுத்துகிறது.
ஸ்கின் டானை நீக்க அரிசி நீரை எவ்வாறு பயன்படுத்துவது?

நாம் பல வழிகளில் அரிசி தண்ணீரை முகத்தில் பயன்படுத்தலாம். ஆனால், அதை சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே உங்கள் சருமத்திற்கு பலன் தரும். வெயிலால் ஏற்படும் ஸ்கின் டானை நீக்க, முதலில் அரிசி தண்ணீரை சரியான முறையில் தயாரிக்க வேண்டும். இதற்கு அரிசியை தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். அரிசி வெந்ததும் தண்ணீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேமித்து வைக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : சருமப் பொலிவு அதிகரிக்க வீட்டிலேயே ஸ்கின் பாலிஷிங் செய்வது எப்படி?
இப்போது இந்த அரிசி தண்ணீரை உங்கள் முகத்தில் டோனராக பயன்படுத்தவும். இது தவிர, பருத்தி பஞ்சின் உதவியுடன் முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். அரிசி நீரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகம் பொலிவடையும்.
Pic Courtesy: Freepik