$
Benefits of cardamom for skin: அழகான சருமத்தைப் பெற யாருக்குத் தான் விருப்பம் இருக்காது. ஆனால் இன்றைய நவீனகால வாழ்க்கை முறைகள், மோசமான உணவுமுறைகள் உடல் ஆரோக்கியத்துடன் சரும ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இதனால் சருமத்தில் வறட்சி, வெடிப்பு, கரும்புள்ளிகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது. இதனைத் தவிர்க்க பலரும் சருமத்திற்கு சந்தையில் கிடைக்கும் பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், சில சமயங்களில் இதில் இரசாயனப் பொருள்கள் கலந்திருக்கலாம்.
இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட, இயற்கையான வீட்டு வைத்தியங்களைக் கையாள்வது நல்லது. நம் வீடுகளில் சமையலறையில் பயன்படுத்தப்படும் சில பொருள்களும் சரும ஆரோக்க்கியத்திற்கு முக்கியத்துவம் தருகிறது. அதன் படி, சருமத்தைப் பராமரிக்க நறுமணப் பொருளான ஏலக்காய் உதவுகிறது. இதில் சருமத்தைப் பொலிவாக்க ஏலக்காய் தரும் நன்மைகள் மற்றும் அதை சருமத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கருவளையம் சீக்கிரம் மறையணுமா? இந்த ஒரு ரெமிடி மட்டும் யூஸ் பண்ணுங்க
சருமத்திற்கு ஏலக்காய் பயன்படுத்துவது எப்படி?
சரும பராமரிப்பில் ஏலக்காயை பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தலாம். இதில் சருமத்திற்கு ஏலக்காயை பயன்படுத்தும் முறை குறித்து காணலாம்.
தேன் மற்றும் ஏலக்காய் மாஸ்க்
தேவையானவை
- ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
- தேன் - 2 தேக்கரண்டி
செய்முறை
- முதலில் இந்த பொருள்களை ஒரு பாத்திரத்தில் கலக்க வேண்டும்.
- இந்த கலவையை மெதுவாக மசாஜ் செய்யலாம்.
- இதை 10-15 நிமிடங்கள் வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.

ஏலக்காய் ஃபேஸ் ஸ்க்ரப்
தேவையானவை
- ஏலக்காய் - 1 தேக்கரண்டி
- சர்க்கரை - 1 தேக்கரண்டி
- தேன் - 1 தேக்கரண்டி
செய்முறை
- முதலில் இந்த பேஸ்ட்டை உருவாக்கத் தேவையான பொருள்களைக் கலக்க வேண்டும்.
- குறிப்பாக கரடுமுரடான திட்டுகள் உள்ள பகுதிகளில் இதைத் தடவி, முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யலாம்.
- அதன் பின், வெதுவெதுப்பான நீரில் கழுவி உலர வைக்கலாம்.
- பிறகு சருமத்தை நீரேற்றமாக வைக்க மென்மையான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம்.
ஏலக்காய் ஃபேஸ் டோனர்
தேவையானவை
- அரைத்த ஏலக்காய் - 1 டீஸ்பூன்
- ரோஸ் வாட்டர் - 1 கப்
செய்முறை
- இந்த டோனர் தயார் செய்ய முதலில் ஏலக்காயை ரோஸ் வாட்டரில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- பிறகு இந்தக் கலவையை வடிகட்டி சுத்தமான கொள்கலனில் சேமிக்க வேண்டும்.
- காட்டன் பந்தைப் பயன்படுத்தி முகத்தில் டோனரைப் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ஸ்கின் ரொம்ப பளபளப்பா இருக்கணுமா? வைட்டமின் ஈ-யை இப்படி யூஸ் பண்ணி பாருங்க
ஏலக்காய் ஃபேஸ் பேக்
தேவையானவை
- ஏலக்காய் - அரை டீஸ்பூன்
- தயிர் - 2 தேக்கரண்டி
- ஓட்ஸ் - 2 தேக்கரண்டி
செய்முறை
- முதலில் இந்தப் பொருள்கள் அனைத்தையும் ஒரு பாத்திரம் ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும்.
- பின் இதை மெதுவாக முகத்தில் தடவலாம்.
- இந்தக் கலவையை 10-15 நிமிடங்கள் வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

சருமத்திற்கு ஏலக்காய் தரும் நன்மைகள்
- ஏலக்காயில் ஃபிளாவனாய்டுகள், பினாலிக் அமிலங்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளிட்ட பல்வேறு கலவைகள் நிறைந்துள்ளன. இந்த சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகிறது. மேலும் முன்கூட்டிய வயதாகும் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
- ஏலக்காயில் உள்ள வாசோடைலேட்டரி பண்புகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இந்த அதிகரித்த இரத்த ஓட்டம் தோலில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்ற உதவுகிறது. மேலும், தெளிவான, இளமையான சருமத் தோற்றத்தை ஊக்குவிக்கிறது.
- ஏலக்காயில் உள்ள ஏராளமான அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இவை ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதன் மூலம் சருமத்தில் ஏற்படும் எரிச்சலைக் குறைக்க உதவுகிறது.
- இதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக உதடுகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது வறட்சி, வெடிப்பு மற்றும் முன்கூட்டிய வயதாவதைத் தடுக்க உதவுகிறது.
- சருமத்திற்கு ஏலக்காய் பயன்படுத்துவது இறந்த சரும செல்களை வெளியேற்றி மென்மையான, ஒளிரும் சருமத்தைத் தருகிறது. இது கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி, சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: சருமத்தை ஜொலிஜொலிக்க வைக்கும் தேன் ஃபேஸ் மாஸ்க் செய்ய இந்த 5 பொருள்கள் போதும்!
Image Source: Freepik