Dandruff Home Remedies: பொடுகு பிரச்சனையை சாதாரணமாக எடுக்க வேண்டாம்!

  • SHARE
  • FOLLOW
Dandruff Home Remedies: பொடுகு பிரச்சனையை சாதாரணமாக எடுக்க வேண்டாம்!


Dandruff Home Remedies: பொடுகு என்பது பலரைத் தொந்தரவு செய்யும் முடி தொடர்பான பிரச்சனையாகும். இது பார்ப்பதற்கு சிறிய பிரச்சனையாக இருந்தாலும், அடுத்தடுத்து முடி தொடர்பான பல விளைவுகளை சந்திக்க வைக்கும். அரிப்பு, முடி உதிர்தல் போன்று அடுத்தடுத்து பிரச்சனை ஏற்பட்டு சிரங்கு, பருக்கள் போன்றவை உருவாகும். இந்த பொடுகுத் தொல்லை மிகவும் தீவிரமடையும் முன் குறைப்பது நல்லது. இதை சில வீட்டு வைத்தியம் மூலமாக சரி செய்யலாம்.

பொடுகு தொல்லையில் இருந்து விடுபட வீட்டு வைத்தியம்

பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபட, முடியை அவ்வப்போது சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். அதனால்தான் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிக்க வேண்டும். இல்லையெனில், முடியில் ஈரப்பதம் சிக்கி, பொடுகு பிரச்சனை ஏற்படும். எனவே அடிக்கடி குளிக்கவும்.

இதையும் படிங்க: சீசன் மாறும் போது முடி உதிர்கிறதா? கட்டுப்படுத்தும் வழிகள் இதோ உங்களுக்காக!

அதேபோல சிலர் தலையை மூடிக்கொள்கிறார்கள். ஆனால், வெளியில் செல்லும் போது, ​​மாசு ஏற்படும் போது மட்டுமே இதைச் செய்ய வேண்டும். தொடர்ந்து செய்வதால் தலையில் ஈரப்பதம் அதிகரிக்கும். எண்ணெய் பசையாக மாறி பொடுகு பிரச்சனை அதிகரிக்கிறது. இதற்குப் பிறகு எவ்வளவு ஷாம்பு, கண்டிஷனர் போட்டாலும் பிரச்னை தீரவில்லை. எனவே உங்கள் தலையில் அவ்வப்போது காற்று வருவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பலர் வீட்டில் இருக்கும் ஒரே சீப்பை பயன்படுத்துவது தான். பாகுபடின்றி சீப்பை அனைவரும் பயன்படுத்துவார்கள். பல்துலக்கும் பிரஷ் போல் சீப்பும் தனித்தனியாக இருக்க வேண்டும். ஒரே சீப்பை பயன்படுத்துவதால் ஒருவரது தலையில் உள்ள நோய்த்தொற்றுகள் மற்றும் வைரஸ்கள் சீப்புகளின் மூலம் மற்றவர்களுக்கு பரவும். அதேபோல் டவல்களை தனியாக வைத்திருப்பது நல்லது.

பொடுகு தொல்லை நீங்க எளிய வழிகள்

சிறிது பேக்கிங் சோடாவை எடுத்து ஈரமான கூந்தலில் தடவி இரண்டு நிமிடம் நன்றாக மசாஜ் செய்து பின் குளிக்கவும். இப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் பொடுகுத் தொல்லை குறையும். இருப்பினும், பேக்கிங் சோடாவை அதிகம் பயன்படுத்த வேண்டாம். சிறிய அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.

வினிகர்

வினிகரும் இந்தப் பிரச்சனையைக் குறைக்கும். அதற்கு, ஆறு ஸ்பூன் தண்ணீரில் 2 ஸ்பூன் வினிகரை கலக்கவும். இப்போது ஷாம்பு போட்ட பிறகு அந்தத் தண்ணீரில் தலையை அலசவும். வாரம் ஒருமுறை இப்படி செய்து வந்தால் பொடுகு பிரச்சனை விரைவில் குறையும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறுடன் புளிப்பு தயிர் கலந்து தலையில் தடவவும். பின் நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு மறைவது மட்டுமின்றி, கூந்தலும் பளபளப்பாக இருக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரும் பொடுகை குறைக்கும். இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஷாம்பு அல்லது தேங்காய் எண்ணெயில் கலக்கவும். இதை இரவு முழுவதும் தலையில் தடவி விட்டுவிடவும். அல்லது அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம். பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடவும் இந்த வைத்தியம் அற்புதமாகச் செயல்படுகிறது.

முடி பிரச்சனைகளுக்கு மற்றொரு நல்ல தீர்வு நெல்லிக்காய். உலர்த்திய பின் குளித்தால் முடி பிரச்சனைகள் நீங்கும். எனவே நீங்கள் இந்த மருந்தை தவறாமல் பயன்படுத்தலாம்.

உண்ணும் உணவும் முக்கியம்

உட்கொள்ளும் உணவில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் புரதங்கள் அதிகம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கீரைகள், காய்கறிகள், மீன்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் பொடுகு பிரச்சனை மட்டுமின்றி கூந்தல் பிரச்சனையும் பெருமளவு குறையும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். நொறுக்குத் தீனிகள், சர்க்கரை உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது. அதிகமாக மது அருந்துவது பொடுகுத் தொல்லையை ஏற்படுத்தும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே பிரச்சனையை குறைக்க நினைப்பவர்கள் அவற்றை தவிர்க்க வேண்டும்.

தலைக்கான ஊட்டச்சத்து

தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் மசாஜ் செய்ய வேண்டும். விரல்களால் மெதுவாக மசாஜ் செய்யவும். அதன் பிறகு வெந்நீரில் நனைத்த ஒரு டவலை போர்த்தி அரை மணி நேரம் வைக்கவும். குளித்த பின் முடிக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்.

வெந்தயத்தை தண்ணீர் அல்லது தயிரில் ஊறவைத்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை உச்சந்தலையில் தடவவும். அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் பொடுகுத் தொல்லை குறைவதுடன், கூந்தலும் வலுவாக வளரும். இருப்பினும், தலையில் இருந்து பேக்கை அகற்ற சிறிது நேரம் ஆகும். எனவே தண்ணீர் சேர்த்து நன்றாக மசாஜ் செய்து மெதுவாக சுத்தம் செய்யவும்.

தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும். இப்படி தினமும் 8 வாரங்கள் செய்து வந்தால் பொடுகு தொல்லை 68 சதவீதம் குறையும் என்கின்றனர் முடி நிபுணர்கள். கலப்பட எண்ணெய் அல்ல, சுத்தமான எண்ணெயைப் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதால் பிரச்சனை பெருமளவு குறையும்.

இதையும் படிங்க: இந்த 9 பழக்கங்கள் முடி ஆரோக்கியத்தை பாதிக்கும்!

இதுபோன் பல வழிகள் பொடுகு மற்றும் தலைமுடி பிரச்சனையை குறைக்க உதவும் என்றாலும் ஏதேனும் தீவிரத்தை உணரும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவதே நல்ல முடிவாகும்.

Image Source: Freepik

Read Next

Hair Straightening Effects: அடிக்கடி முடி ஸ்ட்ரெய்ட்னிங் செய்பவர்களா நீங்கள்? இத தெரிஞ்சிக்கோங்க

Disclaimer

குறிச்சொற்கள்