சிலரால் சிறுநீரை அடக்க முடியாது. நொடிகளில் கழிவறைக்கு ஓட வேண்டும். இல்லாவிட்டால் கசிந்துவிடும். சிலருக்கு இருமல் அல்லது தும்மும்போது சிறுநீர் வெளியேறும். இந்தப் பிரச்சனை பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது.
வயதுக்கு ஏற்ப இது அதிகரிக்கிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றனர். இந்த பிரச்னை ஏன் ஏற்படுகிறது? எப்படி குறைப்பது இங்கே காண்போம்.

பொதுவாக உடலில் உள்ள அசுத்தங்கள், மலம் மற்றும் சிறுநீர் வடிவில் வெளியேற்றுகிறது. சிறுநீர்க்குழாய்கள் இரத்தத்திலிருந்து நீர் மற்றும் அசுத்தங்களை வடிகட்டி சிறுநீர்ப்பையை அடைகின்றன. சிறுநீர் கழிக்கும் நேரம் வரும்போது, மூளையில் இருந்து வரும் சிக்னல் சிறுநீர்ப்பை தசைகளை அடைகிறது. அந்த தசைகள் பதிலளித்து சிறுநீர் கழிக்கின்றன. ஆனால், இந்த முழுமையான செயல்பாட்டில் வித்தியாசம் ஏற்பட்டால், சிறுநீர் கசிவு ஏற்படுகிறது.
இந்த பிரச்சனை ஏன் ஏற்படுகிறது?
சில சூழ்நிலைகளில், தேவைப்படும் போது சிறுநீர் கழிக்க முடியாது. பயணத்தில் இருக்கும் போது, ஏதாவது வேலை செய்யும்போது, சிறுநீர் வந்தாலும் அதை வலுக்கட்டாயமாக நிறுத்துகிறார்கள். எப்போதாவது ஒரு முறை என்றால் பரவாயில்லை. ஆனால், இந்த நிலை அதிகமாக இருந்தால், சிறுநீர்ப்பையை பாதிக்கும். இதனால் சிறுநீர் கசிவு பிரச்னை ஏற்படுகிறது.
இதையும் படிங்க: Urinary Infection Remedies: நீர்க்கடுப்பை சட்டென்று சரிசெய்ய எளிய வீட்டு வைத்தியம்!
சிறுநீர் கசியாமல் இருக்க இதை செய்யவும்
ஒரு நபர் ஆரோக்கியமாக இருக்க ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் வரை குடிக்க வேண்டும். உடல் உழைப்பு மற்றும் உடல் எடையைப் பொறுத்து இது மாறுபடும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், உங்கள் உடலில் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், நீங்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். போதிய அளவு தண்ணீர் அருந்தாததால் சிறுநீரின் செறிவு அதிகரித்து அடிக்கடி கழிவறைக்கு செல்ல நேரிடும்.
அதனால் தான் சிறுநீர் கழிக்காவிட்டாலும் 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக பாத்ரூம் செல்ல வேண்டும். இதனால் சிறுநீர்ப்பை காலியாகிவிடும் என்று கூறப்படுகிறது.
இதனை தடுப்பது எப்படி?
சிறுநீர் கசிவு பிரச்னை உள்ள பெண்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடை கட்டுக்குள் இருந்தால், இந்த பிரச்னை ஏற்படாது. மேலும், காபி, டீ போன்றவற்றை குறைவாக உட்கொள்ள வேண்டும்.