குழந்தை போல பட்டு போன்ற சருமத்திற்கு வெறும் மூன்று பொருள்கள் போதும்!

  • SHARE
  • FOLLOW
குழந்தை போல பட்டு போன்ற சருமத்திற்கு வெறும் மூன்று பொருள்கள் போதும்!

சரும ஆரோக்கியம்

உடலின் மிகப்பெரிய மற்றும் முக்கிய உறுப்புகளில் சருமத்தையும் கூறலாம். பொதுவாக சருமம் ஆனது தண்ணீர், புரதம், கொழுப்பு மற்றும் மினரல்களால் நிரம்பியதாகும். இது உடலுக்கு பாதுகாப்பு கவசமாகத் திகழ்கிறது. மேலும் உடலின் வெப்பநிலையை முறையாக பராமரிக்க உதவுகிறது. இது தவிர, சருமத்தில் உள்ள நரம்புகள் சூடு மற்றும் குளிர் போன்ற உணர்வுகளை உணரவைக்கிறது.

உடலில் சருமத்துடன் நகங்கள், தலைமுடி, வியர்வை சுரப்பிகள் மற்றும் எண்ணெய் சுரப்பிகள் போன்ற அனைத்தும் இணைந்துள்ளது. சருமம் மூன்று அடுக்குகளால் சூழப்பட்டுள்ளது. இதில் முதல் அடுக்கு எபிடெர்மிஸ் என்றும், நடு அடுக்கு டெர்மிஸ் என்றும், கீழ் அடுக்கு அல்லது கொழுப்பு அடுக்கு ஹெப்போடெர்மிஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Flaxseed Face Mask: முகத்தை மினுமினுக்க வைக்கும் ஆளிவிதை ஃபேஸ் மாஸ்க்! எப்படி தயார் செய்வது?

எபிடெர்மிஸ்

உடலைப் பாதுகாப்பதில் எபிடெர்மிஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அடுக்கானது உடலில் கிருமிகள் புகுந்து ரத்தத்தில் கலந்து தொற்றுக்கள் ஏற்படுத்துவதைத் தவிர்க்க உதவுகிறது. மேலும் இது மழை மற்றும் வெயிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இவை புதிய சரும செல்களை உருவாக்கவும், உடலின் நோயெதிர்ப்பு மண்டலமாகவும் செயல்பட்டு கிருமிகள் மற்றும் நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

இது சருமத்திற்குத் தேவையான நிறத்தைக் கொடுக்கிறது. இது தவிர எபிடெர்மிஸ்ஸில் உள்ள மெலனின்கள் தலைமுடி, கண்கள் மற்றும் சருமத்தின் நிறத்தை முடிவு செய்கிறது. அதிக மெலனின் உள்ளவர்களின் சருமம் எளிதில் நிறம் மாறக் கூடியதாகவும் மற்றும் கருப்பாகவும் மாறக்கூடியதாக அமைகிறது.

டெர்மிஸ்

இரண்டாவது அடுக்கான டெர்மிஸ் ஆனது சருமத்தின் தடிமனை நிர்ணயிக்கிறது. மேலும் இதில் எலாஸ்டின் மற்றும் கொலாஜன் போன்றவை உள்ளது. இந்த கொலாஜன் சரும செல்களை வலுவாக்க உதவுகிறது. டெர்மிஸ் மற்றும் எலாஸ்டினில் உள்ள புரதம் ஆனது சருமத்திற்கு நெகிழ்ச்சித் தன்மையை வழங்குகிறது. இதுவே முடி வளர காரணமாகிறது.

சருமத்தின் இரண்டாவது அடுக்கான டெர்மிஸில் உள்ள நரம்புகளானது அரிப்பு, எரிச்சல் மற்றும் சூடு என உணர்திறன்களைக் கொண்ட அடுக்காகும். இது சருமத்திற்குத் தேவையான எண்ணெய் உற்பத்திக்கும், வியர்வையையும் உருவாக்குகிறது. இவையே சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.

ஹைப்போடெர்மிஸ்

இது சருமத்தின் மூன்றாவது அடுக்காகும். இந்த அடுக்கில் உள்ள கொழுப்புகள், தசைகள் மற்றும் எலும்பை காயங்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இது விபத்துக்களின் போது பெரிதும் உதவக் கூடியதாக அமைகிறது. இது நடுப்பகுதியில் உள்ள நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களை உடல் முழுவதும் சருமத்துடன் இணைக்கிறது. இதில் கொழுப்பு அதிகம் இருக்கும் போது, அது உடல் வெப்பம் வெப்பம் மற்றும் குளிரைத் தாங்கக் கூடியதாக அமைகிறது.

இவ்வாறு சருமத்தின் மூன்று அடுக்குகளும் சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. சருமத்தை வெளியிலிருந்து பராமரிப்பதன் மூலம் குழந்தையின் பட்டு போன்ற சருமத்தைப் பெறலாம். அதே சமயம், உடலுக்கு உள்ளேயும் சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்க வேண்டும். இதில் சருமத்தின் பொலிவை அதிகரிக்க வீட்டிலேயே இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Homemade Rose Gel: சருமத்தை ஜொலி ஜொலிக்க வைக்கும் ரோஸ் ஜெல்! இப்படி வீட்டிலேயே தயார் செய்யுங்க

சருமத்தைப் பளபளபாக்கும் கலவை

தேவையானவை

  • வாசலின் - 2 டேபிள் ஸ்பூன்
  • கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன் (தொங்கும் சருமத்தை இறுக்கமாக்கும் தன்மை கொண்டது)
  • குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய பயன்படுத்தப்படும் எண்ணெய் – 2 ஸ்பூன் (இந்த எண்ணெய் சருமத்திற்குத் தேவையான நீர்ச்சத்தை வழங்கவும், முதுமை தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.

செய்முறை

  • சருமத்தைப் பொலிவாக்கும் கலவை தயார் செய்வதற்கு வாசலின், கற்றாழை ஜெல் மற்றும் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய பயன்படுத்தப்படும் எண்ணெய் போன்றவற்றைக் கலக்க வேண்டும்.
  • இதை நன்றாகக் கலந்து பாட்டில் ஒன்றில் அடைத்து வைத்துக் கொள்ளலாம்.
  • இதை தினமும் இரவு உறங்கச் செல்லும் முன் சருமத்தில் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பூசுவது சருமத்தைப் பளபளப்பாக வைக்கிறது.
  • இவ்வாறு தினமும் இரவில் கட்டாயம் செய்து வருவதன் மூலம் எதிர்பார்த்த பலன்களைப் பெறலாம்.

சருமத்தைப் பொலிவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க இது ஒரு இயற்கையான வழியாகும். எனினும் நாள்பட்ட அல்லது தீவிரமான சரும பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுக வேண்டும். மேலும் சருமத்திற்கு புதிய பொருள்களைப் பயன்படுத்தும் முன்னதாக பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: சருமம் ஜொலிஜொலிக்க தேனுடன் இந்த ஒரு பொருள் சேர்த்து யூஸ் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

ஜொலிக்கும் சருமத்திற்கு அரிசி மாவு மட்டுமே போதும்.. இதை பண்ணுங்க!

Disclaimer

குறிச்சொற்கள்