Sat Sep 12, 2026 | 12:06 AM IST

Wrinkle Treatment: இளம் வயதிலேயே ஏற்படும் முக சுருக்கத்தை நீக்க சூப்பர் வீட்டு வைத்தியம்!

Best Wrinkle Home Remedies: மாறி வரும் இன்றைய வாழ்க்கை முறை நம் ஆரோக்கியத்திற்கு பிரச்சனையாக மாறி வருகிறது. ஏனென்றால், நமது வாழ்க்கை முறை மாறிய உடனேயே நம் உடலில் பல மாற்றங்கள் வரத் தொடங்கும். இதனால், இளம் வயதிலேயே வயதான தோற்றம் ஏற்படும். இது நமது அழகை மட்டும் அல்ல, நமது தன்னம்பிக்கையையும் கெடுக்கும்.

இவற்றை மறைக்க பலர் ஒப்பனை பயன்படுத்துகின்றனர். ஆனால், சில வீட்டு வைத்தியங்கள் மூலம் இதற்கு நிரந்தரமாக தீர்வு காணலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? முக சுருக்கத்தை நீக்கி உங்களை என்றும் இளமையாக வைத்திருக்க உதவுக்கும் சில குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : மஞ்சள் மற்றும் பால் கொண்டு முகத்தை சுத்தம் செய்வது எப்படி?

முக சுருக்கத்தை நீக்கும் முட்டை ஃபேஸ் பேக்

இளமையிலேயே உங்கள் முகத்தில் சுருக்கங்கள் தோன்ற ஆரம்பித்திருந்தால், இதற்கு நீங்கள் முட்டையின் வெள்ளை கருவை கொண்டு ஃபேஸ் பேக் செய்து பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் சருமம் இறுக்கமாக இருப்பதுடன், பளபளப்பாகவும் தோன்றும்.

  • இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து மஞ்சள் பகுதியை நீக்கி வெள்ளைப் பகுதியை அதில் போட வேண்டும்.
  • பிறகு நன்றாக அடிக்கவும்.
  • இதை உங்கள் முகத்தில் தடவ வேண்டும்.
  • அது உலர்ந்ததும், உங்கள் முகத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • இதை பயன்படுத்தினால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறையும்.

குறிப்பு : வாரத்திற்கு ஒருமுறை இதை பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம் : ஒளிரும் சருமம் வேண்டுமா? இந்த 10 அற்புதமான பழங்களை முயற்சிக்கவும்

முகத்தில் கிரீன் டீ பயன்படுத்தவும்

நீங்கள் சரும சுருக்கம் பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால், இதற்கு கிரீன் டீ சரியான தேர்வு. இதனால் முகத்தில் உள்ள சுருக்கங்களும் குறையும். ஏனெனில், கிரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது.

  • இதற்கு முதலில் டீ பேக்கை கிண்ணத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • இப்போது இந்த தண்ணீரை குளிர வைக்கவும்.
  • பின் ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு முகத்தில் தடவவும்.
  • இரவு தூங்க செல்லும் முன் உங்கள் முகத்தில் இதை தடவவும்.
  • இப்படி செய்து வர சரும சுருக்க பிரச்சனை குறையும்.

இந்த முறைகளை முயற்சிக்கவும் மற்றும் முன்கூட்டிய சுருக்கங்களை அகற்றவும். தோல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட நீங்கள் வீட்டு வைத்தியங்களை தேர்வு செய்வது நல்லது.

Image Credit: freepik

Read Next

Tips For Glowing Skin : சருமம் எப்பவும் பொலிவுடன் இருக்க இந்த விஷயங்களை பின்பற்றுங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content